பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/867

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலசைட்டு 837

பல்வேறு இயற்கைக் காரணிகளின் இயக்க விளைவால் கடும் அலைகளையும் மோசமான கால நிலையையும் தனித்தன்மையாகக் கொண்டிருக்கும் இக்கால்வாய் உலகத்திலுள்ள இன்றியமையாத நீர்ப்பாதைகளுள் ஒன்றாகும். இக்கால்வாயை நோக்கிப் பாயும் தெளிந்த அட்லாண்டிக் கடல் நீர், நிலமுனை, சிசிலி தீவுகளுக்கிடையிலும் ஆங்கிலக் கால்வாய் அயர்லாந்துக்கிடையிலும் வடக்கில் இடஞ்சுழி திரும்பிப் பெரும் நீரோட்டத்தை உருவாக்கி முகப்பிற்குக் கொண்டு வருகிறது. மேலும் அட்லாண்டிக் ஓத அவைகள் ஏறத்தாழ 180 மீட்டரில், நீரில் உள்ள கண்டத்திட்டின் ஓரத்தில் மோதும்பொழுது அது மூன்று பெரும் ஓத நீரோட்டங்களாக உடைவதால் இக்கால்வாய் தனித்தனிப் பகுதிகளாக மாறுகிறது. இங்கு வீசும் காற்று மேற்குத் திசை நோக்கியதாகும். இங்கு வீசும் புயல் கிழக்கில் உள்ள வளிமண்டலக் குறைவழுத் தத்தால் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூடுபனி இருந்து கொண்டிருக்கும். கடல் எப்பொழுதும் அமைதியற்றுக் காணப்படுகிறது. இக்கால்வாயில் வீசும் கொடூரமான அலைகள், நெப்போலியனையும், ஜெர்மானியரையும் இங்கிலாந்தின் மேல் எளிதில் படையெடுக்க முடியாதபடி தடுத்து வந்தன. இக்கால்வாயில் காணப்படும் ஓதம் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. இது இங்கிலாந்து கரையோரங் களில் சில இடங்களில் இரட்டை உயர் ஓதமாக உருவாகித் தொடர்ந்து உயர் ஓதமாகவே இருந்து கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அமைகிறது. பிளிஸ்டோசீன் இக்கால்வாய் ஒரு காலத்தில் வளைகுடாவாக இருந்தது என்றும், டோவர் நீர்ச்சந்தியில் உள்ள பூசந்தியின் மூலம் பிரிட்டன் தீவு ஐரோப்பாக் கண்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது என்றும் கருதப்பட்டது. அனேகமாக காலத்தின் பின்பகுதியில் கடலானது இப் தியை உடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இன்னும் இக்கால்வாயில் கரையோர மாற்றங்கள் காணப்படுகின்றன. இக்கால்வாயின் இரு கரை களிலும் காணப்படும் நிலவியல் கட்டமைப்புகளும் ஒப்புமை கொண்டுள்ளன. பூசந் க்கால்வாய் பெரும் கப்பல் போக்குவரத்து வழியாகவும் சிறந்த மீன்பிடி இடமாகவும் உள்ளது. இங்கிலாந்துக் கரையில் ப்ளைமவுத், சவுத் ஆம்ப்டன், போர்ட்ஸ்மவுத், பால்க்டோன், டோவர், பிரான்சுக் கரையில் செர்போர்க், லெகாவ்ரி, கலே ஆகியவை இங்குள்ள முக்கியத் துறைமுகங்களாகும். இங்கிலாந் துக்கு அருகிலுள்ள வைட் தீவும் பிரான்சுக்கு அருகி லுள்ள கால்வாய்த் தீவுகளும் மிக முக்கியமானவை. கிழக்கு முனைக்கருகில் இங்கிலாந்தில் உள்ள குட்வின் ஆங்கிலசைட்டு 837 சான்ட்ஸ் ஒரு காலத்தில் தீவுகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது கமதளப்பரப்பாகக் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இம்மணற் விளங்கியது. பரப்பு கப்பல்களின் கல்லறைகளாக ஆனால் புதிய கடற்பயணக் கருவிகளின் வரவால் இங்கு ஏற்படும் இடர்கள் கணிசமான குறைந்துள்ளன. கப்பல், விமான, இரயில் போக்குவரத்துகள் இக்கால்வாயைக் கடந்து செல்லப் பயன்படுகின்றன. பல அளவில் இக்கால்வாயைக் கடக்கச் சுரங்கவழி அமைக்கும் திட்டம் காலங்காலமாக ஆராயப்பட்டு வருகிறது. 1875ஆம் ஆண்டுக்குப் பின்னர் அது தொடர்பாக சில தேட்ட வேலைகள் நடைபெற்றன. 1924 ஆம் ஆண்டு இம்பீரியில் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை யின் விளைவால் இத்திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் 1950 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசுகளால் 1970 ஆம் ஆண்டில் ஆயப் பட்டு இத்திட்டம் தகுந்ததென சனவரி 1971 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வளங்கள். அட்லாண்டிக் பெருங்கடலுடனும் வடகடலுடனும் இக்கால்வாய் தொடர்பு கொண் டுள்ளமையால் இங்கு மிதவையுயிரிகள் எண்ணற்ற அளவில் காணப்படுகின்றன. மடவை, பில்சர்டு, சூடை போன்ற மீன்கள் பெருமளவில் காணப்படு கின்றன. மரபு வழி மீன்பிடித்தொழில், 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாலும், மாசடைதலாலும் நலிவுற்றுள்ளது. இக்கால்வாயின் இரு கரைகளிலும் நிலவும் நல்ல காலநிலையும், மணல் கடற்கரைகளும் சுற்றுலா வளரப் பேருதவி செய்கின்றன. ஆங்கிலசைட்டு ஆங்கிலசைட்டு செஞ்சாய்சதுரப்படிகத் தொகுதியில் orthorhombic system) உருவாகும் ஒரு கனிமம். இதன் வேதியியல் உட்கூறு ஈயச்சல்பேட்டு (Pb SO). பொதுவாக, நீண்ட பட்டகப்படிகங்களா கவும், அடியிணைவடிவு (basal pinacoid) முகத்திற்கு இணையாக பட்டையான படிகங்களாகவும் கிடைக் கிறது. பட்டக (prism) மற்றும் நீள் அச்சு இணை வடிவு முகங்களில் கீழ் நோக்கி அமைந்துள்ள கோடு கள் (streatronis) காணப்படும். திண்மையான (massive) கட்டிகளாகவும், சில சமயங்களில் கல்விழுது களாகவும் (stalactite) கிடைக்கும். கனிமப்பிளவு (cleavage). மூன்று இணைவடிவு (three pinacoid) முகங்களுக்கு இணையாக நிறைவா