872 ஆண்டிசைட்டு
872 ஆண்டிசைட்டு (felsite) என்று அழைக்கப்படும் பாறைகளின் வகுப் பைச் சார்ந்தது. இது பெரும்பாலும் வெளிர்ந்த சாம்பல் அல்லது பழுப்பு நிறமுடையதாகவே காணப் படும். இவற்றில் சிறிதளவு காரத்தன்மை பொதிந்த ஆர்ன்பிளெண்டு (hornblende), ஆஜெரின், ஆகைட்டு (aegerine augite) போன்ற கனிமங்கள் கலந்து காணப்படும். இப்பாறைகளில் சிலிக்கான்-டை-ஆக்சைடு விகி தம் 55லிருந்து 60 விழுக்காடாக இருக்கக்கூடும். இதில் மிகுதியாக கிடைக்கக்கூடிய கனிமங்கள் ஆண் டிசின், ஆலிகோகிளிசு என்னும் ஃபெல்சுபார் கனி மங்களாகும். இதில் சராசரியாக அனார்த்தைட்டு கூட்டுச்சேர்க்கை 40 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ளார்கள். மற்றும் டயாப்சைடை ஒத்த ஆகைட்டு கனிமமும் காணப்படும். இப்பாறைகளில் சற்று காரத்தன்மை மிகுதியாகக் கொண்ட ஆண்டி சைட்டாக இருக்குமாயின் அவற்றில் ஆலிவின் (olivine)கனிமமும் காணப்படலாம். இவை மிகச் சிறிய கனிம மணிகளைக் கொண்டுள்ள இடைநிலை (inter- mediate) எரிமலை அணற்பாறையாகும். இலை ஆலி கோகிலேசு (oligoclase)அல்லது ஆண்டிசின்(andesine), பிளஜியோகிலேசு ஃபெல்சுபார் கனிமங்களைப்பெரும் பான்மையாகக் கொண்ட இவை வேதியியல் மற்றும் கனிம இயல் பண்புகளில் டயோரைட்டு என்னும் பாறையை ஒத்து இருக்கும். இப்பாறைகள் திரள் படிகநிலை (porphyritic) நுண் இழைமையை (texture) அடிக்கடி கொண்டிருக்கும். இரும்பு, மக்னீசியம் கனிமங்களும் ஃபெல்சுபார் கனிமங்களும் இவற்றில் பொதி படிகங்களாகக் (phenocryst ) காணப்படும். அக்கட்டத்தில், அக்கனிமங்கள் சூழ்பட்டை அமைப்பு (zoning structure) கொண்டவைகளாக வரக்கூடும். ஹைபர்ஸ்தீன் (hypersthene), என்ஸ்ட்டடைட்டு (enstatite) ஆகிய கனிமங்கள் டயோரைட்டு பாறைகளி லிருப்பதைவிட ஆண்டிசைட்டு பாறைகளில் மிகுதி யாகக் காணப்படும். பைராக்சின் கனிமம் மிகுதி யாகக் கொண்டுள்ள ஆண்டிசைட்டு பாறைகளை ஆலிவீன் இல்லா பெசால்ட்டு என்றும் அழைக்கி றார்கள். இப்பாறைகளிலுள்ள பொதி பொருள் களில் (groundmass) படிமப் பொருள்கள் (glassy) படம் 1.ஆண்டிசைட்டு எரிமலைகள்