814 ஆக்சிஜன் ஏற்ற முறை
814 ஆக்சிஜன் ஏற்ற முறை எலெக்ட்ரான்கள் இழப்பு ஏற்படுகிறது. இதுவும் ஆக்சிஜனேற்ற நிகழ்ச்சிக்கு மற்றோர் எடுத்துக் காட்டாகும். வேதிவினையில் ஆக்சிஜனேற்றமும், இறக்கமும் ஒருங்கே நடைபெறுகின்றன. வேதிவினையில் பங்கு ஏற்கும் ஒரு பொருள் ஆக்சிஜனேற்றம் அடைந்தால் அவ்வினையினால் மற்றொரு பொருள் குறைக்கப் இம்மாற்றத்தில் படுகிறது (reduction). எலெக்ட் ரான் சேர்ப்பு, குறைப்பு வினையாகக் (reduction) கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சோடியம் குளோரைடு, சோடியம் உலோகத்துடன் குளோரின் சேர்க்கையில் பெறப்படுகிறது. 2 Na + Cl, → 2 NaC1 இங்கு சோடியம் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. குளோரின் இவ்வினையில் குறைக்கப்படுகிறது. ஒரு சேர்மத்திலிருந்து ஹைட்ரஜன் நீக்கப்பட்டா அவ்வினையை ஆக்சிஜனேற்றம் லும் கூறலாம். என்று MnO + 4 HCI → MnC), + 2 H, O + Cl2 H₁S + Cl₂ 2 HCI + $1 CuO + H, Cu + H,O 2 மேற்கூறிய வினைகளில் மாங்கனீஸ் டை ஆக் சைடு, குளோரின், தாமிர ஆக்சைடு, ஹைட்ரஜனை நீக்குவதால் ஆக்சிஜனேற்றப் பொருள்களாக (oxidising agents) கருதப்படுவதுடன் வினைகளும் ஆக்சிஜனேற்றத்துக்குச் சான்றாகின்றன. ஆக்சிஜனேற்றம், குறைப்பு ஆகிய வினைகளை ஏற்ற-இறக்க வினை (redox reaction) என்றும் கூறலாம். மக்னீசியம் குளோரைடு உண்டாகும் வினையில் ஒவ்வொரு மக்னீசிய அணுவும் இரண்டு எலெக்ட்ரான இழப்பினால் ஆக்சிஜனேற்றம் அடை கிறது. இரண்டு குளோரின் அணுக்களும் ஒவ்வோர் எலெக்ட்ரானைப் பெறுவதால் ஆக்சிஜன் குறைப்பு நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் வினை களில் எந்தத் தனிமம் அல்லது பொருள் எலெக்ட் ரான்களை இழக்கிறதோ (ஆக்சிஜனேற்றம் ஏற்படு கிறதோ) அது எலெக்ட்ரான் வழங்கி (electron doner) அல்லது எலெக்ட்ரான் குறைப்பானாகிறது (reductant). ஏனெனில் இழக்கப்பட்ட எலெக்ட்ரான் மற்றொரு பொருளை எலெக்ட்ரான் எண்ணிக்கையில் குறையச் செய்கிறது. மேலும் ஒரு பொருள் எலெக்ட்ரான் ஏற்பினால், எலெக்ட்ரான் ஏற்றம் (electronation) அடைகிறது. மின்னாற் பகுப்பு வினைகளில் ஆக்சிஜனேற்ற வினைகளைக் கீழ்க்கண்டவாறு விளக்கலாம். உப்புச் சேர்மங்கள் நீரில் கரைவதால் அயனிகளாகப் பிரிகின்றன. NiCl Ni + + 2 CI- → Ni இக்கரைசலை மின்னாற்பகுத்தால் நேர் மின் வாயில் ஆக்சிஜனேற்றம்(oxidation at the ancde) நடை எதிர் மின்வாயில் ஆக்சிஜன் குறைப்பு பெறுகிறது. (reduction at the cathode; நடைபெறுகிறது. வினைகளைக் கீழ்க்கண்டவாறு விளக்கலாம். 2C1 Cl + 2e நேர்மின்முனை Ni 2+ + 2e → Ni எதிர்மின்முனை இவ் ஃபுளோரின், குளோரின், ஆக்சிஜன், ஓசோன், பொட்டாசியம் பர்மாங்கனேட்டு, பொட்டாசியம் டைகுரோமேட்டு, நைட்ரிக் அமிலம், அடர் சல்ஃப்யூரிக் அமிலம் ஆகியவை ஆக்சிஜனேற்றிகளுக்கு (oxidi- sing agents) எடுத்துக்காட்டுகளாகும். உலோகங்கள், ஹைட்ரஜன், ஹைட்ரஜன் சல்ஃபைடு, கார்பன் மோனாக்சைடு, சல்ஃப்யூரஸ் அமிலம் ஆகியவை ஆக்சிஜன் ஒடுக்கிகளுக்கு (reducing agents) எடுத்துக் காட்டுகள் ஆகும். ஹைட்ரஜன் பெராக்ஃசைடு, நைட்ரஸ் அமிலம் (HNO,) ஆகியவை இரு வினை களிலும் (oxidant and reductant) பங்கு ஏற்கின்றன. இவ்விரு வினைகளும் தொழில்துறையில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. மின்னாற் பகுப்பு வினைகளில் இந்த மாறுதல் ஏற்படுகிறது. பூமியிலிருந்து கிடைக் கும் தாதுக்களிலிருந்து, உலோகங்களைப் பிரித்தெடுக் கும் முறையில் இவ்வினை முக்கியமாகக் கருதப்படு கிறது. மேலும் எரிபொருள் எரி (combustion of fuel) வினைகளிலும் ஆக்சிஜனேற்றம் மிக முக்கியமானது. எஸ்.கி. நூலோதி McGraw Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. ஆக்சிஜன் ஏற்ற முறை சில உலோகங்கள் ஆக்சிஜனில் எரிந்து அவற்றின்ஆக் சைடுகளைக் கொடுக்கின்றன. மக்சீனீயம் ஆக்சிஜனில்