பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/843

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சிஜன்‌ ஏற்றம்‌ 813

படம் - 1 இலும். நைட்ரஜன், கந்தகச் சேர்மங்களின் கட்டமைப்பு படம்-2இலும் காட்டப்பட்டுள்ளன. வண்ணப் பொருள்களைக் காக்கப் பயன்படுத் தப்பெறும் ஆச்சிஜனேற்றத் தடுபொருள் அவ்வண் ணத்தைப் பாதிக்காமல் ஆக்சிஜனேற்றத்தை மட்டும். தடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டும். பெரும் பாலும் ஃபீனால்கள், ஃபீனாலிக் சல்ஃபைடுகள், பாஸ்ஃபேட் எஸ்ட்டர்கள் ஆகியவை இதற்குப் பயன்படுகின்றன. சில தடுப்பிகள் திறன் மிகுந்தவை யாயிருந்த போதிலும் வண்ணத்தை நீக்குபவையா யுள்ளன. இவ்வகைத் தடுப்பிகள் கரிமப்பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகு தடுப்பிகளில் பெரும்பாலானவை ஈரிணைய அமீன் தொகுதி- NH -ஐப் பெற்றுள்ளன. விக்க ஆக்சிஜனேற்றத் தடுப்பிகளின் திறனை ஊக்கு அவற்றுடன் சில ஊக்கிகள் சேர்க்கப்படு கின்றன. இவ்வூக்கிகள் தாம் எவ்வித மாற்றமுமடை யாமல் தடு பொருளின் திறனை மட்டும் அதிகரிக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. பாஸ்ஃபார்க், சிட்ரிக், அஸ்கார்பிக் அமிலங்கள் போன்றவை தடுப் பிகளின் ஊக்கிகளாய்ச் செயல்படுகின்றன. இவ்வூக் கிகள் தாமே ஆக்சிஜனேற்றத் தடுபொருள்களாய்ச் செயல்படுவதில்லை. தேவைக்கும், பயன்பாட்டிற்குமேற்ப வெவ்வேறு வகை ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக வெண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்கப் பயன்படும் தடுப்பி, தானி யங்கி ஊர்திகளின் சூடான உயவு எண்ணெய்களைக் காக்கப் பயன்படாது. எனவே தேவைக்கேற்பத் தகுந்த தடுபொருள்களைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்த வேண்டும். நூலோதி - த.க. 1. McGraw-Hill Encyclopaedia of Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. of Chemical Encyclopaedia 2. Kirk-Othmer, Technology, Vol.3, Third Edition, John Wiley & Sons, New York, 1983. ஆக்சிஜன் ஏற்றம் சில வேதி வினைகளில் தனிமங்களுடன் அல்லது வேதிப் பொருள்களுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து ஆக்சிஜன் ஏற்றம் 813 சில புதிய பொருள்கள் தல்களை ஆக்சிஜன் கூடும் reaction) என்கிறோம். எடுத்துக்காட்டாக,மக்னீசியம் காற்றில் எரிந்து மக்னீசியம் ஆக்சைடு ஆகிறது. இதைப்போல் கந்தகம் காற்றில் எரிந்து சல்ஃபர்டை ஆச்சைடைக் கொடுக்கிறது. இவ்விரு வினைகளும் ஆக்சிஜனேற்றத்தினால் நடைபெறுகின்றன. உருவாகின்றன. அம்மாறு வினை (oxidation 2 Mg + 0, - 2Mgo $ + 0, SO, இந்த ஆக்சிஜன் ஏற்ற வினையைத் தனிமங்களில் உள்ள எலெக்ட்ரான்களின் மாற்றங்களால் விளக்க லாம். ஒரு தனிமம் அல்லது சேர்மம் ஆக்சிஜனுடன் சேர்வதால் அது எலெக்ட்ரான்களை ஆக்சிஜனுக்குத் தந்துவிட்டு வேதியியற் பிணைப்பு உண்டாக்குகிறது. இந்த மாற்றங்களினால் ஆக்சிஜனேற்ற எண் (oxida- tion number)மாறுதல் அடைகிறது.ஆதலால் ஆக்சிஜன் ஏற்றம் எலெக்ட்ரான்கள் இழப்பாகவோ ஆக்சிஜன் ஏற்ற எண் அதிகரிப்பாகவோ வரையறுக்கப்படு கிறது. எடுத்துக்காட்டாக மக்னீசியம் ஆக்சைடு மக்னீசியம் இரண்டு ஏற்படும் வேதிவினையில் எலெக்ட்ரான்களை இழக்கின்றது. ஆக்சிஜனுக்கு இரண்டு எலெக்ட்ரான்கள் சேர்க்கப்படுகின்றன. ஆக்சிஜனேற்ற எண் 0 0 +2 -2 Mg + O → MgO t 2e- 2e- மக்னீசியத்தின் ஆக்சிஜன் ஏற்ற எண் அதிகமாகிறது. மக்னீசியத்துடன் குளோரின் வினைபுரிவதால் கிடைக்கும் மக்னீசியம் குளோரைடில் மக்னீசியத்தின் ஆக்சிஜன் ஏற்ற எண் அதிகமாகிறது. ஆக்சிஜனேற்ற எண் 0 0 +2-2 Mg + 2C1 + → MgCl, 2e 2e இந்த வினையில் குளோரின் ஓர் ஆக்சிஜனேற் றியாகக் (oxidant) கருதப்படுகிறது. இதன் மூலம், வேதியியல் மாற்றங்களில் ஆக்சிஜன் சேர்க்கப்படா விடினும் ஆக்சிஜனேற்றம் நிகழ்கின்றது. இரும்பு (II) உப்புக் கரைசல் ஆக்சிஜனேற்றத் தினால் இரும்பு (III) உப்புக் கரைசலாகும் பொழுது