பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/815

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சினைட்டு 785

மட்டில் அவற்றின் செல்லுறைகளில் குழைவுத் தன்மை (plasticity), நெகிழ்வுத்தன்மை (elasticity) ஆகிய மாற்றங்களையும், புரோட்டோபிளாசத் தின் ஓட்டம் ஓட்டம் (protoplasmic streaming). சுவாச (respiration) அதிகரிப்பு, ரிபோநியுக்ளிக் அமி லங்கள் (ribonuclic acids), புரதங்கள் (proteins) உண்டாவதில் மாற்றங்கள் முதலானவைகளை ஆக் சின்கள் ஏற்படுத்துகின்றன. இதுபோன்று செல்லு றைப் பொருள்களான செல்லுலோஸ் (cellulose), பெக்ட்டின் (pectin) ஆகிய அடிப்படை அமைப்புப் பொருள்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. திசு வேறுபாடுறுதல் (differentiation), வளர்ச்சிக் கட்டுப்பாடு ஆகிய வளர்ச்சி நிகழ்ச்சிகளில் ஆக்சின் கள் பெரும் பங்கேற்கின்றன. இதற்கு எடுத்துக் காட்டாக, வேர் உண்டாவதையும், ஸைலம் மாறு பாடு அடைந்து தோன்றுவதையும் கூறலாம்.ஓர் உறுப்பு மற்றொன்றைப் பாதித்து ஏற்படுகின்ற இயைந்த வளர்ச்சியிலும் (correlative growth) ஆக் சின்கள் செயல்படுகின்றன. இதற்கு எடுத்துக் காட்டாக, நுனி ஆதிக்கம் (apical dominance) எனும் நிகழ்ச்சியைக் கூறலாம். இதில் தண்டின் நுனிமொட்டு கள், பக்கவாட்டிலிருக்கும் மொட்டுகளின் வளர்ச்சி யில் மாற்றங்கள் ஏற்படுவதைக் கூறலாம். மேலும் இது போன்று வெட்டுண்ட தண்டின் அடிப்பாகத்தி லிருந்து வேர்கள் உண்டாவதையும், இலைக்கோணங் களிலுள்ள மொட்டுகள், பூக்கள், சுனிகள் ஆகியவை உதிர்வதையும் (abscission), தூண்டல் சார் நாட்டங் களையும் (tropisms) (வேர்கள் நிலம் நோக்கி வளர் வது (geotropism), தண்டினங்கள் ஒளியின் பக்கம் வளைந்து வளர்வது (phototropism) ஆகியவற்றைக் கூறலாம். இந்த இயைந்த விளைவுகள் ஆக்சின்கள் உண்டாகும் முறை, அவற்றின் அழிவு, கடத் திரளுதல் (accumulation) ஆகியவற்றைப் தல், பொறுத்து ஏற்படுகின்றன. பயன்கள். போத்துகள் (cutting) நட்டுப் பாலிலா இனப்பெருக்கம் செய்வதில் ஆக்சின்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை போத்துகளில் வேர்கள் உண்டாவதைத் (rooting) தூண்டுகின்றன. இந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 35க்கு மேற்பட்ட ஆக்சின்கள் உருவாக்கப்பட்டு அவை ஏறக்குறைய 100 வெவ்வேறு வகைகளில் விவசாயத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. களைக் கொல்லிகளாக (herbicides) மிகப் பெருமளவில் ஆக் சின்கள் பயன்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, குளோரின் (chlorine) கலந்த 2, 4 டி (2, 4-dichlorophe noxyacetic acid: 2, 4-D) 2-4-5 (2-4-5 trichlorophe noxyacetic acidr 2, 4, 5-T) ஆகியவை களைக் கொல்லிகளாகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பயிர்களை மேம்படுத்தும் முறைகளில் அவை பயன்படுகின்றன. இவை எடுத்துக்காட்டாக, அ.க-2-50 ஆக்சினைட்டு 785 திசு வேறுபாடு அடைதல் (tissue differentiation), போத்துக்களில் வேர்களை உண்டாக்குதல், உறுப் புகள் உதிரச் செய்தல், (abscission) ஊக்குவித் தல் (promotion), தடைப்படுத்துதல் (inhibition), காய்கள் உண்டாக்குதல், பூக்களை உண்டாக்குதல், காய்கள் உண்டாகும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகும். போத்துகளில் வேர்களைத் தூண்டச் செய்து பாலிலா இனப்பெருக்கம் செய்வ தற்கு இண்டோல்பியூட்டிரிக் அமிலம் (indolebutyric acid: IBA), நாஃப்தலின் அசெட்டிக் அமிலம் ஆகி யவை பெரிதும் பயன்படுகின்றன. முதிர்ச்சியடை யாத நிலையில் ஆப்பிள்கள் உதிர்வதைத் தடுப்ப தற்கு 2-4-5 முக்குளோரோஃபீனாக்ஸிபுரோப்பியா னிக் அமிலம் (2-4-5 trichlorophenosy propionic acid) தெளிக்கலாம். 'பைன் ஆப்பிள்' என்ற ஒருவகை ஆரஞ்சுகள் உதிர்வதை 2, 4 - D மருந்தைத்தக்க சம யத்தில் தெளிப்பதால் தவிர்க்கலாம். தக்காளிப்பழங் களின் உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பீட்டா- நாஃப்தாக்சி அசெட்டிக் அமிலத்தைப் (Beta napth- thoxyacetic acid) பயன்படுத்துகின்றார்கள். ஆஞ் சௌ (anjou), பார்லெட் (bartlett) என்னும் இரு பேரிக்காய்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2, 4,5- முக்குளோரோஃனொக்சி புரோப்பியானிக் அமி லம் பயன்படுகின்றது. அன்னாசி மலர்களுண்டா வதை ஊக்குவிக்கின்றது. காலி மிர்னா அத்தியில் கனிகள் தோன்றுவதை விரைவுபடுத்துவதற்கு (15. 60 நாட்களில்) 2,4,5-T என்னும் ஆக்கினைத் தெளிக் கின்றார்கள். இந்த ஆக்சினைத் சோயா வேரைச் செடியின் மேல் தெளிப்பதனால் அதன் காய்களின் உற்பத்தி பெருகுகின்றது. நூலோதி 1. Addicott, T,F. in McGraw-Hill Encyclopaedia- Abscisic acid Vol. J. 1977. 2. Biggs, R. H. in McGraw Hill Encyclopaedia- Auxin, Vol. I. 1977. 3. Leopold, A. C., & Kriedemann, P. E. Plant Growth and Development (IInd ed) Tata McGraw-Hill Publ. Co., New Delhi, 1978. 4. Wilkins, M. B. (ed.) The Physiology of Plant Growth, Development and Responses, 1968. ஆக்சினைட்டு இக்கனிமம் கோடாநியைப் போன்ற வடிவைப் பெற் றிருப்பதால் ஆக்சினைட்டு எனப் பெயர் பெற்றது.