ஆக்சிஜன் ஏற்றி 819
கனிம இயலில் செயல் முறை எளிதில் ஆக்சிஜ னேற்றம் அடையும் எந்த ஒரு பொருளின் எடையை யும் பருமனறி பகுப்பாய்வின் (volumetric analysis) மூலம் துல்லியமாக அறியலாம். அமில, கார முறித் தலைப் (acid-base titration) போலவே இரு ஆக்சி ஜன் ஏற்றும் பொருள்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன் ஏற்ற-ஒடுக்க முறித்தல் (oxidation-reduction titra- tion, redox titration) பார்க்கப்படுகிறது. இவ்வகை முறித்தல் வினைகளில் KMnO,, K,Cr,O, வெகு வாகப் பயன்படுத்தப்படுகின்றன. பருமனறி பகுப் பாய்வின் மூலம் KMnO, கரைசலைப் பயன்படுத்தி Fe+ அயனியின் அளவு அறியப்படுகிறது. இதைப் போன்றே Fe2+ டைஃபீனைல்அமீன் முன்னிலை யிலும் Fe+ இன் அளவு அறியப்படுகிறது. நீரிலும், ஆக்சி அமிலங்களிலும் கரையாத பொருள்கள், ஆக்சிஜனேற்றும் பொருளில் கரைப்ப தால் அவற்றை எளிதில் பகுப்பாய்வு செய்ய இயல் கிறது. எடுத்துக்காட்டாக நைட்ரிக் அமிலத்தால் Cus கரைக்கப்படுவதின் மூலம் Cu + அயனி அறியப்படு கிறது. குரோமியம் (III) உப்பு அதனை குரோமியம் (IV) உப்பாக ஆக்சிஜன் ஏற்றம் அடையச் செய்து அறியப்படுகிறது. இவ்வாறு மாற்றுவதற்கு Na,O, ஆக்சிஜன் ஏற்றும் பொருளாகப் பயன்படுத்தப்படு கிறது. நூலோதி B எம்.ந. 1. Masterton, William L. and Slowinski, Emil J., Chemical Principles with Qualitative Analysis, W.B. Saunders Company, Philadelphia, London, 1978. 2. March Jerry, Advanced Organic Chemistry, McGraw-Hill Kogakusha Ltd, Tokyo. 1982. 3. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. ஆக்சிஜன் ஏற்றி ஆக்சிஜன் ஏற்றம் என்பது எலெக்ட்ரான் இழப்பு (deelectronation). எனவே எலெக்ட்ரானை ஏற்க வல்ல பொருளை {electron aceptor) ஆக்சிஜன் ஏற்றிகள்(oxidising agent) எனக் கூறலாம். அதே போவ் ஆக்சிஜன் இறக்கம் என்பது எலெக்ட்ரான் ஏற்பு. எனவே எலெக்ட்ரானை வழங்கும் (electron 21.-2-5221. ஆக்சிஜன் ஏற்றி 819 donor) பொருளை ஆக்சிஜன் இறக்கி (reducing agent) எனக் கூறலாம். துத்தநாகத்தை ஃபெரஸ் சல்ஃபேட் கரைசலில் வைத்தால் துத்தநாகம் அயனியாகிறது. ஃபெரஸ் அயனி இரும்பாகிறது. Zn + Fe+ துத்தநாகம் ஃபெரஸ் Zn2+ + Fe துத்தநாக அயனி அயனி இதில் ஃபெரஸ் அயனி ஆக்சிஜன் ஏற்றியாகும். ஃபெரஸ் அயனி துத்தநாக அணுவிடமிருந்து இரு எலெக்ட்ரான்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் துந்த நாகம் ஆக்சிஜன் ஏற்றம் அடைகிறது. மேலும் துத்தநாகம் ஆக்சிஜன் இறக்கி ஆகும். ஏனென்றால் துத்தநாகம் இரு எலெக்ட்ரான்களை ஃபெரஸ் அய னிக்கு வழங்குவதால் ஃபெரஸ் அயனி பெற்றுக் கொண்டு ஆக்சிஜன் இறக்கம் அடைகிறது. ஆக்சிஜன் ஏற்ற வினை நிகழும்போது அங்கு ஆக்சிஜன் இறக்கமும் நிகழும். அதாவது ஒரு பொருள் எலெக்ட்ரானை இழந்தால் இன்னொரு பொருள் எலெக்ட்ரானை ஏற்கவேண்டும். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு ஒரு சிறந்த ஆக்சிஜன் ஏற்றியாகும். இப்பொருளில் பெர்மாங்க னேட்டு அயனிதான் ஆக்சிஜன் ஏற்றவினைக்குக் காரணமாக உள்ளது. ஃபெரஸ் அயனி ஃபெரிக் அயனியாக ஆக்சிஜன் ஏற்றம் அடைவதற்கு அமிலங் கலந்த பெர்மாங்கனேட்டை ஆக்சிஜன் ஏற்றியாகப் பயன்படுத்தலாம். இவ்வினையில் ஃபெரஸ் அயனி எலெக்ட்ரானை வழங்குகிறது; ஃபெரஸ் அயனி ஆக்சிஜன் ஒடுக்கி, பெர்மாங்கனேட் அயனி எலெக்ட் ரானை ஏற்றுக் கொள்வதால் அது ஓர் ஆக்சிஜன் ஏற்றி. 5 Fe²+ ஃபெரஸ் அயனி 3+ 5 Fe3 + 5 e¯ ஃபெரிக் அயனி 2+ (1) MnO + 8 H + 5e Mo + 4 H,O (2) பெர்மாங் அமிலம் கனேட்டுஅயனி மாங்கனீஸ் அயனி நீர் MaO, + $Fe+ + 8 H+ Mn + + 5Fe + +4H, O 4 டைக்குரோமேட் அயனியும் ஒரு சிறந்த ஆக்சிஜன் ஏற்றியாகும். நைட்ரைட்டு அயனியை