பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/829

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சிஜன்‌ உப்புக்‌கனிமங்கள்‌ 799

. . கொண்டும் காணப்படுகின்றன.இது ஒற்றைச் சரிவுத் தொகுதியில் படிகமாகிறது. எரித்திரைட்டின் வேதியியல் உட்கூறு நீர்மக்கோபால்ட்டு ஆர்சி னட்டு. இதில் ஆர்சினிக் பென்டாச்சைடு 38.4 விழுக்காடும், கோபால்ட்டு பென்டாக்சைடு 37.5 விழுக்காடும், நீர் 24.1 விழுக்காடும் உள்ளன.சில இடங்களில் இதில் உள்ள கோபால்டு, நிக்கல்,இரும்பு ஆகியவை கால்சியத்தால் இடப்பெயர்ச்சியடைந்து காணப்படும். இது இயற்கையில் உருண்டை வடிவாக வும், நீண்ட தூண் வடிவாகவும், நொறுங்கிய துகள் களாகவும் காணப்படுகிறது. மிகத் தெளிவான குறு இணை வடிவப் பக்கப் (010) பிளவு கொண்டுள்ளது. இதுவும் விவியனைட்டைப் போன்று குறுஇனை வடி வப் பக்கத்தில் முத்து மிளிர்வையும் மற்றப் பக்கங் களில் வைர மிளிர்வு முதல் பளிங்கு மிளிர்வு வரையும் கொண்டுள்ளது. காண்க, எரித்திரைட்டு (erythrite). ஸ்காரோடைட்டு (Scorodite). இந்த ஸ்காரோ டைட்டு ஓர் நீர்ம இரும்பு ஆர்சினேட்டு. இது செஞ் சமச்சதுரப்படிகத் தொகுதியில் படிகமாகிறது. இதில் ஆர்சினிக் பென்டாக்சைடு 49.8 விழுக்காடும், இரு ம்பு செஸ்குவாக்சைடு 34.6 விழுக்காடும். நீர் 15.6 விழுக்காடும் உள்ளன. படிகங்கள் எண்முகப் பட்டக மாகவும், பட்டக வடிவிலும் காணப்படுகின்றன. துகள் நிலையிலும் மண்களாகவும் காணப்படுகின் றன. இதன் ஒளிவிலகல் எண் (refractive index)1, 74 முதல் 1.92 வரை மாறும் தன்மையுடையது. இது பண்பாகும். இதன் சிறப்புப் காண்க, ஸ்காரோ டைட்டு. அமில, நீர்மப் பாஸ்பேட்டுகள் மற்றும் ஆர்சினேட்டு கள் (Acid, hydrous phosphates & arsenates). இத் தொகுதியில்ஹைடிங்கரைட்டு(haidingerite)H Ca,AsO4 H.O unfun General (pharmacolite)H Ca AsO4 2 H, O ஆகியவை அடங்கும். இதன் வகைகளான, வாப்பலிரைட்டு (wzpplerite) HCa AsO, 33 H,O, புரு ளஷட்டு (brushite) H Ca PO4.2 H,O, மார்டினைட்டு (martinite) H, Ca, (PO,), H,O முதலியவையும் ஹெவிடைட்டு(hewetite) CaO3V, O 9 H,O, மெட்டா கிஷ்டைட்டு (metaheuettite), பர்வினைட்டு (feruanite) 2 Fe,O. 2V.O. 5H.O, GUL ரோசைட்டு FegO..2V,O,SH,O, CaO. v O. 4 HẠO, V, O,,2 H, O, ஃபெர்மனடிடைட்டு (fermandinite) Cao 5 V,O, 14 HO, மெலனேவெனடினைட்டு பாஸ்காயிட்டு (pascoite) 2 CaO 3 Vg 0, 11 H,0, பின்ட்டோடைட்டு (pintodite) 2 CaO V,O9H,O