பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/906

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 ஆண்டெணுலேரியா

876 ஆண்டெணுவேரியா நூலோதி 1. Kumaravelu, S., Astronomy, London Misson Press, Nagercoil, 1967 2.Smart, W.M., Spherical Astronomy, 6th edition, Vikas Publishing House Pvt. Ltd., 1979. ஆண்டெணுலேரியா ஆண்டெணுலேரியா குழியுடலி வகுப்பைச் சேர்ந்த உயிரியாகும். திரண்ட நீர் வேர்களில் இருந்து தோன்றிய அடர்ந்த செங்குத்தான தண்டுகளை இக்காலனி கொண்டுள்ளது. ஒவ்வோர் இடைக் கணுவும் (intermode) ஒரே வட்டமாக அமைந்த கிளைகளைத் தாங்கியிருக்கின்றன. இக்கிளை களுக்கு நீர்த்துண்டுக் கிளைகள் (hydroclad) என்று பெயர். பாலிப்புகள் ஒரே வரிசையில் நீர்க் கிளைகளின் மீது உருவாகின்றன. இவற்றின் ஹைட் ரோதீக்காக்கள், கிண்ணம் போன்ற வடிவத்தைக் கொண்டன. இவை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்ற சிறப்பு வாய்ந்த சிறிய நெமட்டோபோர்கள் (nema tophores ) எனப்படும் பாலிப்புக்களைப் பெற்றிருக் கின்றன. ஆண்டெனுலேரியா (antennularia) கொட் டும் செல்களைப பெற்றிருக்கின்றன. பெரிய பென் கோனேன்ஜியா (ovate gonangia) நீர்க்கிளைகளில் அடிப்பகுதியில் உள்ளன. இவற்றின் பிளாஸ்டோ ஸ்டைல்கள், பிளானுலா எனும் இளவுயிரிகளைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் உருவாக்குவதில்லை. மெடுசாக்களை ஆண்தன்மை நீக்குதல் (தாவரம்) ஆண் தன்மை நீக்குதல் (emasculation) என்பது தாவரங்களில் இனக்கலப்பிற்காக அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதற்கு முன், தேர்ந்தெடுத்த தாய்ச் செடிகளின் மலர்களிலிருந்து மகரந்தத் தாள்களை (stamens) நீக்குதலாகும். இரு பாலின (bisexual) மலர்களை உடைய தாவரங்களில் இனக்கலப்புக்கு ன் மகரந்தத்தாள்களை நீக்குதல் இன்றியமையாத ஆண் செடி, பெண் செடி என்று வெவ் ள்ள இனங்களில் (ஒரு பாவின் முறை தேவைப்படுவதில்லை. ஆனால் பெண் செடி களில் மற்ற இனச் செடிகளின் மகரந்தம் சூலக முடியில் சேராமல் இருக்க அதை மூடிப் பாதுகாக்க வேண்டும். ஆண் தன்மை நீக்குவதற்கு வல்லுநர்கள் கடைபிடிக்கும் முறைகள் கீழே தரப்படுகின்றன. 1) ஆணகத்தை நீக்குதல், நுண்ணிய இடுக்கியைக் (forceps) கொண்டு மகரந்தத் தாள்களை அல்லது மகரந்தப் பையை நீக்கிவிடலாம். கோதுமை (wheat), நெல் (paddy), பார்லி (barley), ஒட்ஸ் (oats), பயறு வகைகள் (pulses), சோய் அவரை (soybeans), அவரை வகைகள் (beans), புற்கள் (grasses), பருத்தி (cotton), புகையிலை (tobacco) முதலியவற்றில் ஒட்டுச்சேர்க்கை செய்யும் பொழுது இம்முறை கடை பிடிக்கப்படுகிறது.மலர்கள் சிறியவையாக இருப்பின் கூர்மையான, உருண்டை அல்லது வளைந்த முனை யுடைய சிறிய இடுக்கிகளைப் பயன்படுத்தி அவற்றி லிருந்து மகரந்தப் பைகளை நீக்கலாம். பெரிய மலர்க ளிலிருந்து கைவிரலினால் இவற்றை நீக்குவது எளிது. 2) வெந்நீர், தண்ணீர், சாராயம் ஆகியவை மூலம் மகரந்தத்தூளை உயிரிழக்கச்செய்தல். சோளம் (maize), நெல், புற்களில் வெந்நீரைக் கொண்டு மகரந் தத்தைச் செயலிழக்குமாறு செய்யப்படுகின்றது. இம் முறையில் மகரந்தத்தை நீக்க வேண்டியதில்லை. பூக்கதிர்களை 45° செ. முதல் 48° செ. வரை வெப்ப முள்ள நீரில் சுமார் ஒன்று முதல் பத்து நிமிடங்கள் மூழ்கவைத்து எடுப்பதனாலும் மகரந்தத்தைச் செய விழக்கச் செய்யலாம். தெர்மாஸ் குடுவையில் (thermos flask) வெந்நீரை நிரப்பி நெல், கோதுமை விளையும் நிலங்களுக்கு எடுத்துச் சென்று பயிருக்கு எந்தவிதச் சேதமும் விளைவிக்காமல் மஞ்சரியை வளைத்து அதில் மூழ்க வைத்து ஆண் தன்மையைப் நீக்கலாம். இதுபோன்று உறைபனியின் வெப்ப நிலையிலுள்ள நீரில் மஞ்சரிகளை அமுக்கி எடுப்பதன் மூலமும், கோதுமை, நெல் முதலிய பயிர்களில் ஆண் தன்மையை நீக்க முடியும். 3) ஆண் மலட்டுத் தன்மை (male sterility). பார்லி, சோளம், கம்பு, பருத்தி முதலிய பயிர்களில் ஆண் மலட்டுத்தன்மை இயல்பாகவே இருக்கின்றது. இதனால் மகரந்தத் தாள்களை நீக்காமலேயே இவ் வகைப் பயிர்களில் இனக்கலப்பு மிக எளிதாகவும் குறைந்த செலவிலும் செய்ய முடிகின்றது. ஆண்தன்மை நீக்காமல் மகரந்தச்சேர்க்கை செய்தல். கரும்புச் (sugarcane) செடியில் இனக்கலப்புச் செய் வதற்கு மலர்களின் ஆண் தன்மையை நீக்க வேண்டிய தேவை இல்லை. இது மிகச்சிறிய ஏராளமான பூக் களைக் கொண்டிருப்பதனால் ஆண் உறுப்புக்களை நக்குதல் மிகவும் கடினம். மேலும் தன்மசுரந்தச் சேர்க்கையைக் காட்டிலும் அயல் மகரந்தச் சேர்ககை