பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/841

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சிஜனேற்றத்‌ தடுப்பிகள்‌ 811

உருவாகும் பெராக்சி உறுப்புடன் தடுப்பி வினைப் பட்டு நிலையான விளைபொருள் ஒன்றை உருவாக்கு கிறது. இதன்மூலம் தொடர்வினையின் படி தடுக்கப்பட்டுத் தொடர்வினையும் ஆக்சிஜனேற்றமும் நிறுத்தப்படும் (3) ஆக்சிஜனேற்றத் தடுப்பியின் உடனிருக்க வினை வழி, மேற்குறிப்பிட்ட வினை- (1) வினை - (2) ஆகிய வற்றைத் தொடர்ந்து கீழ்க்காணும் வண்ணம் (4) நடைபெறுகிறது. வினை நிலையான இயங்கு ROO + ஆக்சிஜனேற்றத் உறுப்பு (அல்லது) விளைபொருள் (4) தடுப்பி தடுப்பியின் திறன் ஆக்சிஜனின் அழுத்தத்தைப் பொறுத்து மாறுவதில்லை என்ற உண்மை, தடுப்பி வினையின் முதல் அல்லது இரண்டாம் படியில் பங்கு பெறவில்லை எனவும் மேற்குறிப்பிட்ட வழியில் தான் செயல்புரிகிறது எனவும் நிறுவுகிறது. இங்ஙனம் பெராக்சி உறுப்புடன் வினைப்பட்டு நிலையான விளைபொருள் உருவாவதால் மீண்டும் R உறுப்பு உருவாதல் தடுக்கப்படுகிறது. எனவே தொடர இயலாது. வினை எனவே ஒரு பொருள் ஆக்சிஜனேற்றத் தடுப் பியாகச் செயல்பட வேண்டுமானால் வினை-(3) தடுக்கப்பட்டு, வினை - (4) நடைபெற வேண்டும். இவ்வடிப்படையில் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பி கீழ்க்காணும் இன்றியமையாப் பண்புகளைக் கொண்டதாய் இருக்க வேண்டும். 1. பெராக்சி உறுப்புடன் தடுப்பி மூலப் பொரு ளைவிட எளிதில் வினைபுரிய வேண்டும். 2. இயங்கு உறுப்பும் தடுப்பியும் வினையுற்றுக் கிடைக்கும் விளைபொருள் நிலையானதாக இருக்க வேண்டும். வினை 3. குறித்த அளவு தடுப்பியுடன் அதிக எண் ணிக்கையில் இயங்கு உறுப்புகள் புரிய வேண்டும். இவை தவிரக் கீழ்க்காணும் சிறப்பியல்புகளையும் தடுப்பிகள் பெற்றிருக்க வேண்டும். 1. தடுப்பி மூலப்பொருளில் போதுமான அளவு கரைய வேண்டும். 2. எளிதில் ஆவியாகக் கூடாது, 3. நீரில் கரைந்து வெளியேறக்கூடாது, ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள் 811 4. நிறமற்றதாயும், மணமற்றதாயும், சுவையற் றதாயும் இருக்க வேண்டும். 5. நச்சுத்தன்மை வாய்ந்ததாகவோ, தோவை அரிக்கக் கூடியதாகவோ இருத்தல் கூடாது. 6. மலிவாக இருக்க வேண்டும். இயற்கையில் கிடைக்கும் பல பொருள்களில் ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள் கலந்தே உள்ளன. இத் தடுப்பிகள் தன்னாக்சிஜனேற்ற வினையில் ஒரு தேக் கக் காலத்தைத் தோற்றுவிக்கின்றன. இத்தேக்கக் காலத்தில் தடுப்பி ஆக்சிஜனேற்றமடைந்து மூலப் பொருள் ஆக்சிஜனேற்றமடையாமல் காக்கிறது. தேக்கக்காலம் முடிந்த பின்னரே, அதாவது தடுப்பி அனைத்தும் ஆக்சிஐனேற்றமடைந்த பின்னரே மூலப் பொருள் குறிப்பிடத்தக்க அளவு ஆக்சிஜனேற்றம் அடையத் தொடங்குகிறது. எனவே தேக்கக்காலத்தை ஆக்சிஜனேற்றத் தடுப்பியின் திறனைக் குறிக்கும் அளவையாகக் கருதலாம். தேக்கக்காலம் அதிகமா யிருப்பின் தடுப்பி திறன்மிகுந்ததெனக் கருதலாம். தேக்கக்காலத்தை அளப்பதன் மூலமே பல்வேறு தடு பொருள்களின் திறன் ஒப்பிடப்படுகிறது. தடுப்பி யின் தன்மையைப் பொறுத்து அதன் திறன் வேறு படுகிறது என்பதைக் கீழ்க்காணும் அட்டவணை புலப்படுத்துகிறது. கியூமீனின் தன்னாக்சிஜனேற்றத் தடுப்பு (62.5°C வெப்பநிலையில் ஒரு வளிமண்டல ஆக்சிஜன் அழுத்தத் தில்) தடுபொருள் ஃபீனால் 2, 6- இரு -t- பியூட்டைல் p-கிரசால் இருஃபினைல் பிக்ரைல் ஹைட்ரசைடு 4 t - பியூடைல்காட் கால் N - மெத்தில் அனிலீன் p- மெத்தாக்சி இரு ஃபினைலமின் இருஃபினைலமீன் ஒப்பீட்டுத் திறன் 1.00 3.30 1,60 14.00 1.20 6.10 2.10 N-N' இருஃபினைல் - P - ஃபினைலீன் இருஅமீன் 16,00 p-ஹைட்ராக்சி இருஃபினைலமீன் 5.60 உணவுப் பொருள்களைக் காக்க ஆக்சிஜனேற் றத் தடுபொருள்கள் தொன்று தொட்டே கையாளப் பட்டு வந்திருக்கின்றன. உணவுப் பொருள்களுடன் சேர்க்கப்படும் இலவங்கம் போன்ற பொருள்கள் நறுமணத்தைத் தருவதோடு பெராக்சைடுகள் உரு வாவதைத் தடுத்து உணவுப்பொருள்கள் ஆக்சிஜ னேற்றம் அடையாமல் காக்கின்றன என நவீன ஆய்வுகள் நிறுவியுள்ளன. எனவே இலவங்கம்