பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/904

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874 ஆண்டு

874 ஆண்டு கடல் பசால்ட்டு ஆண்டெசைட்டு -ஆண்டிசைட்டு- மேலோடு காப்ரோ காப்ரோ ஆண்டெசைட்டு கிரானோடயோரைட்டு படம் 2. தீவுத்திட்டுகளில் (island arcs) ஆண்டிடசைட்டுப் பாறை உருவாக்கக் கட்டங்கள் அ) பசால்ட்டு உருவாதல், ஆ) காப்ரோ பாறைக்குழம்பு தேக்கம் உருவாதல், இ) ஆண்டெசைட்டு உமிழ்வு பாறைக்குழம்பு ஒருங்கிணைதலும் பாறைக்குழம்பு உருவாதலும்.சு) தொடர்ந்த ஆண்டிசைட்டு உமிழ்வு பாறைக்குழம்பு ஒருங்கிணைதலும், பாறைக் குழம்பு உருவாதலும். பொழுது மாறி உருவாகியிருக்கலாம் என்றும் கருது கிறார்கள். காண்க, பசால்ட்டு; அனற்பாறைகள்; எரிமலை; கடல்தீவுகள். நூலோதி ஞா.வி.இரா. 1. Dana, E.S., Ford, W.E., A Text Book of Mine- ralogy, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Milovsky, A.V., Kononov, O.V., Mineralogy, Mir Publishers, Moscow, 1985. ஆண்டு சூரியனைப் புவி ஒருமுறை சுற்றிவரும் கால் அளவு ஆண்டு (year) எனப்படும். இதனை, சூரியன் வானத்தில் விண்மீன்களைச் சார்ந்து பூமியை முறை சுற்றிவரும் தோற்றக் காலம் (apparent time) எனவும் கொள்ளலாம். ஆதலால் இந்த ஆண்டுக்கு 'மீன்வழி ஆண்டு' (sidereal year) எனப் பெயர். இதன் காலஅளவு ஏறத்தாழ 365.2564 சராசரிச் சூரியநாட்கள் (mean solar days) ஆகும். சூரிய நாள் என்பது அடுத்தடுத்த இரு நண்பகல் அல்லது நள்ளிரவுகளுக்கிடைப்பட்ட காலம் ஆகும். பருவ ஆண்டு (tropical year). சூரியனின் தோற் றப் பாதையில் (ecliptic) உள்ள y என்ற மேட முதற் புள்ளியைச் (first point of Aries) சூரியன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 21ஆம் நாள் கடந்து செல் கிறது. இந்த நாளில்தான் இளவேனிற் காலம் (spring season) தொடங்குகிறது. என்ற புள்ளி, சூரியப்பாதையில் சூரியன் செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் ஓர் ஆண்டுக்கு ஏறத்தாழ 50.25" தொலைவு நகருகிறது. இந்நிகழ்ச்சி சமநாட்புள்ளி களின் அயனசலனம் (precession of the equinoxes ) எனப்படும். இதனால் சூரியன் மறுமுறை இப் புள்ளியைச் சந்திக்க எடுத்துக் கொள்ளும் நேரம், ஒரு மீன்வழி ஆண்டைவிடச் சற்றுக் குறைவானது. இதில் 365.2422 நாட்கள் உள்ளன. இந்தக் கால அளவைக் கொண்ட ஆண்டுக்குப் பருவ ஆண்டு எனப்பெயர். பெசல் ஆண்டு (Besselian year). பருவ ஆண்டின் தொடக்கத்தை மார்ச்சு மாதம் 21ஆம் தேதி எனக் கொள்ளாமல், சூரியனின் நெட்டாங்கு (longitude) 280-ஆக இருக்கும்போது பருவ ஆண்டு தொடங்கும் என்ற புதிய கருத்தை ஜெர்மானிய வானியல் அறி ஞரான பெசல் ( Bessel) என்பவர் வெளியிட் டார். இதன்படி பருவஆண்டின் தொடக்கமும் நிருவாக ஆண்டின் தொடக்கமும் சற்றேறக் குறைய ஒன்றாகின்றன. இதன்படி பெசல் ஆண்டும் ஏறக்குறைய ஜனவரி முதல் தேதியில் ஆரம்ப மாகிறது. இக்கருத்து, பல வானியல் கணிப்புகளுக்கு