பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/890

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 ஆடி

860 ஆடி 2. Gamble, Fl. Pres. J. S. Madras. Vol. II, Adlard & Son, Ltd., London, 1924. 3. The Wealth of India. Vol. I, CSIR Publ., New Delhi, 1948. ஆடி பொருளிலிருந்து வந்து படும் ஒளியினை எதிர் பலித்து மீளச் செய்யும் அமைப்பு ஆடி (mirror) எனப்படும். ஆடிகள் பழங்காலம் தொட்டே இந்தியா விலும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. கண்ணாடி ஆடி கள் வருவதற்கு முன்னரே சமதளமாகவோ, வளை வாகவோ உள்ள உலோகத் தகடு ஒன்றின் ஒரு புறத் தில் ஒளியை எதிர்பலிக்கும் வகையில் மெருகேற்றி ஆடியாகப் பயன்படுத்தி வந்தனர். பின்னாளில், கண்ணாடி ஆடியின் ஒரு புறத்தில் வெள்ளியப் பூச்சுப் பூசி ஒளியைப் பட்டு மீளச் செய்தனர். அடுத்து வெள் ளிப் பூச்சுக் கொண்ட ஆடிகள் வழக்கத்திற்கு வந்தன. கண்ணாடித் தட்டின்மேல் இரசத்தைப் பரப்பி, அதை ஒரு தகரத் தட்டினால் அழுத்தி இரசத்திலிருந்து ஒளி எதிர்பலிக்கும் வகையில் சிறந்த ஆடிகள் வெள்ளீயம் இரசத்துடன் கூடிக் செய்யப்பட்டன. கலப்பெய்தி இறுகிப் பளபளப்பான பரப்பை உண்டாக்குகிறது. இன்றும் ஆடிகள் செய்ய இம்முறை பின்பற்றப்படுகிறது. சமதள ஆடிகளுக்கு இம்முறை ஏற்றதாக இருந்தாலும் வளைந்த பரப்புடைய ஆடி களை இம்முறை கொண்டு செய்ய முடிவதில்லை. கண்ணாடியால் அமைந்த ஆடிகள் பொதுவாகக் காற்றுப்படுவதால் கறுத்து விடுகின்றன. இக்குறை உலோக ஆடிகளில் ஏற்படுவதில்லை. நன்கு மெரு கேற்றப்பட்ட வெள்ளிப்பரப்பின் மேற்படும் ஒளியின் 60 விழுக்காடு எதிர்பலிக்கப்படுகிறது. எஃகுப் பரப்புக்களும் நல்ல ஆடியாகப் பயன்பட்டு வரு கின்றன. லீபிக் (Liebig) என்ற ஜெர்மானிய வேதியியல் அறிஞர் கண்ணாடிப் பரப்பின் மேல் வேதியியல் முறையால் வெள்ளியைப் படிவிக்கும் முறையை 1835ஆம் ஆண்டில் அறிவித்தார். அம்மோனியா கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை ஓர் ஆல்டி ஹைடினால் (aldehyde) குறைத்து (reduction) அவர் வெள்ளியைப் படிவித்தார்.இன்றைக்கும் இதே முறை பின்பற்றப்படுகிறது. வெள்ளியைக் கொண்ட கரைவையில் இருந்து அதனைப் படிவிக்க ரோச்ச்லி உப்பு (rochelle salt), சர்க்கரை முதலிய குறைக்கும் பொருள்களும் (reducing agent) பயன்படுத்தப் படுகின்றன. வேதியியற் கரைவில் கண்ணாடித் தட்டை முழுக்கி எடுப்பதால், அல்லது கரைவையை அதன்மேல் தெளிப்பதால் வெள்ளியைப் படியச் செய்யலாம். கண்ணாடியின் பின்பக்கத்தில் பூசப்பெற்ற வெள்ளிப் பூச்சினைக் கெடாமல் பாதுகாக்க அதன் மேல் அரக்கு எண்ணெயும், அயச் செந்தூரமும் (ferric oxide) பூசப்படுகின்றன. மின் பகுப்பு முறை கொண்டும் கண்ணாடிப் பரப்பின்மேல் வெள்ளியைப் படியச் செய்து, அதற்குப் பாதுகாப்பாக அதன்மேல் செம்பு படிவிக்கப்படுகிறது. துருவு விளக்குகளில் (search light) உள்ள கண்ணாடியாலான குழியாடி கள் இம்முறையால் உருவாக்கப்படுகின்றன. எதிர் முனைக்கதிர்களைக் கொண்டு, உலோகத்தை ஒரு மிண்ணுலையில் சூடேற்றி வெள்ளி பூசப்பெறுவதும் நடைமுறையிலுள்ளது. எதிர்பலிப்பு விதிகள் (laws of reflection). எதிர் பலிப்பு என்னும் ஒளியியல் விளைவு இரு விதி களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. 1.ஆடியின் மீது படும் சுதிரும், பட்டு மீளும் கதிரும், ஆகிய இவ்விரண்டும் ஆடியைப்