பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழல் அமுக்கிகள். இவை நேர் இடப்பெயர்ச்சி அமுக்கிகளின் மற்றொரு வகையாகும்.

நழுவு இதழ் வகை அமுக்கிகள். நழுவு இதழ் (sliding vane) வகை சுழல் அமுக்கிகளில் இதழ்களுக்கு நடுவில் வளிமம் அமையும். நுழைவாயின் திறப்புக்கு inlet opening) அருகில் இதழ்கள் செல்லும்போது இது நிகழும் (படம் 6). சுழலி மேலும் சுழலும்போது வளிமம் அடைபட்டுள்ள இடத்தில் பருமன் குறை யும். எனவே வளிமத்தின் அழுத்தம் வெளியேற்ற வாயை அடையும்வரை உயர்ந்துகொண்டே செல் லும். வெளியேற்ற வாயை அடைந்ததும் வளிமம் வெளியேறும்.

கட்ட அமுக்கம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத் துக்கு 5000 பருமன் அடிகள் (cubic feet) வரை இதன் வெளியேற்ற அளவு வேறுபடும். இவ்வகை அமுக்கிகளில் இதழ்களைச் சுற்றி அமைந்த வளையங் கள் இதழ்களை உருளையின் சுவர் மேல் உள்ள தாங்கியில் பொருத்தும். சில அமுக்கிகளி இத்ழ் உருளையின் தாங்கிகளில் நேரடியாகப் பொருத்தப் பட்டிரூக்கும்.

இணையிதழ் வகை அமுக்கிகள். இணையிதழ் களுள்ள (lobes) சுழல் அமுக்கியில் இரண்டு அல்லது மூன்று சுற்றகங்களுக்கு (rotors) இடையில் வளிமம் அமையும் (படம் 7). தூண்டகங்களின் (impeller

உறிஞ்சல்

நழுவு இதழ்

உருளை

சுழலி

2$னி

வெளியேற்றம்

படம் 6. நழுவிதழ் சுழல் அமுக்கி இயங்கும் முறை

வெளியேற்றம் நுழைவு நுழை பருமன், % bhp,% 140, 100 60 20 110 100 90 பரி திறன் பருமன் 20 40 60 80 100 அழுத்தஉயர்வு, %

படம் 7. இரட்டையிணை இதழ் அமுக்கியும் நிலையான வேகத்தில் அதன் செயல்திற வளைவுகளும்

வடிவமைப்பைப் பொறுத்துக் காற்று அல்லது எண்ணெய் அல்லது நீரால் இந்த அமுக்கி குளிரச் செய்யப்படுகின்றது. குறைந்த அழுத்தங்களுக்கு ஒரே கட்டம் போதுமானது. உயர் அழுத்தங்களுக்கு இரு

சுழற்சியின்போது அடைபட்டுள்ள வளிமப்பருமன் குறைக்கப்படுவதால் அழுத்தம் உயரும். வெளியேற்ற வாய் அருகே சுற்றகம் கடக்கும் போது வளிமம் வெளியேற்றப்படும். இதில் இரண்டு அல்லது மூன்று

52 அமுக்கிகள்