856 ஆடம்ஸ், ரோஜர்
856 ஆடம்ஸ், ரோஜர் கொம்பு போன்ற பொருளான படலத்தை (horny membrane) உருவாக்கி ஓட்டுக் கூட்டினுள்ள துளைகளை அடைக்கின்றது. எனவே துறவி நண்டு களுக்கு அடிக்கடி ஓடுகளை மாற்றவேண்டிய அவசிய மில்லை. தூணின் (column) அடிப்பகுதியில் கொட் டும் செல்களின் நீட்சிகள் அமைந்துள்ளன. தூணின் மற்றப்பகுதி மென்மையானது. ஆடம்சியா பேலி யேட்டாவினால் துறவி நண்டினை விட்டுத் தனியாக இயங்க முடியாது. இதன் பாதம் இரு மடல்களாக மாறுபட்டு உள்ளதே இதற்குக் காரணமாகும். துறவி நண்டின் எதிரிகளான மீன்களிலிருந்து துறவி நண்டை அனிமூன் தன் கொட்டும் செல்களின் உதவியால் பாதுகாக்கின்றது. இதற்கு ஈடாக அனி மூன், துறவி நண்டு சேகரிக்கின்ற உணவுப் பொருள் களைப் பகிர்ந்து கொள்கிறது. ஆடம்ஸ், ரோஜர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் (Boston) பிறந்த ரோஜர் ஆடம்ஸ், (Roger Adams) முனைவர் பட்டத்தை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் (Har- vard University) 1912 ஆம் ஆண்டு பெற்றார். இவர் ஜெர்மனியில் கல்வி பயின்ற பின்னர் சிறிது காலம் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியரா கப் பணியாற்றினார். பின் 1916 ஆம் ஆண்டு இலினாய் பல்கலைக்கழகத்தில் (Illinois University) சேர்ந்து 1919 ஆம் ஆண்டு கரிம வேதியியல் பேராசிரியராகவும், 1926 ஆம் ஆண்டு வேதி யியல் துறைத் தலைவராகவும் ஆனார். பல்வேறு வேதியியல் தொழிலகங்களுக்கு ஆலோசகராக இருந்த இவர் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகராகவும் விளங் கினார். ரோஜர் ஆடம்ஸின் முக்கியமான அறிவியல் சாதனைக களு ருள் தொழுநோயைக் குணப்படுத்த உதவும் ஷால்மோகரா எண்ணெய்(chaulmoogra oil), பருத்தி விதை நிறப் பொருளான காசிப்பால் (gossypol) மரிஜ்ஜிவனா (marijuana) வகைச் சார்ந்த மற்ற பல அல்கலாய்டுகளின் வேதியியல் அமைப்பைப் பற்றிய ஆராய்ச்சிகளும், ஹைட்ரஜனேற்ற வினை களில் (hydrogenation) பயன்படும் பிளாட்டினம் வினையூக்கிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் முக்கிய மானவை, பல முக்கிய பதவிகளையும், விருதுகளை யும் பெற்ற இவர் அமெரிக்கா வேதியியற் கழகத்தின் (American Chemistry Society) மிக உயர்ந்த விருதான பிரிஸ்ட்லி பதக்கத்தையும் (Priestley medal) பெற்றார். நூலோதி 1. The New Encyclopaedia Britannica, Micropaedia, Vol.I. Encyclopaedia Britannica, Inc., Chicags, 1982. 2. Hawley, Gessner G., The Condensed Chemical Dictionary, Tenth Edition, Galgotia Book Source Publishers, New Delhi, 1984. ஆடலை (monochla- இது ஒரு பூவிதழ் வட்டத்தையுடைய mydeous) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான பூஃபோர்பியேசியைச் (euphorbiaceae) சார்ந்தது. இது வெள்ளை காட்டாமணக்கு, சுடலாமணக்கு, நாட்டுக் காட்டாமணக்கு என்ற வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. தாவரவியலில் இதற்கு ஐட்ரோஃபா கோசிப்பிஃபோலியா (Jatropha gossypifolia Linn.) என்று பெயர். பிரேசில் நாட்டுத் தாவர மாகிய இது இந்தியாவின் பல பாகங்களில் காணப் படுகிறது. சிறப்புப் பண்புகள். இது புதர்ச்செடியாக ஏறக் குறைய 11 மீ. வரை வளரக்கூடியது. இதன் இளம் உறுப்புகள் சிவப்புக் கலந்த பசுமை நிறத்துட னிருக்கும். செடி முழுவதிலும் பழுப்பு அல்லது மஞ்சள் நிற ரப்பர் மரப்பால் (latex) என்ற நீர்மம் இருக்கும். இலைகள் உள்ளங்கை போன்ற (palmate) அமைப்புடனும், மூன்று முதல் ஐந்து பிளவுகளைக் (lobed) கொண்டும் இருக்கும்; விளிம்பு முழுமையானது (entire); இலைக் காம்பு, இலையடிச் சிதல்கள் ஆகியவற்றில் காம்புகளுடைய சுரப்பிகள் (glands) நெருக்கமாகவும் வரிசையாகவும் அமைந் திருக்கின்றன. மலர்கள் சிவப்பு நிறமுடையவை. இவை சைம் (cyme) என்ற மஞ்சரியில் அமைந் துள்ளவை. மகரந்தத் தாள்கள் 10-12; இரு வட்டங் களில் அமைந்திருக்கின்றன (5+3). கனி காப்சூல் (capsule) வகையைச் சேர்ந்தது; இதன் மேற்பரப்பில் வலை போன்ற சுருக்கங்கள் காணப்படும். விதை சிவப்பாகவும் இவற்றின் ஒரு நுனியில் முடிச்சு போன்ற (caruncle) அமைப்பும் இருக்கும். இது களைச்செடியாக எங்குபார்த்தாலும் வளர்கின்றது. விரைவாக வளரக்கூடியது. ஆண்டு முழுவதும் பூக்கவும், காய்க்கவும் செய்கின்றது. பொருளாதாரச் சிறப்பு. இதன் உலர்ந்த பட்டை யிலிருந்து கசப்பான ஜட்ரோஃபைன் (Jatrophine) என்னும் வேதிய மூலப்பொருள் (alkaloid) எடுக்கப் படுகிறது. மரப்பிசினும் (resin)டேன்னினும் (tannin) உள்ளன. கட்டிகள், படைநோய் (eczema), சொறி சிரங்குகள் போன்ற தோல் வியாதிகளுக்கு இவை கள் பயன்படுத்தப்படுகின்றன, இதன் இலைகளை மெல்லுவதினால் வாயில் ஏற்படுகின்ற தொற்று