ஆண்டிசைட்டு 871
ஆண்டிசின் ஆண்டிசின் (andesine). இடைநிலை பிளாஜியோ கிளேசு (intermedicse plagicclase), ஃபெல்சுபார் களான ஆலிகோகிளேசு (oligcclase), லாப்ரடோ ரைட்டு (labradorite), பிட்டோல்னைட்டு (bytownite) ஆகியவற்றுடன் ஒத்த இயல்புகளுடைய கனிமமாகும்; உயர்வெப்பநிலையில் ஆல்பைட்டின் கட்டமைப்புடை யது. இயற்கையாகக்குளிரும்போது அழகிய வண்ண மிளிர்வுடைய சிறப்புக் கட்டமைப்பை அடைகிறது. இந்தச்செயல்முறைக்கு லாப்ரடைசிங் என்று பெயர். மணிப்படிக ஆண்டிசின் (பயோடைட்டுடன் அமைந்தது) முச்சரிவுப் படிகவகையுடையது. இதன் வேதியியல் வாய்பாடு n Na Al Si, 08 I'm Ca Al, Si, 0. 1 0g படிக அச்சு ஆகும். இதில் பொட்டாஷ் பேரியம், ஃபெல்சுபார் மூலக்கூறுகள் கலந்து காணப்படும். களின் விகிதம் a:b:c 0.6357:1: 0.5521.ஒளி விலகல் கோணங்கள் C = 93°23' 8 = 116°3' y 89. 59'. கனிமப்பிளவுக் கோணம் bc(010) ^ (001) 86°14'. ஆல்பைட்டுடன் இது இரட்டுறல் அடையும். இதுதின்ணிய, பிளவுடைய மணிப்பரல்களாக கிடைக் கிறது. சடினஎண் 5முதல் 6வரையிலும் ஒப்படர்த்தி 2.60 முதல் 2.75லரையிலும் மாறுபடும். ஆல்பைட்டை ஒத்த கனிமப்பிளவுகளைக் கொண்டிருக்கும். இது நொறுங்கும் இயல்பினது. இதன் கனிம முறிவு சீரற்ற சங்கு முறிவு நிலையிலிருந்து வரை இருக்கும். வெள்ளை, சாம்பல், பச்சை, மஞ்சள்,பழுப்பு,சிவப்பு ஆண்டிசைட்டு 871 நிறமுடையது. இதில் நிறமற்ற வகையும் உண்டு. நீலம், பச்சை நிறங்கள் பரவலானவை. Fe,03 ஆலான மெல்லிய அழுக்கு வடிவ உள்ளடக்கங்கள் b(010) அச்சுக்கு இணையாகவோ b படிக அச்சுக்கு 15° சாய்ந்த தளத்திலோ அமையும். இது ஒளி ஊடு ருவு தன்மையிலிருந்து ஒளிகசியும் தனமை வரை மாறும் இயல்பு உடையது. இதற்கு சூரிய காந்தக்கல் (sun stone) அல்லது அவெஞ்கரைன் (aventurine) என்று பெயர். பயன் கிடைக்குமிடம். ஆண்டிசின் மணி அமைவு, எரி மலைப் பாறைகளில் ஆலிகோகிளேசைவிட பரவலாக கிடைக்கிறது. குறிப்பாக இது நடுத்தரச் சிலிக்கா அளவுள்ள பாறைகளின் சிறப்புக் கூறாக அமையும். ஆண்டிசைட் (andesite) என்ற இடைப்பட்ட அனற் பாறையில் ஆண்டிசீன் பெரும் படிமத்தனிமங்களாகக் கிடைக்கின்றது. இதில் அணிமணியாகப் படுத்தப்படும் வகை கொலம்பியாவில் மார்மட்டோ (Marmato) அருகில் ஆண்டிஸ் (Andes) என்னுமிடத்தில் ஆண்டிசைட்டு வகைப் பாறைகளின் உட்கூறாகக் கிடைக்கிறது; இத்தாலியில் அடமெல்லோ (Adamello) மாவட்டத்தில் டிரென்ட்டினோ எனுமிடத்தில்டோன லைட்டு (tonalite) எனும் பாறைகளில் கிடைக்கிறது; பிரான்சில் ஈஸ்டெரெல் மாவட்டத்தில் செயின்ட் ராபயேலில் (St. Raphael) படிகங்களாகக் கிடைக் கிறது; குறுமணிகளாக ஜப்பானில் மயேயாமா(Maye- yama), ஷினானோ (shinano) ஆகிய இடங்களில் கிடைக்கிறது. காண்க, ஃபெல்சுபார்; மணிக்கல், அனற்குழம்புப் பாறைகள். பயன். இது அணிமணியாகப் பயன்படுகிறது. நூலோதி Lapedes, D.N., McGraw-Hill Encyclopaedia of Science and Technology, 4/ e, McGraw- Hill Book Company, New York, 1977. ஆண்டிசைட்டு அதிக சிலிக்கா அமைந்த பசால்ட்டுக்கும் ரையோ லைட்டுக்கும் இடைப்பட்ட அனற் பாறையாகும். திரள்படிக நிலைக் கட்டமைப்புடையது (porphritic structure). தொடக்கப் படிக நிலைப் பொதிகாரை புறத்தன்மை உடையது. மிகநுண்ணிய படிக வகைக ளால் அமைக்கப்பட்ட பாறைகளாகிய ஃபெல்சைட்டு