ஆக்ட்டீனியம் 825
ஆக்ட்டீனியம் 825 Hlla la 1 3 4 Li Be 11 12 0 2 Illa iva Va Via Vital He 5 B C N 6 7 8 0 13 14 15 910 F Ne 16 17 18 Na Mg 1lb IVb Vb Vlb Vilb-VIII lb flb Al Si p S Cl Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac Rf Ha T [58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 தொகுதி (Ce Pr |Nd|pm|$m|Eu Gd Tb Dy Ho Er Tm Vb| Lu] 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 தொகுதி Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr ஆக்ட்டீனியம் ஆக்ட்டீனியத்தின் அடர்வை அதிகரிப்பது கடின மாகும். காரணம்: (1) அதன் தாதுக்களில் ஆக்ட்டீ னியம் மிகமிகக் குறைந்த அள வே உள்ளது. (2) அருமண் உலோகங்களுடன் (rare earth metals) பண்புகளில் பெரிதும் ஒத்திருப்பதால் அவற்றிலிருந்து ஆக்ட்டீனியத்தைப் பிரித்தெடுப்பது எளிதன்று. (3) தனிமைப்படுத்தும் முறையில் ஆக்ட்டீனியமே சிதை வடைந்து பல்வேறு தனிமங்களைக் கொடுக்கிறது. அருமண் உலோகங்களைப் போலவே ஆக்ட்டீனி யத்தையும் அதனுடைய இரட்டை மக்னீசியம் நைட் ரேட்டாக (double magnesium nitrate) மாற்றி, பின்னப்படிகமாக்கல் (fractional crystallisation)முறை யைப் பயன்படுத்திப் பிரித்தெடுக்கலாம். தோரியத்திலிருந்து இரண்டு வழிகளில் ஆக்ட்டீனி யத்தைப் பிரித்தெடுக்கலாம். (1) இரண்டு உலோகங்களும் முதலில் அவற்றின் குளோரைடுகளாக மாற்றப்படுகின்றன. இவற்றின் கரைசல்களைச் சோடியம் தயோசல்ஃபேட்டுடன் சேர்க்கும்போது, தோரியம் வீழ்படிவாகின்றது (precipitated), ஆக்ட்டீனியம் கரைசலில் இருக்கும்; பின்னர் கரைசலிலிருந்து ஆக்ட்டீனியத்தைப் பிரித் தெடுக்கலாம். (2) இம்முறையில் இவ்வுலோகங்கள் அவற்றின் ஆக்சவேட்டுகளாக மாற்றப்படுகின்றன.இவற்றுடன் அமோனியம் ஹைட்ராக்சைடு அல்லது அமிலத்தைச் சேர்த்தால் வீழ்படிவாகின்றது. ஆக்ட்டீனியம் கரை சலில் இருக்கும். அயனிப் பரிமாற்ற முறையைப் (ion exchange அ.க-2-104 method) பயன்படுத்தித் தோரியம், பொலேனீயம் (polonium), பிஸ்மத், காரீயம் ஆகியவற்றின் ஐசோ டோப்புகளிலிருந்தும் ஆக்ட்டீனியத்தைப் பிரித்தெடுக் கலாம். ஆக்ட்டீனியம் உப்புக் கரைசல்களிலிருந்து AcF3ஐ வீழ்படிவாக்கிப் பிரித்தெடுத்து உலர்த்த வேண்டும். பின்னர் 200 °C வெப்பத்தில் லித்தியம் ஆவியுடன் ஒடுக்கும் போது வெள்ளி போன்ற வெண்மையான ஆக்ட்டீனியம் கிடைக்கின்றது அல்லது ஆக்ட்டீனியம் குளோரைடைப் (AcCl,) பொட்டாசியம் ஆவியைக் கொண்டு 350°C இல் ஒடுக்குகின்றபோதும் ஆக்ட்டீ னியம் கிடைக்கும். இதைத் தூய நிலையில் தயார் செய்வது கடினம். ஆக்ட்டீனியம் ஃபுளுரைடு (AcF), ஆக்ட்டீனியம் குளோரைடு (AcC),), ஆக்ட்டீனியம் ஆச்சிஹாலைடு (AcOF மற்றும் AcOCI), ஆக்ட்டீனியம் ஆக்சைடு (Ac,O,), ஆக்ட்டீனியம் சல்ஃபைடு (Ac.S.) முதலியன ஆக்ட்டீனியத்தின் முக்கியச் சேர்மங்கள். ஆக்ட்டீனியம், லாந்தனம் வரிசைத் தனிமங் களோடு ஒத்த பண்புகளைக் கொண்டிருக்கிறது. லாந்தனைடுகளைப் போன்று, ஆக்ட்டீனியமும் + 3 ஆக்சிஜனேற்ற நிலையைக் (oxidation state) கொண் டுள்ளது. லாந்தனைடு சுருக்கம் (lanthanide contraction) லாந்தனத்திற்குப் பின்னால் வரும் பதினான்கு தனிமங்களுக்கும் இருப்பதுபோல் ஆக்ட் டீனியத்தைத் தொடர்ந்துள்ள தனிமங்கள் ஆக்ட்டி. னைடு சுருக்கம் (actinide contraction ) என்ற நிலைக்கு உட்படுகின்றன. ஆக்ட்டீனியம் குறைந்த எலெக்ட்ரான் கவர் ஆற்றலைக் (electronegativity) கொண்டுள்ளது; எளிதில் வினைபுரியக் கூடியது. இதேபோன்று லாந்தனைடு தனிமங்களும் உள்ளன. லாந்தனைடுகளைப் போன்று, ஆக்ட்டீனியம் அயனிப் பரிமாற்றப் பண்பைக் கொண்டுள்ளது. ஆச்ட்டீனியத் தின் நைட்ரேட்டுகள், பர்குளோரேட்டுகள், ஃபுளுரை டுகள், கார்பனேட்டுகள் நீரில் கரையா. லாந்தனைடு சேர்மங்களும் இப்பண்பில் ஆக்டீனியத்தை ஒத்துள் ளன. பெரும்பாலான லாந்தனைடு தனிமங்கள் கதிரி யக்கப் பண்பற்றவை; ஆனால் ஆக்ட்டீனியத் தனிமங் கள் கதிரியக்கப் பண்புள்ளவை. லாந்தனைடு தனி மங்களின் அயனிகள் பெரும்பாலும் நிறமற்றவை; ஆக்ட்டீனியம் அயனி நிறமுள்ளது. வாந்தனைடு தனி மங்கள் அணைவுச்சேர்மங்களைக் (coordination com கொடுப்பதில்லை; ஆனால் ஆக்ட்டீனியம் pounds) கொடுக்க வல்லது. வே.இரா.