ஆட்டு மான் 847
ஆட்டு மான் 847 வளர்ச்சிப் பரிமாணம் அட்டவணை-1. மேச்சேரி இன ஆடுகளின் உடல் வளர்ச்சி அளவுகள் (கிலோ கணக்கு) பெட்டை கிடா பிறந்த உடன் 2.39 முதல் 2.78 வரை 2.23 முதல் 2.55 வரை சராசரி 2.34 முதல் 2.69 வரை 3 மாதத்தில் 8.99 முதல் 13.31 வரை 7.88 முதல் 12.60 வரை 8.46 முதல் 12.69 வரை 11.08 முதல் 6 மாதத்தில் 14.88 வரை முழுவளர்ச்சி 23.89 முதல் 26.54 வரை களையும் உடல் அமைப்பையும் கொண்டுள்ளன. சுற்றுப்புறத்தில் உள்ள விவசாயிகள் மேச்சேரி ஆடு வளர்ப்பதில் தொன்றுதொட்டு ஆர்வமுடையவர் களாக இருக்கிறார்கள். வாரச் சந்தைகளில் சுமார் 3,000 ஆடுகள் விற்கப்படுகின்றன. கர்நாடகத்தி லிருந்து வியாபாரிகள் இவ்வாடுகளை வாங்கி லாரி களில் ஏற்றிச் செல்கின்றனர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மேச்சேரி இன ஆட்டில் உள்ள சிறப்பியல்புகளை ஆராய்ச்சி செய்துள்ளது. இவ்வின ஆடுகளின் இறைச்சி சுவை மிக்கதாக இருப்பதோடு அதன் நார்ப்பசை எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருக் கின்றது. இதன் தோல் அதிக விலை பெறுகிறது. விவசாயத்தை மையமாகக் கொண்டுள்ள மக்கள் பொருளாதாரக் காரணங்களினால் மேச்சேரி இன ஆடு வளர்ப்பை முக்கிய வருவாயாகக் கொண்டுள் ளனர். . பண்ணை உள்ள ஆட்டுப் பொன்னேரியில் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினரால் நிறுவப் பட்டுச்செயல்பட்டு வருகின்றது. இவ்வாராய்ச்சியின் பயனாக, மேச்சேரி இன ஆடுகளின் உடல் பரிமாண வளர்ச்சி பற்றிய குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் மேற்கண்ட அட்டவணையில் கொடுக் கப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சியின் தொடக்கமாக, மேச்சேரி இன ஆடுகளின் உடல் வளர்ச்சியை மேலும் 5 கிலோ வரை கூட்டும் நோக்கத்துடன் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian council of agricultural research I.C.AR.) பண உதவியுடன் 1983 முதல் இப்பண்ணை செயல்பட்டு வருகின்றது. டார்ஸெட் நெல்லூர், டார்ஸெட்மாண்டியா என்ற கலப்பினக் கிடா ஆடுகள் ஆந்திர மாநிலத்தில் து உள்ள பாலமனேரி ஆட்டின ஆராய்ச்சி மையத்தி லிருந்து வாங்கப்பட்டுள்ளன. இக்கிடாக்களுடன் மேச்சேரி பெட்டை ஆடுகளை இனக்கலப்பு செய்து முதல் சந்ததி பெறப்பட்டது. இவை இனப்பெருக்கத் துக்குப்பக்குவ வயதை அடைந்தவுடன் இவற்றுக்குள் ளேயே உள் கலப்பினம் (in-breeding - sis-mating) செய்து கிடைக்கும் 2-வது சந்ததியிலிருந்து குட்டி களைத் தேர்ந்தெடுத்து அதிக எடையுள்ள ஆடுகளை உண்டாக்கத் தீவிர ஆராய்ச்சிகள் நடந்து வரு கின்றன. மேச்சேரி ஆட்டினத்தை மிகுதியாக நாடியுள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேலும் உயர்த் துவதே இப்பண்ணையின் நோக்கமாகும். ஆடு வளர்ப்பு முறைகளைத் திறம்பட மாற்றியமைக்கவும், ஆடுகளுக்கு வரும் நோய்களை ஆண்டு முழுவதும் எவ்வாறு தடுத்து ஆடுகளின் உடல் வளர்ச்சியை மேலும் உயர்த்தவும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், விவசாயிகளின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளுக்கு மேலும் தூண்டுகோலாக அமைகிறது. ஆட்டு மான் இரா.வெ. ஆட்டு மான்கள் (goat antelopes) என்பவை ஆடு களுக்கும், இரலை மான்களுக்கும் (antelopes) இடைப் பட்ட பாலூட்டிகள். இவை மலைப் பகுதிகளில் வாழ்கின்றன. இவை பெரும்பாலும் ஆடு போன்ற உடலமைப்பையும் பற்களையும், குட்டையான வாலையும் பெற்றிருக்கின்றன. ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களிலும் சிறிய சிறிய கொம்புகள் ஆட்டு மான்களுள் உண்டு 'சீரோ' (serow), 'கோரல்' (gorai), 'டேக்கின்' (takin) ஆகியவை