பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/869

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சா மரம்‌ 839

ஒவ்வொன்றும் வட்டவடிவமாகவும் (orbicular), ஒழுங்கற்ற திருகு அமைவு முறையிலும் (imbricate aestivation) அமைந்திருக்கும். அல்லி இதழ்கள் கிடையா. மகரந்தத் தாள்கள் 10; இவை குட்டை யாகவும்,நீளமாகவும் மாறி மாறி அமைந்திருக்கும்; மகரந்தக் கம்பிகள் இழை போன்றவை (filiform); கொண்டது. மகரந்தப்பை சுழலமைவு (versatile) நீள்போக்கில் வெடிக்கக் கூடியது. சூற்பை இரு சூல் களைக் கொண்டது. சூலகத்தண்டு இழை போன் றது; சூல்முடி விரிந்து தட்டையாக (peltate) இருக் கும். கனி ஒரு விதை கொண்ட ஒருபக்க வெடி (follicle) உலர் கனியாகும். கனியின் கீழ்ப் பாகம் பட்டை வடிவத்திலும் (strap-shaped), பலவரிகளைக் கொண்டும் இருக்கும்; இருநுனிகளும் குறுகலாக இருக்கும். விதை தலைக்கீழ் முட்டை வடிவத்துட னும் (obovate), தட்டையாகவும் இரு பள்ளங்களைக் (furrows) கொண்டும், தொங்கு முறையில் கனியின் நுனியில் அமைந்திருக்கும். கனிகள் மே மாதத்தில் உதிர்ந்து, மழை பெய்யும்பொழுது முளைக்கின்றன. கெட்ட பொருளாதாரச் சிறப்பு. இதன் கட்டை மிகவும் டியானது; கனமானது; நீடித்து உழைக்கக் ஆச்சா மரம் 839 கூடியது. இது கருமை அல்லது கருமை கலந்த பழுப்பு நிறத்திலும், பல கருமை நிற வரிகளுடனும் இருக்கும். இது தொடுவதற்கு எண்ணெய் போன்ற பிசுப்புத் தன்மை கொண்டது. இது கறையான்களி னால் பாதிக்கப்படாதது. ஆனால் சிறு வண்டுகளி கட்டை னால் (borers) துளைக்கப்படக் கூடியது. கெட்டியாகவும், கடினமாகவும் இருப்பதனால் இதை அறுப்பதும், இதில் வேலை செய்வதும் எளிதல்ல. இது வண்டிச் சக்கரங்கள், கலப்பைகள், செக்குகள், தூண்கள், உத்தரங்கள், பாலங்கள், துடுப்புகள், முதலியவை செய்வதற்குப் பயன்படுகின்றது. செதுக்கு வேலை, சித்திர வேலைப்பாடுகளுக்கும் பயன்படு கின்றது. இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படுகின்ற சிவப்பும் பழுப்பும் கலந்த நாரிலிருந்து தாம்புக் கயிறு செய்யப்படுகின்றது. இதன் இலைகள் மாட்டுத் பயன்படுகின்றன. எருவாகவும் தீவனமாகவும், நாதஸ்வரக் குழல் செய்வதற்கு இம் மரம் ஏற்ற தாகக் கருதப்படுகிறது. நூலோதி ப.செ. 1. Beddome, R. H. Major. Fl. Sylv. Vol. I, 1869. 11 b 10 ஆச்சா மரம் (Hardwickia binata Roxb.) சூற்பையின் நீள்வெட்டுத் தோற்றம் 5.சூல் 6, சூலகமுடி 7.8,புல்லி இதழ் 11. சூலகம் 9. மகரந்தத்தாள் 10. மிலார் 1. கனி 2. விதை 3. பூ மொட்டு 4.