ஆடுகள் 893
மாறாமலிருக்கச் செய்து ஆடியான்களின் சிறப்பியல் புகளின் தரத்தை உயர்த்தினார். இதே போன்ற சூழ்நிலை திரிதடைய வடிவமைப்பிலும் பின்பற்றப் படும் நிலையேற்பட்டது. ஈரம் புகாமலிருக்கும்படி திரிதடையங்கள் சூழ்நிலையிலிருந்து முற்றிலும் அடைக்கப்படும் வரை' திரிதடையங்களில் சிறப்பியல் புகள் கட்டுப்படுத்த இயலாத தன்விருப்ப நடத்தை யைப் பெற்றிருந்தன. காண்சு, மின்பொறியியல், மின்துகளியல். நூலோதி Lee De Forest, The Audion, A new receiver for wireless telegraphy, Trans. A. I. E. E., 25:735, 1907; U.S. Patents No. 841,387 (1907) and No. 879,532 (1508), issued to Lee De Forest. ஆடுகள் விலங்கியல் போவிடே ஆடுகள், பாகுபாட்டில் (bovidae) எனப்படும் அசைபோடும் விலங்குகள் வகையினைச் சார்ந்தவை. இப்பிரிவில் கேப்ரைன் (caprine) எனப்படும் பகுதியில் இவை வைக்கப்பட் டுள்ளன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் இப் பகுதியில் உள்ளன. வெள்ளாட்டினை ஏழையின் பசு என்று அழைப்பர். வெள்ளாடு மனித இனத்துடன் சுமார் 10,000 ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டுள்ளது என அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன. காட்டி னில் ஓடித்திரிந்த விலங்கினங்களில், மனிதன் வளர்ப்பு விலங்காக ஆச்சிய முதல் விலங்கு வெள்ளாடு. சுவிட் சர்லாந்து நாட்டில், வெள்ளாட்டினைத் தாயற்ற குழந்தைகளுக்குத் தாய் என அன்புடன் அழைக்கின் றனர். நம் நாட்டிலும் பண்ணைச் சிறுவனின் உற்ற நண்பன் வெள்ளாடு, நம் தேசத் தந்தை காந்தியடி கள் விரும்பி வளர்த்த விலங்கு வெள்ளாடு. பயன்கள், வெள்ளாட்டினால் பல நன்மைகள் உள்ளன. இவை, மற்ற கால்நடை கள் உண்ண விரும் பாத ஆடுதின்னாப் பாளையைத் தவிர மற்ற செரி க்க இயலாத தழைகளையும் புற்களையும் உண்ணு கின்றன; இது கடும் வறட்சியையும் தாங்கக் கூடிய வையாகும். வெள்ளாட்டின் பால் ஒரு சத்துணவா செரிக்கக் கும். இது எளிதில் கூடியதாகையால் குழந்தைகளுக்கும் நோயினால் நலிவுற்றவர்களுக்கும் கொடுக்கலாம். பசுவின் பால் ஒவ்வாதவர்களுக்கு (allergy) வெள்ளாட்டின் பாலைக் கொடுக்கலாம். நம் நாட்டில் இறைச்சியை உற்பத்தி செய்யும் கால் ஆடுகள் 863 நடைகளில் முதலிடத்தைப் பெறுவது வெள்ளாடு. இதன் இறைச்சியை மக்கள் மிகவும் விரும்பி உண்ணு கின்றனர். இதன் தோல் அயல் நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுவதால், நமது நாட்டிற்கு அதிகமாக அன்னியச் செலாவணி கிடைக்கிறது. இதன் குடல் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் தையல் நூலாக வும் உதவுகிறது. நம் நாட்டில் 1956ஆம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்படி சுமார் ஆறரைக் கோடி ஆடு கள் உள்ளன. இதில் இராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ஆடுகளும், உத்தரப் பிர தேசத்தில் 8 லட்சம் ஆடுகளும், தமிழ் நாட்டில் சுமார் 4 லட்சம் ஆடுகளும் உள்ளன. இந்த எண்ணிக் கைத் தற்போது இருமடங்கிற்கு மேல் உயர்ந்திருக்க லாம். நம் நாட்டில் உள்ள ஆடுகளில் பெரும்பகுதி எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் சாராமல் நாட் டினம் என அழைக்கப்படும் வகையில், எந்த குறிப் பிடத்தக்க குணங்களையும் கொள்ளாமல் உள் ளன. இவற்றின் பால் உற்பத்தித் திறனும், மிகக் குறைவாகவே உள்ளன. இதற்கான காரணங்கள்: பொதுவாக இவை சரிவரக் கவனிக்கப்படாததும், நல்ல முறையில் தீவனங்கள் அளிக்கப்படாததுமே யாகும். ஆடு வளர்ப்பில் பல நன்மைகள் உள்ளன. அவற்றில் கீழ்வருவன குறிப்பிடத்தக்கவை. 1) ஆடு வளர்ப்பிற்கு முதலீடு குறைவு. ஒரு பெட்டையாட்டினைச் சுமார் ரூ.100/- விலையில் நாம் விலைக்கு வாங்கலாம். இப்பெட்டையாடு சுமார் ஆறிலிருந்து பத்தாண்டுகள் வரை பால் கொடுக்கும். 2) மற்ற கால்நடைகளைப் போல் அல்லாமல், இவற்றினை வளர்க்கப் பெரிய கட்டிடங்களோ, சாதனங்களோ அதிகம் தேவையில்லை. 3) இவை மிகக் குறைந்த வயதிலேயே, அதாவது சுமார் 10 இலிருந்து 12 மாதங்களுக்குள், பால் தரத் தொடங்குகின்றன. 4) வெள்ளாடு பொதுவாக ஒரே கருவில் இரண்டு குட்டிகளை ஈனக்கூடியது. 5) இது எவ்வகைத் தீவனத்தையும், தழை களையும், புற்களையும் தின்று வளரக்கூடியது. 6) வெள்ளாட்டினைப் பசுக்களுடன் ஒப்பிடும் போது, அவை மிகக் குறைந்த தீவனம் உண்டு, அதிக அளவு பால் உற்பத்தி செய்யக் கூடியன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.