பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/847

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சிஜன்‌ ஏற்ற முறை 817

2 Na + 2 H,O → 2 Na + + 2 OH + H, நீர்ம நிலையில் எந்த ஓர் உலோக நேர் அயனியும் உலோகமாக ஓடுக்கம் அடைந்து, ஆக்சிஜன் ஏற்ற வினையைச் செய்கின்றது. உலோக நேர் அயனியின் ஆக்சிஜன் ஏற்றத்திறன், அதன் செந்தர இறக்க மின் னழுத்தத்தைப் (standard reduction potential, SRP) பொறுத்து அமையும். எடுத்துக்காட்டாக, Ai' + (SRP 1.66 V) அல்லது Zn'+ (SRP = +0.76V) வலிமை குறைந்த ஆக்சிஜன் ஏற்றிகளாகச் (oxidising agents) செயல்படுகின்றன. ஆனால் Ag+ (SRP 0.80 V) H+ அயனியை விட அதிக வலிமை மிக்க ஆக்சிஜன் ஏற்றியாகும். நீர் ஏறிய (hydrated) உலோக நேர் அயனியின் செறிவு, செந்தர அளவான ஒரு மோலுக்குக் (mole) குறைவாக இருக்குமானால், அதன் செந்தர இறக்க மின் அழுத்தத்தின் அளவு குறைகிறது. எனவே ஆக்சிஜனேற்ற வினையின் அளவும் குறைகிறது. தனிம நிலையில் கிடைக்கும் ஆக்சிஜன் ஏற்றும் பொருள்களுள் Og, C1, முதலியன முக்கியமானவை. இவற்றுள் 0, மிகவும் அதிக அளவில் கிடைக்கக் கூடியது. மேலும் நீரில் கரையும் தன்மையுடையது. பலசோதனைச் சாலைகளில் பயன்படுத்தப்படும் நீர், வளி மண்டலத்திலுள்ள ஆக்சிஜன் கரைந்து தெவிட்டிய நிலை ஆக்கப்பட்ட கரைசலாகும். திறந்த பாத்திரங்களில் நிகழ்த்தப்படும் வேதிவினைகளில் ஆகசிஜனும் புகுந்து பின்வரும் வினையை நிகழ்த்து கிறது. 40, + 2 H + + 2 e H,O ( + 1.23V) 2 அமில நிலையில் O, ஒரு சிறந்த ஆக்சிஜன் ஏற்றி யாகச் செயல்படுவதற்கு H+ அயனி காரணம். ஆகை யால்தான் ஆக்சிஜனின் ஆக்சிஜன் ஏற்றும் திறன் பின்வரும் வரிசையில் அமைகிறது. அமிலக் கரைசல் நடு நிலைக்கரைசல் கார நிலைக்கரைசல். ஹைட்ரோ அயோடிக் அமிலம் உள்ள பாத்தி ரத்தை, காற்றுப் புகும்படித் திறந்து வைத்தால் முதலில் மஞ்சளாகவும், பின்பு பழுப்பு நிறமாகவும் மாறுகிறது. அதாவது அயோடைடு அயனி ஆக்சிஜன் ஏற்றம் அடைந்து அயோடினாக மாறுவதே இதற்குக் காரணம். 2 1 O, + 2 HI → H,O + 1, (SRP = +0.70V) HBI அமிலம் ஓரளவு ஆக்சிஜன் ஏற்றம் அடைந்து Br, ஆக வெளியேறுகிறது. HCI அமிலம் மிகவும் குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் ஏற்றம் அடைகிறது. இவற்றின் செந்தர மின்முனை அழுத்தம் எதிர்க் குறியீட்டில் உள்ளதே இதற்குக் காரணம். அ.க-2- 52 ஆக்சிஜன் ஏற்ற முறை 817 ஈல்ஃபைடு கரைசல் காற்றுப்படும்படி வைக்கப் படுமானால் ஆக்சிஜன் ஏற்றம் அடைந்து கந்தகம் வீழ்படிவாகிறது. 2- 1 0, + H,O + S → 2 OH + S (SRP = 0.80V) 2 இடை நிலைத் தனிமங்களின் (transition elements) நேர் அயனி, இடைநிலை ஆக்சிஜன் ஏற்ற நிலையில் இருக்குமானால், இதை, ஆக்சிஜன் எளிதில் ஆக்சி ஜன் ஏற்றம் அடையச் செய்கிறது. எடுத்துக்காட்டாக, Feu அயனி, பச்சை நிறத்திலுள்ள நீர் ஏறிய இரும்பு (II) சல்ஃபேட்டிலிருந்து பழுப்பு நிறமுடைய இரும்பு (III) சல்ஃபேட்டாக ஆக்சிஜன் ஏற்றம் அடைகிறது. இரும்பு (II) அயனிக் கரைசலுடன் OH அயனி சேர்க்கப்படுமானால் முதலில் வெளிறிய பச்சை நிற முடைய Fe(OH) வீழ்படிவாகிப் பின்பு, பழுப்பு நிற முடைய Fe(OH), வீழ்படிவாகிறது. 2Fe(OH), + 10, + H,O → 2 Fe (OH), ஆக்சிஜன் கரைந்துள்ள நீர்க்கரைசலை உலோ கத்துடன் சேர்த்தால் உலோகம் அரிமானம் அடை கிறது. புதிதாகத் தயாரிக்கப்பட்ட உப்புக் கரைசல் அல்லது உலோகத்தின் மேற்பரப்பில் மெல்லிய படல மாக அமையும் நீர், நீர்க்கரைசல் எனப்படுகிறது.ஓர் உலோகம் அரிமானத்திற்குட்படுவது அதன் செந்தர ஆக்சிஜன் ஏற்ற மின்னழுத்தத்தைப் பொறுத்தது. (SOP), ஆகையால்தான், Na, Ca போன்ற உலோகங் கள் எளிதில் ஆக்சிஜன் ஏற்றம் பெற்று ஆக்சைடு களைக் கொடுக்கின்றன. (Na SOP = 2.71 V, Ca SOP = 2.87V) தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களின் நியம ஆக்சிஜனேற்ற மின்அழுத்தம் எதிர் குறியீட் டில் அமைவதால் அரிமானத்திற்குட்படுவதில்லை. இரும்பு அரிமானத்திற்குட்படுவது ஒரு குறிப்பிடத் தக்க ஆக்சிஜனேற்ற வினையாகும். நடுநிலைத் தன் மையிலுள்ள NaCl போன்ற உப்புகள் கரைந்துள்ள நீர் இரும்பில் பட்டவுடன் ஆக்சிஜன் ஏற்றம் அடைந்து அரிமானம் ஆவதைப் பின்வரும் வினை யின் மூலம் காட்டலாம். Fe + 10 + H,O → Fe(OH), 2 இரும்பு (II) ஹைட்ராக்சைடு மேலும் ஆக்சிஜன் ஏற்றம் அடைந்து இரும்பு (III) ஹைட்ராக்சைடாக மாறுகிறது. வினையின் இறுதியில் கிடைக்கும் செம் பழுப்பு நிற வீழ்படிவு இரும்பு (III) ஹைட்ராக் சைடாகும். தனிம நிலைக் குளோரினும் (CI) வலிமை மிக்க ஆக்சிஜன் ஏற்றியாகும். இதன் செந்தர இறக்க மின்