பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/827

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சிஜன்‌ உப்புக்கனிமங்கள்‌ 797

வேதியியல் உட்கூறு இரும்பு,மாங்கனிசு லித்திய பாஸ்பேட்டுகள் Li (Fe Mn) PO, ஆகும். இதன் ஒளியியல் பண்புகள் வேதியியல் உட்கூறைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையன. இயற்கை யில் பெக்சுமடைட்டு, கிரானைட்டுகளில் பெரில் (beryl), டூர்மலின் (tourmaline), ஸ்பாடுமின் (spodu- mene) முதலியவைகளுடன் சேர்ந்து கிடைக்கும். காண்க, டிரைஃபில்லைட்டு (triphylite); லித்தியோ ஃபில்லைட்டு (lithiophilite). நேட்ரோஃபில்லைட்டு (natrophilite). இதன் வேதி யியல் உட்கூறு (Na Mn) PO, எல்லா பண்புகளிலும் இது டிரைஃபில்லைட்டை (triphylite) ஒத்திருக்கும். அப்படைட்டுத் தொகுதி (apatite group). இத் தொகுதியில் அப்படைட்டு (apatite)(CaF) Ca, (PO4), ஃபுளுரோ அப்படைட்டு (CaCI) Ca, (PO4), குளோ ரோஅப்படைட்டு, பைரோமார்ஃபைட்டு (pyromor phite) (Pb CI) Pb+ (PO4), மிமிடைட்டு (mimetite) (PbCl) Pb, (Aso,), வெனடினைட்டு (vanadinite) PbC1 Pb, (VO), ஆகிய கனிமங்கள் அடங்கும். அரிதாகக் கிடைக்கக்கூடிய சுவாபைட்டு (svabite) கால்சியம் ஆர்சினேட்டும் இத்தொகுதியில் அடங்கும். இவ்வப்படைட்டுத் தொகுதிக்கனிமங்கள் அறுகோ ணப் படிகத் தொகுதியில் படிகமாகின்றன. ஆனால் எல்லாம் துணைவரிசை முகங்கள் உடையவையாகவும் (subordinate faces), அமிலஅரிப்பு (etching figures) உடையவையாகவும் உள்ளன. எனவே, இவற்றை முக் கூம்புப்பட்டக (tripyramidal) வகையைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்லா வகைக் கனிமங்களிலும் தெளிவற்ற அடியிணைவடிவப் பக்கப் (0001) பிளவும்,(1010) பட்டகப்பிளவும் உள்ளன. காண்க, அப்படைட்டு (apatite). பைரோமார்ஃபைட்டு (pyromorphite). இக்கனிமம் அறுகோண முக்கூம்புப் பட்டக வகைகளாக படிகமா கின்றன. படிகங்கள் பட்டகமாகவும், வட்டமான உருளை வடிவமாகவும் கிடைக்கின் றன. இதன் வேதியியல் உட்கூறு (Pb Cl) Pb4 (PO), ஆகும். காண்க, பைரோமார்ஃபைட்டு (pyromorphite). மிமிட்டைட்டு (mimetite). இக்கனிமம் எல்லாப் பண்புகளிலும் பைரோமர்ஃபைட்டை ஒத்திருக்கும். இதன் வேதியியல் உட்கூறு 3 Pb, As, O Pb Cl, O, இதில் ஆர்செனிக் பென்டாக்சைடு 23.2 விழுக்காடும் காரீய பென்டாக்ஸைடு 74. 9 விழுக்காடும் குளோரின் 2.4. விழுக்காடும் உள்ளன. மற்றும் காரீய ஆர்சி னேட்டு 90.7 விழுக்காடும் காரீயக்குளோரைடு 9.3 விழுக்காடும் உள்ளன. இக்கனிமம் அறுகோண, முக் கூம்புப்பட்டக வகையாக படிகமாகிறது. காண்க, மிமிட்டைட்டு (mimetite): ஆக்சிஜன் உப்புக்கனிமங்கள் 797 உள்ளன. வெனடினைட்டு (vanadinite). இது அறுகோணப் படிகத் தொகுதியில் முக்கூம்புப்பட்டக வகைகளாக படிகமாகின்றது. இதன் வேதியியல் உட்கூறு (Pī CI) Pb4 (VO) அல்லது 3Pb, V, O, Pb Cl, இதில் வெனடிய பென்டாக்சைடு 19.4 விழுக்காடும், காரீய பென்டாக்சைடு 78.7 விழுக்காடும் குளோரின் 2.5 விழுக்காடும் காரீயக் குளோரைடு 9.8 விழுக்காடும் உள்ளது. காண்க, வெனடினைட்டு (vanadinice). பாஸ்பேட்டு வகையில் மற்றொரு தொகுதி வேகனரைட்டு (wagnerite) என்பதாகும். இத்தொகுதியில் வேகனரைட்டு, டிரிப் லைட்டு (triplite) டிரிப்போலைட்டு (triploidite) அடிலைட்டு (adelite), டிலசைட்டு (tilasite), சார்தினைட்டு (sarkinite) என்பவையடங்கும். இவை எல்லாம் ஒற்றைச்சரிவுத் தொகுதியில் படிகமாகின்றன. வேகனரைட்டு (wagnerite). இது ஒற்றைச்சரிவுத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதியியல் உட்கூறு (MgF) Mg PO, அல்லது Mg P,O, Mg F, (மக்னிசியபுளூரோபாஸ்பேட்டு). இதில் பாஸ்பரஸ் பென்டாக்சைடு 43.8 விழுக்காடும் மக்னிசியம் 49.3 விழுக்காடும், ஃபுளுரின் 11.8 விழுக்காடும் உள்ளன. சிறிதளவு மக்னீசியம் கால்சியத்தால் இடம் பெயர்ந்து காணப்படும். காண்க, வேகனரைட்டு. டிரிப்லைட்டு (triplite). இது ஒற்றைச்சரிவுத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதியியல் உட் கூறை (RF) RPO அல்லது R, P,O, RF; என அழைப்பர். இதில் R என்பது Fe, Mn, Ca, Mgயைக் குறிக்கும், காண்க, டிரிப்லைட்டு. ஆம்பிலிகோனைட்டு (amblygonite). காண்க, ஆம் பிலிகோனைட்டு. அடிப்படைக் காரப் பாஸ்பேட்டுகள் (basic phos- phates). இத்தொகுதியில் நன்றாக படிகமாகியுள்ள தொடர்ச்சியான அடிப்படைக்கார பாஸ்பேட்டுகளின் வகையான ஆலிவினைட்டுத் தொகுதி (olivenite group) ஆகும். இதில் ஆலிலினைட்டு (olivenite), லிபேதனைட்டு (libethenite), அடமைட்டு (adamite) டிஸ்கிலோசைட்டு (desclozite) என்ற கனிமங்கள் அடங்கும். இவை எல்லாம் செஞ்சாய் சதுரப் படிக் வகைகளாக படிகமாகின்றன. 4 ஆலிவினைட்டு. இதன் வேதியியல் உட்கூறு Cuz AsgO, Cu(OH), அல்லது 4 CuO As,O,H,O இதில் ஆர்செனிக் பென்டாக்சைடு 40.7 விழுக்கா டும், குப்பிரிக் ஆக்சைடு 56,1 விழுக்காடும் நீர் 3.2 விழுக்காடும் உள்ளன. காண்சு, ஆலிவினைட்டு (oli- venite).