பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுங்காப் பாய்வு

கருத்தியல் பாய்மம். பாய்மங்களின் பாய்வு வீதத் தீனைக் கணித விதிகளின்படி ஒப்பிட்டு வரையறுக்க ஒரு கருத்தியல் பாய்மத்தினை (ideal fluid) அறிவிய லார் கற்பனை செய்து கொண்டுள்ளனர். அது அமுக்க முடியாதது; பிசுப்பில்லாதது; உராயும் தன்மையற்றது; பரப்பிழுவை அற்றது. எனினும் பாய்மங்கள் இவ்வியல் நிலவும் இயற்கையில் புகளைப் பெற்றிருப்பதில்லை. வளிமங்கள் அமுங்கக் பரப் கூடியவை. நீர்மங்கள் பிசுப்பு, உராய்வு, பிழுவை கொண்டவை.

பாய்மங்களின் பாய்வு (அ) அடுக்குப்பாய்வு, (ஆ) சிதறு பாய்வு என இருவகைப்படும். பாய் மங்களின் இம்மிகள் தனித்தனிப் பாதைகளில், ஒன் றோடு ஒன்று மோதாமல், அடுக்கடுக்காக, ஒன்றை அடுத்து மற்றொன்றாகச் செல்வது அடுக்குப்பாய்வு (laminar flov) ஆகும். எடுத்துக்காட்டு, மிகுந்த பிசுப்புடைய நீர்மம் மிகக்குறைந்த வேகத்துடன் பாய்தல் (படம் 1).

படம் 1. அடுக்குப் பாய்வு

சீர்ப்பாய்வு, சீரிலாப்பாய்வு (uniform flow, nonuniform flow) எனவும் இதை வகைப்படுத்துவர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பாய்வுக்களத்தில் எல்லாப் புள்ளிகளிலும் பாய்மத்துகள்களின் பண்புகள் மாறா மல் இருப்பது சீர்ப்பாய்வு ஆகும். விட்டம் மாறாத, நீர்குழாயில் பாயும் நீரோட்டம் சீர்ப்பாய்வாகும், மாறாக, ஒரு குவியும் அல்லது விரியும் குழாயில் ஓடும் நீரோட்டம் சீரிலாப் பாய்வு ஆகும் (படம் 3, 4).

படம் 3. சீர்ப் பாய்வு

பாய்மங்களின் துகள்கள் ஒழுங்கின்றிச் சிதறித் தாறுமாறாகப்பாய்வது சிதறுபாய்வு (turbulent flow) ஆகும் (படம் 2).

பாய்மப் பாய்லை மேலும் சில வழிகளில் வகைப் படுத்தலாம். ஒழுங்கு பாய்வு, ஒழுங்கிலாப் பாய்வு (steady flow, non - steady fow) என்பன ஒரு வகை. பாய்கின்ற பாய்மத்தில் ஒரு புள்ளியைக் கடக்கும் துகள்களின் அழுத்தம், திசைவேகம், அடர்த்தி போன்ற புறத்தன்மைகள், நேரத்தையொட்டி மாறா மல் இருப்பது ஒழுங்குப்பாய்வு ஆகும். பாசனக் கால் வாய் ஓட்டம் ஓர் ஒழுங்கிலாப் பாய்வு ஆகும்.

நேர மாற்றத்தையும் இடமாற்றத்தையும் கணக் சில் கொண்டு, பாய்ம ஓட்டத்தை ஒழுங்கான சீர்ப் பாய்வு, ஒழுங்கில்லாச் சீர்ப்பாய்வு, ஒழுங்கான சீரிலாப் பாய்வு, ஒழுங்கிலாச் சீரிலாப் பாய்வு என்று வகைப் படுத்தலாம். இயற்கையில் உள்ள பாய்மப் பாய்வுகள் மேற்கண்ட நான்கில் ஏதேனும் ஒரு வகையில் அடங்கும்.

படம் 2. சிதறு பாய்வு

படம் 4. சீரிலாப் பாய்வு

58