பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/848

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 ஆக்சிஜன்‌ ஏற்ற முறை

818 ஆக்சிஜன் ஏற்ற முறை அழுத்தம் +1.36Vஆக இருப்பதே இதற்குக் காரணம். ஆக்சிஜனைப் போன்றல்லாது, குளோரின் நீருடன் சேர்க்கப்படுமாயின் பல் விளை பொருள்களைக் கொடுக்கின்றது. அதாவது குளோரின் ஒரே சமயத் தில் ஆக்சிஜன் ஏற்றமும் இறக்கமும் அடைகிறது. இதற்குப் பின் வரும் வினை எடுத்துக்காட்டாக அமையும். 1 Cl₂ + H₂O → HOCI + H+ C1- அதாவது குளோரின் இருபாதியாகப் பிரிந்து HCI (CI- -) ஆகவும், HOCI (C1+ = + 1) - ஆகவும் ஆக்சிஜன் ஏற்றம் அடைகிறது. CI, HO ஆகியவை களின் வேதிச் சமநிலை, H+ அயனியின் செறிவைப் பொறுத்து அமையும், காரக்கரைசலில் H+ அயனி யின் செறிவு குறைவு. எனவே CI, காரக்கரைசலில் அதிக அளவு கரையும். சாதாரண வெப்பநிலையில், NaOH கரைசலுடன் நடைபெறும் வினை வருமாறு. கீழ் Cl, + 2 OH → CIO + + H₂O வெப்பப்படுத்தப்பட்ட NaOH அல்லது KOH கரை சலில் நடைபெறும் வினை மாறுபட்டதாக உள்ளது. 3 Cl₂ + 6 OH¯ → CIO, +5 C] + 3 H,O 4 ஆக்சிஜன் உள்ள எதிர் அயனியின் மைய அணு நேர்மின் சுமை கொண்டிருக்குமானால் இந்த எதிர் அயனியினால் ஆக்சிஜனேற்ற வினை நடைபெறும். எடுத்துக்காட்டாக, NO, -, $0,2-, Cr,O,-, MnO;- இவற்றில் முறையே N = + 5, $ = + 6, Cr = +6, Mn +7 ஆக்சிஜன் ஏற்றநிலை உள்ளது. இவற்றுள் NO- மற்றும் SO,2- ஆகிய இரண்டும் அமில நிலையில் சிறந்த முறையில் ஆக்சிஜன் ஏற்றி யாகச் செயல்படுகின்றன. காரக் கரைசலிலும், நீரி லும் இது ஆக்சிஜன் ஏற்றியாகச் செயல்படுவதில்லை. இதைப்போன்றே CrO,, MnO, ஆகிய கள் அமில நிலையில் வலிமைமிக்க ஆக்சிஜன் ஏற்றி களாகச் செயல்படுகின்றன. அயனி ஆக்சிஜன் ஏற்ற வேதிப் பொருள்கள்: ஆக்சிஜன் ஏற்ற அல்லது ஒடுக்க வினையில் ஓர் அணு அல்லது மூலக்கூறு அல்லது அயனி எலெக்ட்ரானை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்குமானால் அப்பொருள் ஆக்சிஜன் ஏற்ற வேதிப் பொருளாகும். ஓர் அமைப் பிலுள்ள ஒரு தனிமம் அதற்கென உள்ள குறைந்த அளவு ஆக்சிஜன் ஏற்ற எண்ணிற்கு அதிகமாகக் கொண்டிருக்குமானால், அந்த அமைப்பே ஆக்சிஜன் ஏற்ற வேதிப் பொருளாகச் செயல்படுகிறது. எடுத் துக்காட்டாக C10:7, CIO-, CI, முதலியன வலிமை மிக்க ஆக்சிஜன் ஏற்றியாகச் செயல்படுகின்றன. இவற்றில் குளோரினின் ஆக்கிஜன் ஏற்ற