862 ஆடியான்
862 ஆடியான் தான உள்ளன. 1883இலேயே தாமஸ் எடிசன் என் பார் (Thomas Edison) ஒரு வளிமத்தில் (gas) அல்லது வெற்றிடத்தில் (vacuum) அமைக்கப்பட்டுள்ள ஒரு வெப்பமூட்டிய இழையிலிருந்து அருகே உள்ள ஒரு தட்டுக்கு மின்னோட்டம் ஏற்படுகிறது என்று கண் டறிந்தார். ஆனால் மின்னோட்டம் எவ்வாறு கடத் தப்படுகிறது என்பது விளங்கவில்லை. இது எடிசன் விளைவு (Edison's effect) என வழங்கப்பட்டது. மின்கல அடுக்கு ஆடியான் குழல் www www ல்லை இழை மின்கல அடுக்கு (பதிவுரிம விண்ணப்பத்தில் உள்ள படம்) ஆடியான் சுற்றுவழி தட்டு 1900இல் ஜே.ஜே. தாம்சன் (J. J. Thompson) என் பார் மின்துகளியக்கக் கோட்பாட்டின் மூலம் மின் னோட்டத்தின் குவைய இயல்பு இயக்கத்தை (quanti- fied nature) விளக்கினார். பிறகு எடிசன் விளைவை யும் (Edison Effect)அவர் மின்துகளியக்கக் கோட் பாட்டால் விளக்கினார். சூடான இழை மின்துகளை வெளியிடுவதும், அந்த மின்துகள்கள் உடனே உலோகத் தட்டால் திரட்டப்படுவதும் மின்னோட் டத்தை ஏற்படுத்தின என்பது அறியப்பட்டது. மின் னோட்டம் மின்துகளியக்கத்துக்கு எதிர்த் திசையில் பாயும். குளிர்ச்சியான உலோகம் மின்துகள்களை வெளியிடாது. எனவே, குளிர்ந்த தட்டிலிருந்து இழையை நோக்கி எதிர்த் திசையில் மின்துகள்கள் பயணம் செய்ய வழியில்லை. இந்த இயக்க முறை யைப் பயன்படுத்தி 1897இல் ஜே. ஆம்புரோஸ் ஃபிளெயிங் (J. Ambrose Fleming) என்பார் முதன் முதலாக மாறுமின்னோட்டத்தைத் திருத்தும் முறையை (method of rectification) கண்டறிந்தார். இது வானொலி அலை ஒற்றியாகச் (detector) செயல் பட உதவியது. 1940களில் திரிதடையத்தைக் (transistor) கண்டறியும்வரை வானொலியில், பகுதி- கடத்தி இருமுனையத்தின் (semi-conductor diode) இடத்தில் ஆடியான் அமைந்திருந்தது. என்றாலும் இந்தக் கருவி ஒரு குறிப்பலையை (signal) மிகைப் படுத்த உதவாததால், மின்துகள் மற்றும் பகுதிக் கடத்தித் தொழில்நுட்பவியலின் பெருவளர்ச்சி தடைப்பட்டிருந்தது. பிறகு, ஃபிளெமிங் என்பார் வெற்றிடக் குழலில் மூன்றாவது மின்முனையை நுழைத்து இந்த மூன்றாவது மின்முனைக்கு மாறு மின்னழுத்தத்தைத் தந்தால் அதையொத்த மாறு மின்னோட்டம் சூடான இழைக்கும் உலோகத் தகட்டுக்கும் இடையில் நிகழும் என்று கண்டறிய உதவியது, வீடிஃபாரெஸ்டின் ஆடியான் கண்டு பிடிப்பின் ஆழமான உட்கருத்தாகும். இந்த மாறு மின்னோட்டம் குழலுக்கு வெளியிலுள்ள சுமையில் (load) பாயும்போது மூன்றாவது மின்முனைக்குத் தரப்பட்ட மின்னழுத்தத்தைப் போன்ற இயல்பு டைய, ஆனால் அளவில் பெரிய, மின்னழுத்தத்தை உண்டாக்கும். அதாவது மின்னழுத்த மிகைப்பு (voltage amplification) உண்டாகும். 1906ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் லீடிஃபாரெஸ்ட் தனது மூன்று மின்முனை மிகைப் பிக்கான பதிவுரிமத்துக்கு (patent) விண்ணப்பித் தார். அதற்கடுத்த நாளே அமெரிக்க மின்பொறி யாளர்கள் நிறுவனத்தில் "தி ஆடியான் எ நியூ ரிசீவர் ஃபார் ஒயர்லெஸ் டெலிகிராஃபி" அதாவது, "கம்பியில்லாத்தொலைவரி முறைக்கான ஆடியான் என்ற புதியதொரு பெறுங்கலம்" என்ற ஆய்வுரை யையும் நிகழ்த்தினார். 1907ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இவருக்குப் பதிவுரிமம் வழங்கப்பட் டது. இந்தப் பதிவுரிமத்தின் முதல் விளக்கப்படிவம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் உருப்பெருக்க வேண்டிய குறிப்பலை, குழலின் சூடாக்கிய இழைக் கும் ஒரு தட்டுக்கும் இடையில் இணைக்கப்பட்டுள் ளது. இந்தக் குழலின் வெளியீடு, இழைக்கும் மற் றொரு தட்டுக்கும் இடையில் எடுக்கப்படுகிறது. இழைக்கும் முதல் தட்டுக்கும் எதிர்ப் பக்கத்தில் இந்த மற்றொரு தட்டு உள்ளது. இது வெற்றிட உருப் பெருக்கத்துக்கு அவ்வளவு உகந்ததல்ல. என்றாலும் பதிவுரிமத்தில், மூலக்கூறுகள் செயல்படுகின்ற நிலை யிலுள்ள வளிம இடையகம் ஒன்று குழலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு ஏற்பட்ட உருப்பெருக்கம் மின்துகளின் ஈர்ப்பாலும் விலக்கத் தாலும் ஏற்படாமல் மின்னணுப்பாட்டு மாற்றங் களால் (changes in ionization) மட்டுமேதான் ஏற் பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. நடை முறையில் பயன்படுத்திய ஆடியான்களில் பல நிலை மைகள் கட்டுப்படுத்தப்படாத நிலையில் அமைந்தி ருந்ததால் அவற்றின் செயல்பாட்டுத் திறமை தன்- விருப்ப நடத்தை உடையதாக இருந்தது. இவற்றி னுடைய வளிம அளவு கூடுதலாக இருந்ததால் இவற்றை மென்குழல்கள் என வழங்கினர். இர்விங் லாங்மூர் (Irwing Longmuir) என்பார் இக்குழல்களின் வெற்றிடத்தன்மையைக் கூட்டிச் செயல்பாட்டுத் திறம்