முதலியவையும் அடங்கும். இதில் முக்கியமாகப் ஃபார்மாகொலைட்டு (pharmacolite) என்பது ஒற்றைச் சரிவுத் தொகுதியில் படிகமாகியுள்ள ஓர் கனிமம். இதன் வேதியியல் உட்கூறு HCa As0, 2H,O. இதில் 23 மெட்டாரோசைட்டு (rossite) 6 CaO. ஆக்சிஜன் உப்புக் கனிமங்கள் 799 ஆர்செனிக் பென்டாக்சைடு 53.3 லிழுக்காடும் சுண்ணாம்பு (lime) 25.9 விழுக்காடும் நீர் 20,8 விழுக்காடும் உள்ளன.காண்க, ஃபார்மாகொலைட்டு (pharmacolite) அடிப்படைக் கார நீர்ம பாஸ்பேட்டுகள், ஆர்சினேட்டு கள் (Basic, hydrous phosphates, arsonates). இதில் முக்கியக் எனிமங்களாக ஆய்க்ரைட்டு (euchroite), சால்கோஃபில்லைட்டு (chalco phyllite), வேவிலைட்டு (wavellite), டர்க்குவிஸ் (turquois), ஃபார்மாகோசிட் ரைட்டு (pharmacosiderite), சில்டரனைட்டு (childre- nite), லிரோகோனைட்டு (liroconite) ஆகியவை அடங்கும். ஆய்க்ரைட்டு (Euchroit). இது செஞ்சாய் படிகத் தொகுதியில் தொகுதியில் படிகமாகியுள்ள ஓர் நீர்ம செம்பு ஆர்சினேட்டுக் கனிமம். இதன் வேதியியல் உட்கூறு Cu AsgO Cu (OH,) 6 H,O இதில் ஆர் சினிக் பென்டாச்சைடு 34,2 விழுக்காடும், குப்பிரிக் ஆக்சைடு 47.1 விழுக்காடும் நீர் 18.7 விழுக்காடும் உள்ளன. காண்க, ஆய்க்ரைட்டு. B சால்கோஃபில்லைட்டு (Chalcophyllite). இது அறு கோணப் படிகத் தொகுதியில் (hexagonal system ) சாய்சதுரப் படிகவகைகளாகப் (rhombohobal) படி கமாகிறது. இதன் வேதியியல் உட்கூறு 20 Cuo. Al,O, 2 As,Os 3SO, இதை மிகு அடிப் படைக் காரச் செம்பின் ஆர்சினேட்டு சல்பேட்டு என அழைப்பர். காண்க, சால்கோஃபில்லைட்டு (chalcophyllite). 5 வேவிலைட்டு (Wavellite). இது செஞ்சாய் சதுர படிகத் தொகுதியில் படிகமாகி உள்ள ஓர் சனிமம். இதன் வேதியியல் உட்கூறு 4 A1 PO, 2 AI (OH), 9H,0. இதில் பாஸ்பரஸ் பென்டாக்சைடு 35.2 விழுக்காடும், அலுமினா 38.00 விழுக்காடும் நீர் 26.8 விழுக்காடும் உள்ளன. காண்க, வேவிலைட்டு. 5 a டர்க்குவிஸ் (Turquiois). இது முச்சரிவுத் தொகுதி யில் படிகமாகியுள்ள நீர்ம அலுமினிய, செம்பு பாஸ் பேட்டு. இதன் வேதியியல் உட்கூறு CuO. 3Al,O3 2 Pg0, 9 H,O அல்லது H, (CuOH) [Al (OH)2J& (PO,) இதில் பாஸ்பரஸ் பென்டாக்சைடு 34.12 விழுக்காடும். அலுமினா 36.84 விழுக்காடும், குப் பிரிக் ஆக்சைடு 9.57 விழுக்காடும் நீர் 19.47 விழுக் காடும் உள்ளன. காண்க, டர்க்குவிஸ். ஃபார்மாகோசிடரைட்டு (Pharma Cosiderite). இக் கனிமம் போலிச் செஞ்சமச் சதுரபடிகத் தொகுதியி லும் (pseudo-isemetric)அல்லது நாற்கோணப் படிகத்