பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/870

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 ஆட்டர்‌ இழுவலை

840 ஆட்டர் இழுவலை 2. Gamble, J. S. Fl. Press, Madras, Vol. I, Adlard & Son, Ltd., London, 1919. 3. The Wealth of India, Vol.V, CSIR. Publ. New Delhi, 1959, ஆட்டர் இழுவலை இங்கிலாந்து,டச்சு (Holland) நாட்டு மீனவர்கள் தேம்ஸ் நதி முகத்துவாரத்திலும், சூயர் கடலிலும் மீன்பிடிப்பதற்கு 14ஆம் நூற்றாண்டிலேயே இழு வலையைப் பயன்படுத்தியுள்ளார்கள். நீராவி, டீசல் (diesel) போன்ற எரிபொருள்களால் இயக்கப்படும் விசைப் படகுகளும் பிடித்த மீன்கள் கெடாது பாது காத்துக் கொள்ளும் முறைகளும் புழக்கத்தில் வந்த வுடன்; மீன் பிடிப்பில் இழுவலைப் பயன்பாடு நிலை பெற்றது. இழுவலை என்பது புனல் போன்ற வடிவு பெற்ற ஒரு மீன் வலைப் பை. அதன் அகலமான வாய்ப்புறத்தின் வழியாக மீன்கள் நுழைந்து ஒரு தனிப்பட்ட முடிச்சினால் மூடப்பட்டுள்ள முனை வரை தடையின்றிச் செல்லக் கூடிய யில் பின்னப்பட்டுள்ளது. இவ்வலையில் ஒரு முடிச்சி லிருந்து மற்றொரு முடிச்சிற்கு இடைப்பட்ட வலைக் கண் அடி வகை தூரத்தின் பெரும் அளவு 60 செ.மீ. இருக்க வாம். ஆனால் அதன் அடிப்பகுதி பிடிக்கவிருக்கும் மீனின் வடிவைப் பொறுத்து 6 மி.மீ. அளவுக்குக் குறைவில்லாத வலைக் கண்ணுடையதாக இருக்கும். ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில்தான் இழு வலைமுறை மிகுதியாகப் பயன்பட்டது. மீன்வலையை இழுததுச் செல்லும் போது அதன் கிடைமட்டவாய்த் திறப்பு (horizontai mouth opening) நன்றாகத் திறந் திருக்கும்படி,தடி இழுவலை முறையில் (beam trawl) வலையின் நுழைவாயிடத்து ஒரு தடியைக் குறுக்கே இணைத்துக் கிடைமட்ட வாய்த் திறப்பைப் பெரி தாக்கினார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட தடி யின் முழுநீளத்தையும் வலையின் வாயைத் திறந்து வைப்பதற்கே பயன்படுத்தினர். அதற்சாக அவ் வலையின் வாய்ப்புற நுனிகளைப் படகின் முகவாயி லும் (bow), புறவாயிலும் (stern) கட்டிப் படகைப் பக்கவாட்டில் செலுத்தி மீன்பிடித்தனர். இம்முறை யில் படகின் வேகம் பாதிக்கப்படுவதோடு, கடல் அமைதியற்றுக் காணப்படும் வேளைகளில் படகைப் பக்கவாட்டில் முறையாகச் செலுத்துவது முடியாத செயலாய் விட்டது. எனவே, இதற்கு மாற்றாக இழுவலையின் இரு நுனிகளையும் இருபடகுகளின் புறவாயில்களில் தனித்தனியே கட்டி, அவ்விரு படகுகளும் ஒரே நேரத்தில் முடிந்த அளவுக்கு ஒன்றிற்கொன்று அருகில் வராது ஒரே திசையில் பலகைகளை செலுத்தி மீன் பிடித்தார்கள். இம்முறை இணைப் படகு மீன்பிடிப்பு (pair fishing) என்று கூறப் படுகிறது. இம்முறையில் ஏராளமாக மீன்பிடிக்க முடிந்தாலும், இருபடகுகளின் தலைவர்கள் ஒருவருக் கொருவர் ஒத்துழைத்துப் படகுகளை ஒரே திசையில் செ சலுத்துவது முடியாது போய்விட்டது. எனவே, வலையின் கிடைமட்ட வாயை முடிந்த அளவு திறக்க வைத்தல், பெரிய இழுவலையை உருவாக்குதல், அவ் வலையை இறக்கவும் ஏற்றவும் மிகுதியான விசைத் திறன் கொண்ட இழுவைப் பொறி (winch) உரு வாக்குதல் ஆகிய மூன்று முக்கியக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு மீன் பிடிக்கும் துறையில் ஒரு புதிய சாதனையை நிலைநாட்ட அத்துறையில் உள்ளோர் பெருமுயற்சி எடுத்தார்கள். படகில் இயந் திரம் இணைத்து அதன் இழுதிறனை மிகைப்படுத்தி னர். இழுபொறி இணைத்து மீன்வலை இயக்கத்தை எளிதாக்கினார்கள். அதே நேரத்தில் இழுவலையின் கிடைமட்ட வாயைப் பெரிதாகத் திறந்து வைக்க இரண்டு மரப் இழுவலையுடன் இணைத்து வெற்றி கண்டனர். அப்பலகைக்கு 'ஆட் டர் பலகை (otter board) என்று பெயர். இப்பெயர் எவ்வாறு தோன்றியது எனச் சரிவரத் தெரியவில்லை. இருப்பினும்,வலையின் வெளிப்பகுதியில் இரண்டு கதவுகள் போல் அமைந்துள்ள இந்த 'அவுட்டர்' (outer) பலகைகள் நாளடையில் மருவி ஆட்டர் பலகைகள் என்று உச்சரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மீன்பிடிக்கும் கலையைப் பொழுது போக்காகக் கொண்டவர்களுக்கென இங்கிலாந்து நாட்டில் ஆற்றின் சில பகுதிகள் ஒதுக்கிப் பாது காக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவ்விடங்களில் மீன் களைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக் குப்போட்டியாக, அதே மீன்களைப் பிடிக்க 'ஆட்டர் (otter) எனப்பட்ட நீர்நாய்கள் வருவதுண்டு. அப் பொழுது அவர்கள் கரையிலிருந்து கொண்டே இது போன்ற மரப்பலகைகளாலான சிறிய கருவிகளை நூல் கயிற்றில் கட்டி இயக்கி, அவற்றை மீன்பிடிக்க விடாது தடுக்கப்பயன்படுத்தியிருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆட்டர் பலகைகளைப் பயன்படுத்தியதால், நடைமுறையி லிருந்து வரும் இழுவலைகளுக்கு 'ஆட்டர் இழுவலை' (otter trawl) என்று பெயரிடப்பட்டது. இதில் முக்கியப் பங்கு ஏற்பலை ஆட்டர் பலகைகளின் அளவும், அவை பொருத்தப்பட்டிருக்கும் கோணமுமே ஆகும். 4.5 சதுர மீ. அளவுள்ள செவ்வக, முட்டை வடிவிலான ஆட்டர் பலகைகளின் திட்ட வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவை வெண்தேக்கு, மருது போன்ற மரப்பலகைகளால் செய்யப்பட்டுத் தட்டை யான இரும்புச் சட்டங்களால் பலப்படுத்தப்படுகின் றன. இவை நீரில் இழுபட்டுச் செல்லும் போது நீர் மட்டத்திற்கு வராதிருக்கவும், கூடிய மட்டும் செங்குத் தாக இருக்கவும் அதன் அடிப்பக்கம் பளுவான இரும்