நிலை முறையே + 5, +1, 0 ஆகும். இத்த எண்கள், குளோ ரின் தனிமத்தின் மிகக் குறைந்த ஆக்சிஜன் ஏற்ற எண் 1ஐக் காட்டிலும் அதிகமாகவுள்ளது. . கனிம ஆக்சிஜன் ஏற்ற வேதிப்பொருள்களில் குறிப்பாக நான்கு வகைகள் உண்டு. H+, Ag, Cu+ Fe" + முதலியன நீர்ம நிலையில் ஆக்சிஜன் ஏற்றிக ளாகச் செயல்படுகின்றன. தனிம நிலையில் Oi, Cl, போன்றவையும் எதிர் அயனிகளான NO- S0,-, Cr,0,2-ஆகியனவும் சிறந்த ஆக்சிஜன் ஏற்றும் பொருள்களாகச் செயல்படுகின்றன. இவைகள் நீங்க லாக Brg, MnO, ருத்தினியம் நால் ஆக்சைடு (RuO) முதலியன ஈரிணைய ஆல்கஃஹால்களை (secondary alcohol) ஆக்சிஜன் ஏற்றம் செய்து கீட்டோன்களாக மாற்றுவதற்கு ஆக்சிஜன் ஏற்றிகளாகப் பயன்படுத் தப்படுகின்றன. ஓரிணைய ஆல்கஃஹாலை (primary alcohol) ஆல்டிஹைடாக மாற்ற, காப்பர்க்குரோ மேட் ஆக்சிஜன் ஏற்றும் பொருளாகப் பயன்படுகிறது. ஓர் அமைப்பில் ஆக்சிஜன் ஏற்றம் அடையும் ஏனைய பகுதிகள் எவ்விதப் பாதிப்பும் அடையாமல் -OH தொகுதி மட்டும் ஆக்சிஜன் ஏற்றம் அடை வதற்குப் புரோமாசக்சினிமைடு (C,H,BrNO,) பயன் படுத்தப்படுகிறது. கேட்டகால் (catechol) ஆக்சிஜன் ஏற்றம் அடைவதற்குச் சோடியம் பர்அயோடேட்டு (NaIO ) பயன்படுத்தப்படுகிறது. தொழிலகச் செயல் முறைகள். சல்ஃப்யூரிக் அமி லத்தை அதிக அளவில் தயாரிக்கும் முறைகளில் 'தொடுமுறையும் (contact process) ஒன்றாகும். இம்முனையில் கந்தகத்தைக் காற்றில் எரித்து ஆக்சிஜன் ஏற்றம் அடையச் செய்து SO, பெறப் படுகிறது. பின்பு V,0, முன்னிலையில் ஆக்சிஜன் ஏற்றம் அடைந்து S0, ஆக மாறுகிறது. தயாரிக்கப் படும் H,SO- இன் அளவு So,-ஐப்பொறுத்தது. தாவரங்களுக்கு உயிர்ச் சத்தாக இருப்பது நைட்ரஜன். உரங்களைத் தயாரிக்கும் முறைகளில் ஹேபரி Haber) ஆஸ்ட்வால்டு (Ostwald) முறைகள் மிகச் சிறந்தவை களாகும். இவ்விரு முறைகளிலும் ஆக்சிஜன் ஏற்றமே பயன்படுத்தப்படுகிறது. ஹேபர் முறையில் தயாரிக்கப்பட்ட அம்மோனியா, பிளாட்டினம் உலோகத்தின் முன்னிலையில் ஆக்சிஜன் ஏற்றம் அடைந்து நைட்ரிக் ஆக்சைடாக (NO) மாறுகிறது. பின்பு அதிக அளவு ஆக்சிஜனுடன் சேர்ந்து நைட்ர ஜன் டைஆக்சைடாக (NO,) மாறுகிறது. இதை நீரில் கரைத்து நைட்ரிக் அமிலம் (HNQ,) பெறப்படு கிறது. இந்த நைட்ரிக் அமிலத்திலிருந்து, நைட்ரேட் உப்புகள் பெறப்பட்டு, உரங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன.