பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/856

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 ஆக்ட்டினைடுகள்‌

826 ஆக்ட்டினைடுகள் நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science and Techno_ logy, Vol, I, Fourth Edition, McGraw-Hill Book Company, New York, 1977. ஆக்ட்டினைடுகள் தனிம வரிசை அட்டவணையில் (periodic table) ஏழாவது வரிசையில் ஆக்ட்டீனியத்தைத் (actinium) தொடர்ந்துள்ள தனிமங்கள் ஆக்ட்டினைடுகள் (actini. des) என்றழைக்கப்படுகின்றன. இவற்றை ஆச்ட்டி னோன்கள் (actinones) அல்லது f அடுக்குத் தனி மங்கள் (f-block elements) என்றும் குறிப்பிடுவர். தோரியம் (Th"), புரோட்டாக்ட்டீனியம்(Pal), யுரே னியம் (U2), நெட்டூனியம் (Np3), புளுட்டோனியம் (Pu4), அமெரிசியம் (Am 5), க்யூரியம் (Cm), பெர் கீலியம் (Bk7), கலிஃபோர்னியம் (Cbs), ஐன்ஸ்ட் டைனியம் (Es). ஃபெர்மியம் (Fm100), Gal L_ லீவியம் (Mdi1), நொபீலியம் (Nb102) மற்றும் லாரன்சியம் (Lw103), ஆகிய பதினான்கு தனிமங் களே ஆக்ட்டினைடுகள் என்றழைக்கப்படுகின்றன. யுரேனியத்தை விட அதிக அணு எண் தனிமங்கள் யுரேனியம் கடந்த தனிமங்கள் (trans- uranium elements) ஆகும். அதாவது நெப்டூனியம் முதல் லாரன்சியம் வரை உள்ள பதினோரு மங்கள் யுரேனியம் கடந்த தனிமங்கள். கொண்ட தனி யுரேனியம் கடந்த தனிமங்கள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன் தோரியம் IV B தொகுதியிலும், புரோட்டாக்ட்டீனியம் V B தொகுதியிலும் யுரேனி யம் VI தொகுதியிலும் இடம் பெற்றன. யுரேனியம் கடந்த தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளை வாக மேற்கூறிய தனிமங்கள் தனிமலரிசை அட்ட வணையில் தவறான இடங்களில் வைக்கப்பட்டுள் ளன என்பதைச் சீபோர்க் (Seaborg) உறுதிப் படுத் தினார். லாந்தனைடு தனிமங்கள் முன்னமேயே கண்டு பிடிக்கப்பட்டாலும் பெரும்பாலான பண்புகளில் ஆக்ட்டினைடு தனிமங்கள் லாந்தனைடுகளை ஒத்தி ருப்பதாலும் லாந்தனைடுகளைப் போன்றே ஆக்ட்டி னைடுகளும் தனிமங்களின் கூட்டமென்று உறுதிப் படுத்தப்பட்டு, தனிம மீள்வரிசை அட்டவணையில் வாந்தனைடுகளுக்குக் கீழே ஒரே இடத்தில் வைக்கப் பட்டன. தோரியம், புரோட்டாக்ட்டீனியம், யுரேனியம் முதலியன இயற்கையிலேயே இவற்றின் தாதுக் களாகக் கிடைக்கின்றன. தோரியத்தின் முக்கியத் தாதுக்கள் தோரியனைட்டு (thorianite) ThO,தோ ரைட்டு (thorite) ThSiO4; மோனசைட்டு (monazite) (Ce, Y, La, Th) PO4.யுரேனியத்தின் முக்கிய தாதுக் கள் பிட்ச் பிளெண்டு (pitch blende) UO: கார் னோடைட்டு (carnotite) K,0, 2 U0a. V, O; அட்டு னைட்டு (autunite) Ca (UO,); (PO,),.8 H,O மற்ற தனிமங்கள் அவ்வாறு கிடைப்பதில்லை, அணுக்கரு வினைகளைப் (nuclear reactions) பயன் படுத்திச் செயற்கை முறையில் இவை தயாரிக்கப்படு கின்றன. யுரேனியம் (U231) ஐசோடோப்பிலிருந்து B கதிர்கள் சிதைவடைவதால் நெப்டூனியம் (Np237) கிடைக்கின்றது. 92 U237 -8 Np237 + -le° (2) இதன் அரை ஆயுள் காலம் (half-life period) 2.2 x 106 வருடங்களாகும். யுரேனியமும் (U·8) மெதுவாக நகரும் நியூட் ரான்களும் வினைபுரிந்து புளுட்டோனியம் (Pu239) என்னும் ஐசோடோப்பைக் கொடுக்கின்றன. 92 , U238 + n B -8 U239 39 92Np 230 94 Pu239 வீழ்படிவாக்கல் முறை (precipitation method) கரைப்பானில் கரைத்துப் பிரித்தல்(solvent extraction) முறை, அயனிப் பரிமாற்ற (ion exchange) முறை ஆகிய முறைகளைப் பயன்படுத்தி இத்தனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவை அதிக உருகுநிலை கதிரியக்கப் பண்பும் கொண்ட உவோ யும் கங்களாகும். - ஆக்ட்டினைடுகளில், பதினான்கு f - எலெக்ட் ரான்கள் படிப்படியாக நிரப்பப்படுகின்றன. இவ்வி தத்தில் இவை லாந்தனைடு தனிமங்களுடன் ஒத்திருக் கின்றன. எனவே இவ்விரண்டு வரிசைகளும் தனிம வரிசை அட்டவணையில் ஒத்த இடங்களில் வைக்கப் பட்டுள்ளன. இருப்பினும் இவற்றிற்கிடையே முக்கிய வேறுபாடுகளும் உள்ளன. 4f - எலெக்ட்ரான் களுடன் ஒப்பிடுகின்றபோது ஆக்டினைடுகளின் SI- எலெக்ட்ரான்கள் குறைந்த பிணைப்பாற்றலும் (binding energy), திறன் குறைந்த திரையிடு விளை வும் (screening effect) கொண்டிருப்பதால் இவ்வேறு பாடுகள் தோன்றுகின்றன. இதன் அடிப்படையில் லாந்தனைடுகள் அயனிச் சேர்மங்களையும் (ionic compounds), ஆக்ட்டினைடுகள் அணைவுச் சேர்மங்க ளையும் (coordination compounds) கொடுக்கின்றன.