பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/854

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 ஆக்ட்டீனியம்‌

824 ஆக்ட்டீனியம் ஆக்சிஜன் (0) அயனிகளால் சூழப்பட்டுள்ளது. இதில் ஒவ்வோர் ஆக்சிஜன் அயனியும் மூன்று டைட்டானியம் அயனிகளுக்கு இடையில் அமர்ந்து நிலை வரிசையில் காணப்படும். கனிமப் பிளவு அடிஇணைவடிவப் பக்கத்திற்கும் (001), கூம்புப் பட்டகப் பக்கத்திற்கும் (111) இணை யாகத் தெளிவாகக் காணப்படும். கனிம முறிவு மித சங்கு முறிவுத் தன்மையைப் பெற்றதாகும். நொறுங் கும் தன்மையுடையது; கடினத்தன்மை 5 முதல் 6 வரையும், அடர்த்தி எண் 3.82 முதல் 3.95 வரை யும் மாறும். இக்கனிமங்களைச் சிறிது சூடாக் கினால் அடர்த்தி எண் 4.11 முதல் 4.16 வரை உயரும். இவை வைர மிளிர்வைப் பெற்றவை. பலவகையான பழுப்பு, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன. உராய்வுத்துகள் நிறமற்றது. ஒளிஇயல்பில் இதன் படிகங்கள் ஒளி ஊடுருவும் தன்மையிலிருந்து ஏறத்தாழ ஒளி ஊடுருவாத் தன்மைவரை மாறுபவைகளாக வெவ் வேறு நிலையில் காணலாம். ஒளி இயலாக இக் கனிமங்கள் எதிர்மறைக் கனிமங்களாகக் கணிக்கப் படுகின்றன. இவற்றின் ஒளிவிலகல் எண் இடை வெளி சற்று அதிகமாகவே காணப்படும். இயல்பு ஒளிக்கதிருக்கு (0) இணையாக ஒளிவிலகல் எண் 2.534-2.564 ஆகவும், இயல்பு மீறிய கதிருக்கு (E) இணையாக 2.488-2.497 ஆகவும் இருக்கும். இவ் வகை அடர்த்தி எண்ணில் மிகுந்த வேறுபாடு காண்பது இவற்றினுள் அடங்கிக் காணப்படும் இரும்பின் அளவு வேறுபாட்டைப் பொறுத்ததாகும் என்று கருதுகிறார்கள். இவை பொதுவாக ஓரச்சு ஒளி இயல்புக் கனிமங்களாக இருப்பினும், சில சமயங்களில் ஈரச்சு ஒளி இயல்புக் கனிமங்களாகவும் காணப்படலாம். அவ்வமயம் இதன் ஒளி இயல் அச்சுக் கோணம் (2V) மிகக் குறைந்து காணப்படும். இவற்றின் தெளிவான படிக விளிம்பும் (high relief), பிர இரகாசமான நிறமும் மற்றும் எண்பட்டக வடிவும் ஏனையக் கனிமங்களிலிருந்து இவற்றை வேறுபடுத்திக் காண உதவுகிறது. இதையொத்த வேதியியல் பண்பு கொண்ட ரூட்டைல், புரூக்கைட்டு கனிமங்களிலிருந்து இவற்றின் ஓரச்சு எதிர்மறை ஒளி இயல்பு இவற்றை எளிதில் வேறுபடுத்திக் கொள்ள உதவுகிறது. இவை டைட்டானியம் கனிமங் முதன்மைக் களிலிருந்து (primary minerals), அவை வேதியியல் பண்புகளில் மாறுபடும்பொழுது இரண்டாம் தரக் கனிமங்களாக (secondary minerals) உருவானவைக ளாகும். இவை கிரானைட் (granite), குவார்ட்சு போர்ஃபிரி (quartz porphyry), வரிப்பாறை (gneiss ), குளோரைட்டு மைக்காசிஸ்ட் (chlorite-mica schists) போன்ற பாறைகளில் குவார்ட்சு (quartz), அடு லேரியா (adularia), ஹெமட்டைட்டு (hematite), அப் படைட்டு (apatite), டைட்டானைட்டு (titanite) ரூட்டைல் மற்றும் புரூக்கைட் போன்ற கனிமங்க ளோடு கலந்து காணப்படும். சுவிட்சர்லாந்திலுள்ள பிட்னெந்தால் ( Binnental), வலையாஸ் (Valais) ஆகிய இடங்களில், நீண்டு காணப்படும் இதன் வகை யான விசரின் (wiserine) என்ற கனிமம்,கிடைக்கிறது. பிரான்சிலுள்ள போர்க் (Bourg) என்னும் இடத்தில் ஃபெல்ஸ்பார், ஆக்ஸினைட்டு, இலமனைட்டுக் கனி மங்களுடனும், பிரேஸிலிலுள்ள கெராசு என்னும் இடத்தில் குவார்ட்சு கனிமங்களுடனும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கொலேரேடாவிலுள்ள பீவன் கிரீக் (Beaver creek), அர்க்கான்சிலுள்ள மேக்னட் கோவ் (Magnet cove) என்னும் இடங்களில் மிகுதி யாகவும் கிடைக்கின்றன. இவை செயற்கை ரூட்டைல் கனிமங்களாக மாற்றப்பட்டு, அதனின்று டைட்டா னியம் எடுக்கக்கூடிய தாதுவாகப் பயன்படுகின் நூலோதி 1- ஞா.வி. றன. ரா. 1. Ford, W. E., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A.N., Winchell., H., Elements of Optical Mineralogy, Fourth Edition, Wiley Eastern Private Limited, New Delhi, 1968. ஆக்ட்டீனியம் ஆக்ட்டினைடு தனிமங்களின் முன்னோடி ஆக்ட் டீனியம் (actinium).இதன் குறியீடு Ac, அணுஎண் 89. கி.பி.1899 ஆம் ஆண்டில் டிபீர்ன் (Debierne) என்ற அறிவியல் அறிஞர் பிட்ச் பிளென்டிலிருந்து (pitch blende) யுரேனியத்தைப் பிரித்தெடுத்தபின் எஞ்சும் பொருளிலிருந்து (residue) ஆக்ட்டீனியத்தைப் பிரித் தெடுத்தார். இது பல பண்புகளில் லாந்தனம் (lanthanum) என்ற தனிமத்தை ஒத்திருக்கிறது. லாந்தனத்திற்குப் பின்னால் வரும் பதினான்கு தனி மங்களையும் லாந்தனைடுகள் (lanthanides) என்று எவ்வாறு சொல்கிறோமோ அதேபோல் ஆக்ட்டீனியத் திற்குப் பின்னால் வரும் பதினான்கு தனிமங்களையும் ஆக்டினைடுகள் (actinides) என்று அழைக்கிறோம். இது தனியாகக் கிடைப்பதில்லை. யுரேனியம், தோரியம் ஆகியவற்றுடன் சேர்ந்தே காணப்படு கிறது.ஆனால், இவற்றில் ஆக்ட்டீனியத்தின் செறிவு மிக மிகக் குறைவு. இயற்கையிலேயே இதற்கு இரண்டு ஐசோடோப்புகள் (isotopes) உள்ளன. இதன் எலெக்ட்ரான் அமைப்பு, 2,8,18,32,18, 9, 2 அல்லது (Rn) 6d' 7s2. C