பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/889

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடாதோடை 859

13 14 2 ஆடாதோடை 859 2 10 83 12 1] ஆடாதோடை (adhatoda zeylanica medicus) I. பூ 2. அல்லி வட்டத்தின் கீழ் உதடு 3. அல்லி வட்டத்தின் மேல் உதடு 4. பூக்காம்புச் சிதல் 5 பூவடிச்சிதல் 6. மகரந்தத் தாளிள் உட்புறத் தோற்றம் 7. மகரத்தத்தாளின் வெளிப்புறத் தோற்றம் 8. மேல் இருந்து காணப்படும் பூவின்தோற்றம் 9. சூலகம் 11. சூற்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம் 10. சூலகமுடி பொருளாதாரச் சிறப்பு. இது ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறையில் சிறந்த மருந்தாகப் பயன்படு கின்றது. இதன் பச்சை இலைகளிலிருந்தும் உலர்ந்த இலைகளிலிருந்தும் வாசின் (vascine) என்னும் மருந் துப் பொருள் எடுக்கப்படுகிறது. இது மார்ச்சளி, மூச்சுக்குழல் அழற்சி (bronchitis), காய்ச்சல், மஞ்சள் காமாலை (jaundice) ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. தீராத மூச்சுக்குழல் அழற்சிக்கும், இளைப்பு நோய்க்கும் இலைச்சாறு அல்லது இலைப் பொடி பயன்படுத்தப் படுகிறது. இலைச்சாறு வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்குக் கொடுக்கப்படு கின்றது. இவற்றின் உலர்ந்த இலைகளைப் புகைப் பதனால் இளைப்பு நோயின் கடுமையையும்,வேத னையையும் குறைக்கலாம். இலைகளின் வெப்பமான சாறு தோல் வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுத் தப்படுகின்றது.. இத்தாவரத்தின் வேர் இருமல் மருந்தாகவும். நுண்ணுயிர்க்கொல்லியாகவும் (anti- biotic), பூச்சிக்கொல்லியாகவும் (insecticide) பயன் படுகிறது. மலேரியா, சுவாச நோய்கள் (repiratory 12.சூல் 13. மிலார் 14. லெண்டிசெல்கள் (துளைகள்) diseases), தொண்டை அடைப்பான் (diptheria), மேகவெட்டை (gonorrhoea) ஆகிய நோய்களுக்கு மருந்தாகிறது.இதன் இலைகள் பசுந்தழை உரமாகப் (green manure) பயன்படுகின்றன. இதிலிருந்து ஒரு மஞ்சள் நிறச் சாயம் எடுக்கின்றார்கள். இதன் இலை களைப் பூச்சி புழுக்கள், பூஞ்சணங்கள் தாக்காத காரணத்தினால் மாலைகள் கட்டுவதற்கும், கனிக ளைக் கூடையில் வைத்துப் பாதுகாக்கவும் பயன் படுத்துகிறார்கள். இலைகளில் ஒருவகைக் கசப்பு நாற்றம் இருப்பதால் ஆடு, மாடுகள் இவற்றைத் தின்பதில்லை. காண்க, அக்காந்தேசி நூலோதி நா.வே. 1. Clarke, C. B. in Hook. f. Fl. Br. Ind. Vol. IV. 1885.