பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/840

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 ஆக்சிஜனேற்றத்‌ தடுப்பிகள

810 ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள தன்னாக்சிஜனேற்ற வினைகளின் வழியை அறிய வேண்டும். வினைப்படும் தன்னாக்சிஜனேற்ற வினைகளில் ஆக்சிஜன் ஏற் வேகம் நான்கு நிலைகளில் மாறுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கப்படும் 1.மிகக் குறைந்த வேகம் உள்ள தொடக்கக் காலம் 2. வேக முடுக்கமடையும் காலம் 3. சீரான வேகத்துடன் வினை நிகழும் காலம் 4. வேகம் குறைந்த வினை முடிவுக் காலம். மிகக் குறைந்த வேகம் உள்ள தொடக்க கால மும், வேகம் முடுக்கமடையும் காலமும் சேர்ந்து வினையின் தேக்கக் காலம் (induction period) எனப் படுகிறது. இக்காலத்திற்குப் பிறகே மூலப்பொரு ளின் தன்னாக்சிஜனேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். எனவே, தேக்கக் காலத்தில் பொருள் தன்னாக்சிஜனேற்றம் அடைவதில்லை என்றே கொள்ளலாம். இத்தேக்கக் காலத்தையே தன்னாக்சிஜ னேற்றமடையும் பொருளின் வாழ்காலமாகக் கருத லாம். வினைவேகத்தைப் பற்றிய இத்தகவல்களின் அடிப்படையில் தன்னாக்சிஜனேற்ற வினை ஒரு சங்கிலித் தொடர்வினை (cbain reaction) என நிறுவப் பட்டுள்ளது. சங்கிலித் தொடர் வினைகளில் வினை பலபடி களில் நிகழ்கிறது. இப்படிகளில் உருவாகும் சில இடை நிலைச் சேர்மங்கள் இப்படிகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தி வினையை ஒரு தொடர் வினையாக மாற்று கின்றன. இவ்விடை நிலைச் சேர்மங்கள் உள்ள வரை யில் வினை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும். தன்னாக்சிஜனேற்ற வினைகளில் இவ்வாறு வினை யைத் தொடர்ந்து நிகழ்த்த வல்ல பொருள்களாக இயங்கு உறுப்புகள் விளங்குகின்றன. ஒரு சக பிணைப்பு (covalent bond) சமச்சீர் பிளவுக்குட்படு வதால் (homolytic fission) கிடைக்கும் மின்சுமை யற்ற இணையுறா எலெக்ட்ரானைக் (unpaired electrons) கொண்ட துகளே இயங்கு உறுப்பெனப் படுகிறது. சக பிணைப்பென்பது பெரும்பாலும் கரிமச் சேர்மங்களில் காணப்படும் வேதிப்பிணைப் பாகும். இரு எலெக்ட்ரான்கள் இணையுறுவதால் இப்பிணைப்பு உண்டாகிறது. இப்பிணைப்பு சமச் சீர்ப் பிளவுக்குட்படும் போது இரு கூறுகளாகப் பிரிந்து, பிணைப்பில் உள்ள இரு எலெக்ட்ரான்களும் சம அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டு, ஒவ்வொன் றும் ஒற்றை இணையுறா எலெக்ட்ரானைக் கொண்ட இரு இயங்கு உறுப்புகள் விளைகின்றன. இயங்கு உறுப்புகள் அவற்றின் தன்மைக்கேற்ப வினைத் திறனில் வேறுபடுகின்றன. எல்லா இயங்கு உறுப் புகளும் இறுதியில் இரண்டிரண்டாகவோ, வேறு உறுப்புகளுடனோ இணைந்து புதிய சகபிணைப் பைக் கொண்ட நிலையான சேர்மங்களை உருவாக்கு கின்றன. தன்னாக்சிஜனேற்ற வினைகள் கீழ்க்காணும் வினைவழிப்படி நடைபெறுகின்றன எனக் கண்டறி யப்பட்டுள்ளது. RH + 02 R. + HO (1) ROO⭑ (2) R + 0% ROO + RH ROOH + R (3) வினை- (1) தொடக்கப் படியாகும். இப்படியில் RH என்ற கரிமச் சேர்மத்தில் எளிதில் பிளப்புறும் C-H பிணைப்பு சமச்சீர்ப் பிளவுக்குட்பட்டு அல்க் கைல் (R) இயங்கு உறுப்புகள் உருவாகின்றன. வினை - (2)இல் R இயங்கு உறுப்பு ஆக்சிஜ னுடன் சேர்ந்து பெராக்சி தனி உறுப்பு விளைகிறது. இத்தனியுறுப்பு கரிமச் சேர்மம் RH உடன் வினை புரிந்து (வினை 3) ஹைட்ரோ பெராக்சைடையும் (ROOH), மீண்டும் அல்க்கைல் இயங்கு உறுப்பையும் (R.) உருவாக்குகிறது. இவ் வியங்கு உறுப்பு மீண்டும் வினை - (2) ஐ நிகழ்த்துகிறது. இவ்வாறு படி-(2), படி(3) வினைகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இது தவிரப் பெராக்சி இயங்கு உறுப்பும் ஹைட்ரோ பெராக்சைடும் பிற வினைகளில் ஈடுபட்டு ஆல்டிஹைடு, ஆல்கஹால், கீட்டோன், அமிலம், எஸ்ட்டர் போன்ற நிலையான ஆக்சிஜனேற்ற மடைந்த பொருள்களையும் தருகின்றன. இவ்வினை கள் நிகழ்வது தடுக்கப்பட வேண்டுமானால் முதல் படியில் விளையும் R உறுப்புகள், படி-(2) (3) ஆகியவற்றைத் தொடர இயலாதவாறு வேறு வினைகளில் பயன்படுத்த வேண்டும். இச்செயலை ஆக்சிஜனேற்றத் தடுப்பி நிகழ்த்துகிறது. மாறுபட்ட ஆக்சிஜனேற்றப் பாதையை வகுத்து மூலப்பொருள் ஆக்சிஜனேற்றம் அடையாமல் இத்தடுப்பி காக்கிறது. இச்செயலில் ஆக்சிஜனேற்றத் தடுபொருள் அழிந்து விடுகிறது. தொடர்வினையின் எந்நிலையில் ஆக்சிஐனேற் றத் தடுபொருள் குறுக்கிட்டு ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது என்பதும் கண்டறியப்பட்டு நிறுவப்பட் டுள்ளது. தொடர் வினையில் பெராக்சி உறுப்பு உருவாகும் நிலையில் தடுப்பி குறுக்கிடுகிறது.