828 ஆக்ட்டினோமைக்கோசிஸ்
828 ஆக்ட்டினோமைக்கோசிஸ் ஆக்ட்டினோப்போடுகள் இருசமப் பிளவு (binary fission) முறையில் கலவா இனப்பெருக்கம் (asexual reproduction) செய்கின் ன்றன. மேலும் பீடோகெமி (paedogamy) என்னும் முறையிலும் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இந்த முறையில் உயிரியின் போலிக்கால்களனைத்தும் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டு உடலைச்சுற்றி ஓர் உறை உண்டாகி றது. புறஉறையால் மூடப்பட்டுள்ள காலத்தில் இதன் உடல் இருசமப் பிளவு முறையால் இரு செல்களாகப் பிரிகிறது. பின்பு இரு செல்களும் குன்றல் பிரிவு (meiosis) முறையினால் பிரிவுபட, ஒவ்வொன்றிலி ருந்தும் ஒரு துருவத் திரள் (polar body) ஒதுக்கப்படு கிறது. பின்னர் மிகுந்திருக்கும் இரு செல்களில் ஒன்று ஆண் இனச்செல்லாகச் செயல்பட்டு போலிக் கால் ஒன்றைத் தோற்றுவித்துப் பெண் இனச் செல் லாகச் செயல்படும் மற்றொரு செல்லுடன் கலந்து விடுகிறது. இவ்வாறு உருவான கருமுட்டை (zygote) ஓர் உள் உறையால் மூடப்பட்டுப் பின் இரண்டாகப் பிரிகிறது. பின்பு இவ்விரண்டும் புறஉறையை விட்டு இளம் உயிரிகளாக வெளிவருகின்றன. ஆக்ட்டினோஃபிரிஸ் சால் ஹீலியோ ஆக்ட்டினோப்போடா வகுப்பு, சோவா (heliozoa), ரேடியோலேரியா (radiolaria) என இரு வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஹீலி யோசோவா வரிசையில் அடங்குபவை சூரிய நுண் விலங்குகள் (sun animalcules) எனப்படும் சிற்றுயிர் கள். இவை 40 மைக்ரான் முதல் ஒரு மி.மீ. வரை அளவுள்ளவை; நன்னீரில் வாழ்பவை. ஆக்ட்டினோ ஃபிரீஸ் சால் (actinophrys sol), ஆக்ட்டினோஸ்ஃப்ரியம் (artinosphraeum) ஆகிய இரு உயிரிகளிலும் உறுதி யான சட்டகம் போன்ற அமைப்பு இல்லை. ரேடிய லோரியா வகுப்பைச் சேர்ந்த நுண் விலங்குகள் ரேடியோலேரியன்கள் (radiolarians) எனப்படுகின் றன. ரேடியோலேரியன்கள் அனைத்தும் கடல்வாழ் உயிரிகள். பெரும்பாலானவை நீரின் மேற்பரப்பில் மிதப்பவை. இவை இறந்தபின் இவற்றின் உடற் பகுதிகள் கடலின் அடித்தளத்தில் படிந்து அடர்ந்த அசும்பாக (007e) மாறுகின்றன. நூலோதி - Gr. Gσ. 1. Larousse Encyclopaedia of Animal Life, The Hamlyn Publishing Group Ltd., London, 1976. 2. Ekambaranatha Ayyar, M., A Manual of Zoology, Part I, S. Viswanathan Pvt Ltd., Madras, 1976. 3. முருகேசன், ஆர். புரோட்டாசோவா, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1972. ஆக்ட்டினோமைக்கோசிஸ் மைக்கோசிஸ் ('mycosis) என்ற சொல்லானது, பூஞ்சக்காளான் (fungus) இனத்தைச் சேர்ந்த அதி நுண்ணுயிர்களினால், மனிதன் அல்லது மற்ற விலங்கு களின் உடலில் தோற்றுவிக்கப்படும் ஒட்டு நோய் கள் (infectious diseascs) அனைத்தையும் ஒருங்கே குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுச் சொல் லாகும். இவ் வகையில், ஒளிக்கதிர் போன்ற வளர்ச் சித் தோற்றம் கொண்ட ஒருவகைப் பூஞ்சக்காளா னால் தோற்றுவிக்கப்படும் நோய் ஆக்ட்டினோமைக் கோசிஸ் (actinomycosis) எனப்படுகிறது. பொதுவாக பூஞ்சக்காளான்களால் உடலின்மேற்பரப்பில் தோற்று விக்கப்படும் நோய் (superficial nycosis), ஆழப்பகுதி களில் தோற்றுவிக்கப்படும் நோய் (deep mycosis) எனப் பிரிக்கப்படும் இரு வகைகளில், இந்நோய் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இந்நோயை விளைவிக்கும் பூஞ்சக்காளான், ஆக்ட்டினோமைசிஸ் இஸ்ரேலி (actinomyces israelii ) எனப்படும். பெரும்பாலான நோயற்றவர்களின் பல் இடுக்குகள், உள் நாக்கில் உள்ள சுருக்கங்கள், இவற் றின் அருகிலுள்ள மூச்சுப்பாதைப் பகுதி மற்றும் பெருங்குடல் ஆகிய பாகங்களில் இப்பூஞ்சக்காளான் காணப்படுவதால், விலங்குகளின் உடலில் இயற்கை யாகவே வாழ்ந்து வரும் தீமை செய்யாத பல நுண் ணுயிர்களைப் போலவே இதையும் கருதலாம்.