பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுங்காப் பாய்வு 59

படம் 5. சுழல் பாய்வு

மேலும் சுழல் பாய்வு, சுழலாப் பாய்வு(rotational flow, irrotational flow) என்றும் இதைப் பகுப்பதுண்டு. ஒரு வளைவுப் பாதையில் பாயும் போது பாய்மத்தின் துகள்கள் தம்மைத்தாமே சுற்றிக் கொண்டால் அதனைச் சுழல் பாய்வு என்றும், அவ்வாறு சுழலாமல் பாய்ந்தால், அதனைச் சுழலாப் பாய்வு என்றும் கூறுவர் (படம் 5, 6).

பாய்மத்துக்கள் முத்திசைகளிலும் பாய்ந்தால் முத்திசைப் பாய்வு என்பர்; இருதிசைகளில் ஓடினால்

படம் 6. சுழலாப் பாய்வு

இருதிசைப் பாய்வு என்பர்; ஒரே திசையில் ஓடினால் ஒருதிசைப் பாய்வு என்பர் (படம் 7, 8, 9).

ஆய்வு. பாய்ம ஓட்டங்களைக் கணக்கீடுகள் மூலம் ஆய்வு செய்யலாம். ஓட்டக்களத்தில் ஒரு புள்ளியில் திசைவேகத்தோடு {V) அழுத்தம் (P) அதன்

O

படம் 8. இருதிசைப் பாய்வு wwwwwwwwww படம் 9. ஒருதிசைப் பாவ்வு

ம்

படம் 1. முத்திசைப் பாய்வு