பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரப்பாய்வு அமுக்கி அணிகள். இயங்கு நிலை (dynamic type), மையவிலகு அமுக்கிகள் ஆரத்திசை யில் பாய்மத்தை முடுக்கச் சுழலும் எந்திர உறுப்பு களைப் பயன்படுத்துகின்றன. விரவல் செயல்பாட் டால் (diffusing action) விரைவை அழுத்தமாக மாற்றலாம். எனவே விரிவடைந்த பகுதியில் விரைவு குறைந்து அழுத்தம் கூடுதலாக இருக்கும். தூண்ட சுத்தின் நடுமைய நுழைவாயால் மையவிலகு அமுக்கி கள் வளிமத்தை உறிஞ்சுகின்றன. இந்த நுழைவாய் தூண்டகக்கண் (impeller-eye) எனப்படுகிறது.உள் ளிழுக்கப்பட்ட வளிமம் ஆரத்திசையில் வெளிப்புற மாகச் செல்லும்படி முடுக்கப்படுகிறது (படம் 9). தூண்டகத்திற்குள் ஓரளவு அழுத்தம் உயரும். ஆனால் முழு அழுத்த உயர்வும் உறையின் விரவு பகுதிக்குள் விரைவை அழுத்தமாக மாற்றுதலால் மட்டுமே உருவாகும். ஒவ்வொரு தூண்டகமும் விர வசுமும் இணைந்த இணை (pair) அமுக்கியின் ஒரு கட்டமாகச் செயல்படும். மையவிலகு அமுக்கிகள் இறுதி அழுத்தத்தையும் பாய்மப் பருமன் வெளி யேற்ற அளவையும் பொறுத்து 1 முதல் 12 வரையி லான கட்டங்கள் அமையும்படி வடிவமைக்கப்படு கின்றன. அழுத்த விகிதம் அல்லது அமுக்க விகிதம், வெளியேற்ற அழுத்தத்திற்கும் நுழைவாய் அழுத்தத் திற்கும் உள்ள விகிதம் ஆகும். காண்க, பெர்னெளலி யின் தேற்றம்; விரவசும் (diffuser), படம் 9-இலிலுள்ள A1 என்ற தூண்டகத்தின் மையவிலக்கச் செயல்பாட்

டால் BC என்ற அழுத்த உயர்வு ஏற்படும்.EF என்ற பெருமளவு விரைவு உயர்வும் ஏற்படும்.B)

என்ற விரலகத்தில் விரைவுஆற்றல் நிலைஅழுத்த ஆற் றலாக மாற்றப்படும். F இலிருந்து G க்கு விரைவு விழும். அப்போது C இலிருந்து D க்கு அழுத்தம் உயரும். பல்வேறு வேகங்களில் இயங்கும் மைய விலக்கு அமுக்கி, அழுத்தம்-பருமன் வளைவுகளில் காட்டியுள்ள M என்ற வேகத்தில் அமுக்க அணி என்ற அழுத்தத்தில் என்ற பருமனை படம் 9-இலிலுள்ள அழுத்தம் பருமன் விளக்கப் படத்திலுள்ள புள்ளி) வெளியேற்றும். வேகத்தை H அளவுக்கு உயர்த்தினால் PM அழுத்தத்தில் VH பருமனும் அல்லது VM பருமனை PH அழுத்தத்தி லும் வெளியேற்றலாம் என்பது தெளிவாகும். மைய விலகு அமுக்கியின் வெளியேற்ற அழுத்தம் அதனு டைய பல்வேறு வெளியேற்ற அளவுகளுக்கும் நடை முறையில் நிலையானதாகவே அமைகிறது. நிலைப் பான இயக்கத்தின் கீழ் வரம்பு, அமுக்கும் வரமபு (pumping limit) அல்லது எழுச்சி நிலை (surge point) அல்லது துடிப்புநிலை (pulsation point) எனப்படுகிறது. எனவே, விழுக்காட்டு (%) நிலைப்பு M PM

அமுக்கும் வரம்பு என்பது 100 x (1 வெளியேற்ற வரம்பு'

பலகட்ட மையவிலக்கு அமுக்கிகள் நிமிடத்திற்கு 500 முதல் 1,50,000 பருமன் அடிகளுக்கும் அதிகமாக வளியப்பருமனைக் கையாளுகின்றன. இவற்றின அழுத்தம் ஆர அங்குலத்துக்கு 5,00 பவுண்டுகள் வரையில் அமையும். இவற்றின் அமுக்க விகிதம் 10 மடங்குக்குள் அமையும்படி வரம்பிடப்படுகிறது.

