பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/838

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 ஆக்சிஜன்‌ ஏற்ற எண்‌

808 ஆக்சிஜன் ஏற்ற எண் ஏற்ற எண் என்பது, அணு அல்லது அயனியின் இணைதிறனையும் (valency) மின் தன்மையையும் இணைத்துக் குறிப்பிடும் எண் ஆகும். தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்களின் விவரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அட்ட வணையில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களுக்குக் கீழே கண்டுள்ள விளக்கங்கள் உதவும். . 1. வேறுபட்ட இரு அணுக்களைக் கொண்ட அயனிச் சேர்மங்களில் ஒவ்வொரு தனிம அணுவின் ஆக்சிஜனேற்ற எண்ணும், அந்த அயனியின் மின் னேற்றத்தைக் குறிக்கும் எண்ணாகும். எலெக்ட் ரான் கவர்திறன் (electronegativity) அதிகமுள்ள தனிமத்தின் எதிர்மின் அலகைக் கொண்டே ஆக்சிஜ னேற்ற எண் கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட் டாக HCI சேர்மத்தில் H+ CI- எனப் பிணைப்பு எலெக்ட்ரான்கள் அமைகின்றன. அதாலது குளோ ரின் ஓர் எலெக்ட்ரானை ஏற்றிருப்பதைக் கொண்டு, ஹைட்ரஜன் ஓர் எலெக்ட்ரானை இழந்துள்ளது அறியப்படுகிறது. ஆகவே இவற்றிலுள்ள மின் அலகு, முறையே +1. - 1. இவையே H + GIT ஆகிய அயனி களின் ஆக்சிஜனேற்ற எண்கள் ஆகும். இதைப் போன்றே பேரியம் குளோரைடில் (BaCl,), பேரியம் இழக்கும் இரு எலெக்ட்ரான்களையும், இரு குளோரின் அணுக்களும் தலைக்கு ஒன்றாக எடுத்துக் எதிர் மின்னேற்றமுள்ள கொண்டு. ஓர் அலகு குளோரைடு அயனியாகிறது. எனவே குளோரின் ஆக்சிஜனேற்ற எண் -1, பேரியத்தின் ஆக்சிஜனேற்ற எண் +2 ஆகும். அயனிச் சேர்மத்திலுள்ள ஒரு மொத்த தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண்ணை அதன் அணுக்களால் வகுத்து, ஓர் அணுவின் ஆக்சிஜ னேற்ற எண் அறிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அலுமினா (AI,O,) சேர்மத்தில், இரண்டு அலுமினிய அணுக்களின் மொத்த ஆக்சிஜன் ஏற்ற எண் +6. ஆகையால், ஓர் அலுமினிய அணுவின் ஆக்சிஐ னேற்ற எண் +3 ஆகும். 2. சகபிணைப்புச் சேர்மத்தில் (covalent compound) ஆக்சிஜன் ஏற்ற எண்ணை அறியப் பின் வரும் முறை கையாளப்படுகிறது. ஒரே தனிமத்தின் இரு அணுக்கள் சகபிணைப் பில் பங்கு கொள்ளுமாயின் ஒவ்வோர் அணுவுடனும், ஓர் எலெக்ட்ரானைச் சேர்த்து அதன் ஆக்சிஜனேற்ற எண் கணக்கிடப்படுகிறது. சான்றாக,H, மூலக் கூறில், ஒவ்வோர் ஹைட்ரஜனுடன் ஓர் எலெக்ட் ரானைச் சேர்த்தால், அது மின்னேற்றமற்ற ஹைட் ரஜன் அணுவைக் குறிக்கும். எனவே H அணுவின் ஆக்சிஜனேற்ற எண் சுழியாகும். ஆகவே எத்தனி மத்துடனும் சேராது தனிப்பட்ட நிலையில் இருக்கும் தனிமத்தின் ஆக்சிஜன் ஏற்ற எண் பூஜ்யமாகும். இரு வெவ்வேறு தனிம அணுக்கள் சகபிணைப் பில் இணையுமாயின், பிணைப்பு எலெக்ட்ரான்கள், எலெக்ட்ரான் கவர்திறன் அதிகமுள்ள அணுவிற்கே வழங்கப்பட்டு ஆக்சிஜனேற்ற எண் கணக்கிடப்படு கிறது. இதன் அடிப்படையில் ஒரு தனிம அணுவின் ஆச்சிஜனேற்ற எண் நேர் குறியீட்டையும், மற்றொரு தனிம அணுவின் ஆக்சிஜனேற்ற எண் எதிர் குறியீட் டையும் உடையதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் குளோரைடு சேர்மத்தில் ஹைட்ரஜ னுக்கு + 1-ம் குளோரினிக்கு - 1, ம் ஆக்சிஜனேற்ற எண் ஆகும். ஒரு சேர்மத்திலுள்ள தனிம அணுவினுடைய சகபிணைப்பின் அளவிற்கும், அதன் ஆக்சிஜனேற்ற எண்ணிற்கும் வேறுபாடு இருக்கலாம். எடுத்துக் காட்டாக, CH4, CH,C1, CH,CI,, CH C13,CC4 ஆகிய சேர்மங்களில் கரி அணுவின் இணைதிறன் 4; ஆனால் ஆக்சிஜன் ஏற்ற எண் முறையே -4, - 2, 0 +2,+4 ஆகும். எனவே கரி அணுவின் இணைதிறன் அல்லது சகபிணைப்பு அளவு 4 என் மாறாமல் இருக்கும்போது, அதன் ஆக்சிஜனேற்ற எண் 4இலிருந்து 4 வரை அமைந்துள்ளது. 3. ஹைட்ரஜன உள்ள சேர்மங்களில் ஹைட் ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் + 1 ஆகும். ஆனால் உலோக ஹைட்ரைடு சேர்மத்தில் மட்டும் ஹைட் ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் -1 ஆகும். NaH சேர் மத்தில் Na H * என உள்ளது குறிப்பிடத்தக்கது. 4. எல்லாச் சேர்மங்களிலும், ஆக்சிஜனுக்கு ஆக்சிஜனேற்ற எண் - 2 ஆகும். ஆனால் இருஃபுளுரின் ஒற்றை ஆக்சைடு (F,O) சேர்மத்தில் மட்டும் ஆக் சிஜனின் ஆக்சிஜனேற்ற எண் +2 ஆகும். ஒரு ஃபுளுரினுக்கு ஓர் எதிர்மின் அலகு வீதம் அமைந்துள் ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பெராக்சைடு சேர்மத்தில் ஆக்சிஜனுக்கு ஆக்சிஜனேற்ற எண் -1 ஆகும். ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்மத்தில் ஆக் சிஜனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையில் உள்ள பிணைப்பு எலெக்ட்ரான்கள் இரண்டையும் ஆக்சிஜ னுடன் சேர்த்தே எண்ணப்படும். ஆனால் இரண்டு ஆக்சிஜன் அணுக்களுக்கிடையே உள்ள இரு எலெக்ட் ரான்களும் சமமாகப் பங்கீடு செய்யப்படும். ஆகவே ஒவ்வோர் ஆக்சிஜன் அணுவைச் சுற்றிலும் ஏழு எலெக்ட்ரான்கள் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதனால் பெராக்சைடு சேர்மத்தில் ஆக்சிஜன் அணுவின் ஆக்சிஜனேற்ற எண் - 1 ஆகும்.