806 ஆக்சிஜன ஏற்ற இறக்க வினைகள்
306 ஆக்சிஜன ஏற்ற இறக்க வினைகள் Na Na + + Zn Zn ++ + 2e- முதல் வினையில் சோடியம் அணுவிலிருந்து எலெக்ட்ரான் வெளியேறுகிறது. இரண்டாம் வினையில் துத்தநாக அணுவிலிருந்து 2 எலெக்ட் ரான்கள் நீங்குகின்றன. இவ்வினைகள் இரண்டும் ஆக்சிஜனேற்ற வினைகள் ஆகும். ஆக்சிஜன் ஏற்றத்திற்கு நேர் எதிரான வரைய றையை ஆக்சிஜன் இறக்கத்திற்குக் கூறலாம். ஒரு பொருளின் நோமின் தன்மையைக்குறைத்தல் அல்லது எதிர்மின் தன்மையை அதிகரித்தல் ஆகியவை ஆக்சி ஜன் இறக்கம் எனலாம். Cuo + H, Hg + HgCl, Cu + H, O → Hg, Cl, மேற்கண்ட வரையறையை விட இக்காலக் கருத் தின் அடிப்படையில் வரையறுப்பதுதான் எல்லா வினைகளுக்கும் பொருந்துகின்றது. அதன்படி ஆக்சி ஜன் இறக்கம் என்பது எலெக்ட்ரான் ஏற்பு(electro nation) ஆகும். Cl, + 2e- 2C1- $+2e-S - இந்த இரண்டு வினைகளிலும் எலெக்ட்ரான் சேர்வதால் அவை ஆக்சிஜன் ஒடுக்க வினைகளாகும். ஆக்சிஜன் ஏற்ற இறக்க அடிப்படைக் கருத்துக்கள். ஒரு வினையில் ஆக்சிஜன் ஏற்றம் நிகழ்ந்தால் அதில் ஆக்சிஜன் இறக்கமும் நிகழ்கிறது எனப் பொருள். ஏனென்றால் ஒரு பொருள் எலெக்ட்ரானை இழந் தால் (ஆக்சிஜன் ஏற்றம்) அந்த எலெக்ட்ரானை மற்றொரு பொருள் ஏற்க வேண்டும். எடுத்துக் காட்டாகச் சோடியமும் குளோரினும் வினை புரி வதையே கூறலாம். 2 Na + Cl, → 2 NaCI → 2 Na+ + 2 C1- இந்த வினையில் சோடியம் அணு எலெக்ட் ரானை இழக்கிறது. குளோரின் மூலக்கூறில் உள்ள எலெக்ட்ரானை களோரின் அணு ஏற்கின்றது. எனவே சோடியம் ஆக்சிஜன் ஏற்றம் அடைகிறது. குளோரின் ஆக்சிஜன் இறக்கம் அடைகிறது. கு 2 Na 2 Na + + 2e- (ஆக்சிஜன் ஏற்றம்) Cl, + 2e~ → 2 C1- (ஆக்சிஜன் இறக்கம்) 2 Na + Cl, 2Na ++ 2C1- (மொத்த வினை ) ஆக்சிஜன் ஏற்ற நிலை. துத்தநாக அணுவிலிருந்து இரு எலெக்ட்ரான்கள் நீங்கியிருப்பதால் துத்தநாக அயனியின் (Zn+) ஆக்சிஜன் ஏற்ற நிலை 2. ஆக்சி ஜன் ஏற்ற நிலையை ஆக்சிஜன் ஏற்ற எண் (oxida- tion number) என்றும் கூறுவர். இரும்பு இரண்டு வெவ்வேறு ஆக்சிஜன் ஏற்ற நிலைகளில் இருக்க முடியும். அவை ஃபெரஸ் (Fe2+) ஃபெரிக் (Fe3+) ஆகியவை. உயர் ஆக்சிஜன் ஏற்ற நிலையிலிருந்து குறை ஆக்சிஜன் ஏற்ற நிலைக்கு ஒரு தனிமம் மாறுமானால் அதற்கு ஆக்சிஜன் இறக்கம் எனப் பெயர். அதேபோல் குறை ஆக்சிஜன் ஏற்ற நிலை யிலிருந்து உயர் ஆக்சிஜன் ஏற்ற நிலைக்கு ஒரு தனிமம் மாறுமானால் அதற்கு ஆக்சிஜன் ஏற்றம் என்று பெயர். Cu2+ Cu + + e Cu + (ஆக்சிஜன் இறக்கம்) குப்ரஸ் அயனி குப்ரிக் அயனி Fe' + → Fe 3 + +16- (ஆக்சிஜன் ஏற்றம்) ஃபெரஸ் ஃபெரிக் அயனி அயனி ஒரு தனிமத்தின் ஆக்சிஜன் ஏற்ற நிலையை அறியக் கீழ்க்கண்ட விதிகள் உதவும். 1. பிணைப்பில் இல்லாத தனிமத்தின் ஆக்சிஜன் ஏற்றநிலை பூஜ்யம் ஆகும். 2.ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை சேர்மங் களில் இருக்கும்போது ஆக்சிஜன் ஏற்ற நிலை முறையே +1,-2 ஆகும். 3. ஓரணு அயனியின் (monoatomic) மின்சுமை எண்ணிக்கையே அதன் ஆக்சிஜன் ஏற்ற நிலை யாகும். எடுத்துக்காட்டாக சல்ஃபைடு அயனியின் (S-) ஆக்சிஜன் ஏற்ற நிலை -2 ஆகும். 4. ஒரு மூலக்கூறில் உள்ள ஆக்சிஜன் ஏற்ற நிலைகளின் கூட்டுத்தொகை சுழி (zero) ஆகும். +1 -1 NaCl சோடியம் குளோரைடு இவ்விதிப்படி நைட்ரிக் அமிலத்தில் (HNO ) நைட்ரஜன் அணுவின் ஆக்சிஜன் ஏற்ற நிலையைப் பின்வருமாறு விளக்கலாம். HNO3 - இதில் Hஇன் ஆக்சிஜன் ஏற்ற நிலை + 1 ஆக்சிஜனுக்கு -2× 3 =-6. எனவே நைட்ரஜன் +5 ஆக்சிஜன் ஏற்ற நிலையில் உள்ளது. -வி.கி.