832 ஆக்ட்டேன் எண்
832 ஆக்ட்டேன் எண் பலவகையான இருக்கின்றன. பல்நோய்களுக்குக் காரணமாக அதற்குமேல் கொண்ட எரிபொருள் மிகவும் தரம் வாய்ந்ததாகும். நூலோதி 1. Buchanan, R.E., and Gibbons, N.E., Bergey's Manual of Determinative Bacteriology, 8th ed., Williams & Wilkins, Baltimore, 1974. 2. Haley, D.L., in McGraw-Hill Encyclopaedia of Science & Technology, Actinomycosis, Vol.I, McGraw-Hill Book Co., New York 1977. 3. Laskin, A.I., and Lechevalier, H. A., (eds.), CRC Handbook of Microbiology, CRC Press, Inc., Cleveland, 1974. 4. Pelezar, J.M. (Jr.). et al. Microbiology, 4th ed., Tata McGraw-Hill Publ. Co., New Delhi, 1977. 5. Waksman, A.S., McGraw-Hill Encyclopaedia of Science & Technology, Actinomycetaceae. Vol.I. 1977. ஆக்ட்டேன் எண் தானியங்கிகளில்(automobiles)உள்ள உள்எரி எந்திரப் பொறிகளில் (internal combustion engines) கேசோ லின் (gasoline) ஆவியும், காற்றும் அழுத்தத்துடன் எரிக்கப்படுவதால், அக்கலவை விரிவடைந்து பிஸ்ட்ட னைத் தள்ளுகின்றது. இது சக்கரங்களைச் சுழல வைக்கும் விசையாக மாற்றப்படுகிறது. அதிக அழுத் தத்தில் கேசோலின் எரிந்தால், பிஸ்ட்டனில் வேகமாக உதறல் ஏற்படும். இதற்கு இடிப்பு (knocking) என்று பெயர். அதனால் உள்எரி எந்திரத்தின் திறன் குறைகிறது. மேலும் உருளையும் கெடுகிறது. அளவான அழுத்தத்தில் எரிபொருளின் இயல் பைப் பொறுத்து இடிப்புத் தன்மை மாறுகிறது. ஓர் எரிபொருளின் இடிப்புக் குறைப்பு மதிப்பு (antiknock value) ஆக்ட்டேன் எண் (octane number) எனப்படும். I-ஹெப்டேனுக்கு ஆக்ட்டேன் எண் மதிப்பு சுழி யாகும் (0). ஐசோ ஆக்ட்டேனுக்கு மிகவும் அதிகம். எனவே இதற்கு ஆக்ட்டேன் எண் நூறு (100) தரப் பட்டுள்ளது. எனவே ஆக்ட்டேன் எண் என்பது கலவையில் உள்ள ஐசோ ஆக்ட்டேனின் விழுக் காட்டிற்குச் சமம். வ்வெண் எழுபது அல்லது H,C-CH,-CHg-CH,-CH,-CH,-CH, n-ஹெப்டேன் CH₂ H H,C-C-CH,-C-CH, CH3 CH 2,2,4 - மூமெதில் பென்ட் டேன் (ஐசோஆக்ட்டேன்) ஹைட்ரோக்கார்பன்களின் அமைப்பிற்கும், அவற் றின் ஆக்ட்டேன் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. நீள் தொடர் (straight chain)ஹைட்ரோக்கார்பனுக்கு ஆக்ட்டேன் எண் குறைவு; கிளைத்தொடர் (branched chain) சேர்மங்களுக்கு அதிகம். வளையஅல்க்கேன் களின் (cycloalkanes) ஆக்ட்டேன் எண் நீள் தொடர் அல்க்கேன்களின் எண்ணைவிட அதிகம். அல்க்கீன் களுக்கும் (alkenes) அரோமாட்டிக் ஹைட்ரோக் கார்பன்களுக்கும் இவ்வெண் அதிகம். ஈயநால் எத்தைல் (tetraethyllead, (C,H,) Pb) சேர்ப்பதன் மூலம் எரிபொருளிள் ஆக்ட்டேன் எண் அதிகரிக்கப் படுகிறது. இம்மாதிரி ஆக்ட்டேன் எண் அதிகமுள்ள பெட்ரோலைப் பயன்படுத்தினால் அது சுற்றுப்புறச் சூழல் பிரச்சினையை உண்டாக்குகிறது. வாகனங்கள் வெளியேற்றும் புகைகளில் காரீயம் மிகவும் நுண்ணிய துகள்களாக இருந்து பல்வேறு சுவாசப்பை நோய் உண்டா டாக்குகிறது. களை நூலோதி பி.எஸ்.எம்.க. Jones Mark M., Netterville, John T., Johnston, David O., and Wood, Jamesel., Chemistry, Man and Society, 3rd Edition, W. B. Saunders Company, Philadelphia, 1980. ஆகாயத் தாமரை இது நீரில் மிதக்கும் செடி. தாவரவியலில் இதற்கு பிஸ்ட்டியா ஸ்ட்ரேட்டியோட்ஸ் (pistia stratiotes Linn.) என்று பெயர். இது ஒருவிதையிலைக் குடும்பமாகிய ஆரேசியைச் (araceae) சார்ந்தது. இது கொடித் தாமரை என்றும், நீர்ப்போர்வீரன் (the watersoldier