அச்சுவழிப் பாய்வு அமுக்கி அணிகள். சுழலும் அச்சுக்கு இணையாக வளிமத்தை முடுக்கும் அமுக்கி களில் இயங்கும் அலகுவரிசைகளும் (moving blade systems) நிலையான அலகு வரிசைகளும் (stationary blade systems) அமைந்திருக்கும். ஓர் இயங்கும் வரிசை யும் ஒரு நிலை வரிசையும் இணைந்து அமுக்கியின ஒரு கட்டமாகச் செயல்படும். ஆரப்பாய்வு அமுக் கியை ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வகை அமுக்கிகளில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் அழுத்த உயர்வு மிகக்குறைவாகவே இருக்கும். குறிப்பிட்ட அழுத்த இடைவெளியில் மையவிலகு அமுக்கியைவீட அச்சு வழிப்பாய்வு அமுக்கியில் பல கட்டங்கள் அமைந் திருக்கும். ஒற்றைக்கட்ட அச்சுவழிப்பாய்வு அமுக்கி கள் நிமிடத்திற்கு சில முதல் 1,00,000 பருமனடிகள் வரை வெளியேற்ற அளவும், சதுர அங்குலத்துக்கு 1 முதல் பல பவுண்டுகள் வரையில் அழுத்தமும் உள்ளவையாக வடிவமைக்கப்படுகின்றன. பல கட்ட அச்சுவழிப்பாய்வு அமுக்கிகள் காற்றைச் சதுர அங்குலத்துக்கு 150 பவுண்டுக்கும் மேல் அமுக்கும். சில சிறப்பு வகை எந்திரங்கள் நிமிடத்திற்கு 2,000,000 பருமனடி வெளியேற்ற அளவைக் கையாளவல்லவை. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள அழுத்த உயர்வோ மிகக்குறைலே. எனவே இவற்றில் 20 அல்லது மேலான கட்டங்கள் இருக்கும் (படம் 10). மையவிலகு எந்திரங்கள் நடைமுறையில் ஒரே அழுத் தத்தில் பல்வேறு வெளியேற்ற அளவுடைய வளி மத்தைக் கையாள உதவுகின்றன; அச்சுவழிப்பாய்வு எந்திரங்களோ கணிசமான அளவு நிலையான வெளி யேற்றத்தைப் பல்வேறு அழுத்தங்களில் தருகின்றன. அச்சுவழிப் பாய்வு எந்திரங்களைவிட மையவிலகு பாய்வு எந்திரங்கள் மிக அகன்ற, நிலைப்பான (stable) இயக்க இடைவெளியை (operating range) உடையன. இவற்றிலுள்ள பாய்வு நேர்கோட்டில் நிகழ்வதால் இவற்றின் விட்டம் மையளிலகு எந்திரங் களைவிடக்குறைவாக இருக்கும்; நீளம் அதிகமாக இருக்கும். எனவே இவற்றின் திறமையும் (cflicicncy) கூடுதலானதே.

மிகக்குறைந்த சுமையில், அழுத்தம் உயர்வதைத் தடுக்க, அச்சுவழிப் பாய்வு எந்திரங்களில், அதிகமான காற்றை வெளியேற்றும் திறப்பு அமைப்புகள் (blow off systeins) பொருத்தப்பட்டுள்ளன. எனவே எந் திரம் தனது இயக்க இடை.வெளியில் நிலைப்புடன் எப்போதும் இயங்கும்.

என்ற கோவைக்குச் சமம்.

54 அமுக்கிகன்