பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/859

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்ட்டினோமைக்கோசிஸ்‌ 829

ஏனெனில், இப் பூஞ்சக்காளான்,தான் வாழும் இடங்க ளின் மேற்பரப்பை மூடியுள்ள சீதப்படலத்தைத் (mucous membrane) தானாகவே துளைத்துக் கொண்டு உடலின் ஆழப்பகுதிகளுக்குச் செல்லும் வலிமையற்றது. ஆனால், வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே நோய் உண்டாக்கும் தன்மையைப் பெறு கின்றது. அன்றாட வாழ்க்கையில், நுண்ணுயிர்களை உடலின் ஆழப்பகுதிக்குள் செல்லவிடாமல் தடுத்து வைக்கக்கூடிய சீதப்படலமானது பல காரணங்களால் அறுபடக் கூடும். இத்தகைய வாய்ப்பு மட்டுமே ஆகட்டினோமை மக்கோசிஸ் என்ற நோயைத் தோற்று வித்துவிடுவதில்லை. ஆனால், இந்த நோய் உண் டாகத் துணைபுரியும் சில நுண்ணுயிர்களான (bacte- tia) ஆகட்டினோபேசில்லஸ் (actinobacillus), ஆக்ட்டி (actinomycetin கமிட்டான்ஸ் னோமைசெட்டின் comitons), ஆக்ஸிஜன் தேவையற்ற ஸ்ட்ரெப்ட்டோ காக்கஸ் (anaerobic streptococcus) போன்றவை இப் பூஞ்சக்காளானின் அருகிலேயே இருப்பதுதான் இந் நோயின் தோற்றத்திற்கு இன்றியமையாத ஒரு காரணம். இந்நோயானது உலகெங்கும் காணப்படு கிறது. இதனால் பாதிக்கப்படுவோர்களின் பெரும் பகுதியினர் நாட்டுப் புறங்களில் வாழும் ஆண்களே. மிகவும் மந்தமாகவே வளர்ச்சியடையும் இந்த நோ யானது, முற்றிய நிலையில் பாதிப்புற்ற பகுதிக்குப் பெருஞ்சேதத்தை விளைவித்துவிடக் கூடும். வகையில், எலும்புகளைவிட மென்மையான திசுக்களே பெருமளவிற்குப் பாதிப்படைகின்றன. இந்நோய் நிண நீர்ச் சுரப்பிகளைப் பாதிப்பதில்லை. நோய் வகைகள் இவ் உடல் கழுத்து முகப்பகுதியில் நோய்க் கூறு. பற்கோ ளாறுகள், சொத்தைப் பற்கள், விபத்தினால் பிடுங்கப்படுதல் பற்கள் சேதமடைதல், பற்கள் . வாயின் மற்றும் உட்பகுதியில் செய்யப்படும் அறுவை மருத்துவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, கீழ்த்தாடை, முகம், கழுத்து 'ஆகியவற்றின் ஆழப் பகுதிகளுக்குச் செல்லும் பூஞ்சக்காளானானது, ஆங்காங்கே கடினத் தன்மை கொண்ட வீக்கத்தைத் தோற்றுவிக்கும். இவ்விடங்களில் பலகீழ் கட்டிகள் (multiple abscess) தோன்றி, ஒவ்வொன்றும் உடைந்து, சீழ் வடியும் உட்புழைகளாக (draining sinus) மாறிவிடுகின்றன. மார்புக் கூட்டில் நோய்க்கூறு (thorasic actine- தோன்றுவ mycosis). இப்பகுதியில் நோய்க்கூறு தற்கு முன்பாக, வாய்ப்பகுதியில் இருக்கும் பூஞ்சக் காளான் நேரடியாக நுரையீரல்களை அடைதல் முதன்மையான வழியாகவும், நோயுற்ற வயிற்றுப் பகுதியிலிருந்து உதரவிதானத்தைச் சிதைத்து, நுரை ஆக்ட்டினோமைக்கோசிஸ் 829 யீரல் உறையையோ (pleura), நுரையீரல்களையோ அடைதல், இரண்டாவது வழியாகவும் கருதப்படு கிறது. இவற்றுள் எந்த வழியினாலும் பாதிப்புற்ற நிலையானது, மார்புக் கூட்டின் வெளிப்புறத் தோலில் சீழ் வடியும் குறியாக மாறும் வரையிலும் கூடக் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கக்கூடும். இத்தகைய சீழ் வடியும் புழையின் 'அருகிலுள்ள விலா எலும்பில் எலும்பழற்சி (osteomyelitis) ஏற் படும் வாய்ப்புகளும் உண்டு. காரண வயிற்று அறை நோய்க்கூறு (abdominal பகுதி actinomycosis). பெருங்குடலின் ஆரம்பப் (caecum) யிலும், குடல்வால் பகுதியிலும் அழற்சி (appendicitis) ஏற்பட இப் பூஞ்சக்காளான் மாக இருக்கும். இதே நோய்க்கூறு வேறு பலலகை நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்படலாம். ஆனால், அறுவை குடல்வால் மருத்துவத்தைத் தொடர்ந்து புண் ஆறுவது தாமதப்படுமாயின் குடல் வால் அழற்சியின் மூல காரணம் இப் பூஞ்சக்காளா னாகவே இருக்கக்கூடும். யான இடுப்புக் குழியில் நோய்க்கூறு(pelvic actinomycosis). மிகவும் அரிதாகவும், கருத்தடைச் சாதனம் (contra- ceptive device) பொருத்தப்பட்ட பெண்களின் கருப் பாதையில் மட்டுமல்லாமல், ஆண், பெண் ஆகிய இரு பாலாரின் இனப்பெருக்க உறுப்புகளிலும் (genitals) இந்நோய்க் கூறுகள் தோற்றுவிக்கப்பட லாம். இவற்றைத் தவீர, நோயால் பாதிக்கப்பட்ட பாகங்களில் காணப்படும் பூஞ்சக்காளான் இரத் தத்தின்வழிப்பரவி ஈரல் (liver), சிறுநீரகம் (kidney) ஆகிய உறுப்புகளைச் சென்றடையலாம். இவ்வாறே, மூளையைச் சென்றடையும்போது மூளை உறை அழற்சியோ (meningitis), இதயத்தைச் சென்றடையும் போது இதய உள்தசை அழற்சியோ (endocarditis ) ஏற்படக்கூடும். ஆனாலும், இரத்த ஓட்டத்தின் மூல மாகப் பரவி உடல் உறுப்புகளில் நோய்க் கூறுகளைத் தோற்றுவிக்கும் வாய்ப்பு மிகவும் அரிதே. உடற் இவ்வகையில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி எதுவாயினும், நுண்ணுயிரியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்நோய் உறுதிப்படுத்தப்படு கிறது. இம் முறையின் படி மூலகாரணம் ஆன பூஞ் சக் காளானைப் பிரித்தெடுத்து இனங்காணல் இன்றி யமையாதது. நோயுற்ற பகுதியிலிருந்து வெளிவரும் அடர்த்தி மிகுந்த, எண்ணெய் போன்ற சீழ் இதற் கான ஒரு முக்கியமான ஆய்வுப் பொருளாகும். இச் சீழில், சாதாரணக் கண்கொண்டே காணத்தக்கதும் சற்றேறத்தாழ 2 மி.மீ, குறுக்களவும் கொண்ட, மஞ்சள் நிறக் குறுணைகள் (yellowish granules)