பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/907

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்தன்மை நீக்குதல்‌ 877

விரைவாக நடைபெறுவதாலும், சூலகமும் மகரந் தமும் ஒரே காலத்தில் பருவத்துக்கு வராமல் இருப்ப தாலும் இதில் ஆண் உறுப்புகளை நீக்காமலேயே இனக்கலப்பு ஏற்படுத்தக்கூடும். மலரின் உறுப்பின் அமைப்புகளைப் பொறுத்து ஆண் தன்மையை நீக்கும் முறை வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, பருத்தியில் மலரின் இதழ்களை முதலில் கையால் கிள்ளி எடுத்துவிட்டுப் பிறகு ஆண் பாகம் முழுவதும் நீக்கப்படுகிறது. மகரந்தம் பருவத்துக்கு வரும் காலத்தைப் பொறுத்து ஆண் தன்மையை நீக்கும் பணியைச் செய்து முடிக்கும் நேரத்தை முன்னதாகவே உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு பயிரில் காலையில் ஏழு மணியளவில் அதன் மகரந்தம் பருவத்துக்கு வருமானால் அதற்கு முந்திய நாள் பிற்பகலிலேயே, மறுதினம் முதிர்ச்சியடைந்து திறக்கக் கூடிய மொட்டுகளைத் தேர்ந்தெடுத்து ஆண் தன்மையை நீக்கிவிட வேண்டும். பருத்தி, நெல் கோதுமை முதலிய பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை மேற்கொள்ளப்படுவதற்கு முந்திய தினம் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் மகரந்தத்தை நீக்கி மலர்களை மெல்லிய காகிதத்தினாலான உறையினால் மூடிவிட வேண்டும். இவ்வாறு மூடி வைப்பதால் சேரக்கூடாத மகரந்தம் சூலகமுடியில் கலப்பதைத் தடுக்க முடிகிறது. மறுநாள் காலையில் சரியான நேரத்தில் ஆண் செடியாகத் தேர்ந்தெடுக் கப்பட்டதன் பூக்களிலிருந்து மகரந்தத்தை எடுத்துத் தாய்ச் செடியான அதாவது ஆண்தன்மை நீக்கப் பட்ட பூக்களில் உள்ள சூலகமுடி மீது துவியபின் காகிதப் பையால் மூடிவிட வேண்டும். ஆண் தன்மை நீக்கியவுடன் சிவப்புநிறப்பைகளையும்,மகரந்தம் தூவி இனக்கலப்பு செய்தபின் வெள்ளை நிறப் பைகளையும் உபயோகிப்பது இனக்கலப்பு வேலை செய்வதில் தவறும், குழப்பமும் நேரிடாமலிருப் பதற்கு உதவும். சில முக்கியமான பயிர்களில் ஆண்தன்மை நீக்கும் முறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 1.பருத்தி பூக்கள் காலையில் மலரும். இன உறுப்புகளும் அைைலயில் பருவத்துக்கு வரும். ஆகவே முன் நாள் மாலை 3 முதல் 6 மணிக்குள் முற்றிய மொட்டுகளில் உள்ள பூவிதழ்களை நீக்கி, மகரந்தத் தாளையும் நீக்கிப் பிறகு சிவப்புக் காகிதப் பைகளால் மூடிவிட வேண்டும். 2.உருளைக்கிழங்கு. அயல் மகரந்தச்சேர்க்கைக்கு முள்நாள் மாலையில் ஆண் தன்மையை நீக்க வேண்டும். மறுநாள் மலரும் மொட்டுக்களைத் பூவிதழ்களை விலக்கிச் தேர்ந்தெடுத்து அவற்றின் ஆண்தன்மை நீக்குதல் 877 சிறிய கூரிய முனையுடைய இடுக்கியினால் மகரந்தத் தாள்களை நீக்கிக் காகிதப்பை கொண்டு மூடிவிட வேண்டும். 3.புகையிலை, மொட்டுகளின் நுனி இளஞ்சிவப்பு நிறமாக மாறும்பொழுது ஆண் உறுப்புகளை நீக்க வேண்டும். மொட்டின் பூவிதழ்களை விரித்து மகரத்தத் தாள்களைக் கையினாலோ, சிறிய இடுக் கியினாலோ நீக்கிவிட்டுக் காகிதப் பையினால் மூடி விட வேண்டும். 4. கேழ்வரகு. முந்திய நாள் மாலையில் தேவை யான பூக்களைத் தவிர மற்றவைகளை மஞ்சரியி லிருந்து நீக்கிவிட வேண்டும். பிறகு நுண்நோக்கி யைப் பயன்படுத்தி, ஊசியினால் மகரந்தத்தை நீக்கி விட வேண்டும். 52° செ. வெப்பமுள்ள நீரில் மஞ்சரி யை, சுமார் இரண்டு முதல் மூன்று நிமிடம் மூழ்க வைத்து மகரந்தத்தைச் செயலிழக்கச் செய்யலாம். 5. மக்காச்சோளம். ஆண், பெண் மலர்கள் தனிக் கொத்துக்களாக அமைந்திருப்பதால் செடியின் மேல் பாகத்தில் உருவாகும் ஆண் பூக்கொத்தை நீக்கி விட்டால் போதும். பக்கவாட்டில் அமைந்திருக்கும் பெண் பூக்கொத்துக்கள் தாங்கிய மஞ்சரியைக் காகித உறையால் மூடிவிட வேண்டும். 6.நெல். கதிர்களில் உள்ள அதிகப் படியான பூக்களை அகற்றிவிட்டு குறிப்பிட்ட அளவு பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு முந்திய தினம் மாலை யில் இடுக்கியினால் அவற்றின் மகரந்தத் தாள்களை நீக்கிக் காகிதப் பையினால் மூடிவிட வேண்டும். மஞ்சரியை 42° செ. முதல் 44° செ. வரை வெப்ப முள்ள நீரில் 5 நிமிடம் மூழக வைத்தும் ஆண்தன்மை யை நீக்கலாம். 7.நிலக்கடலை (groundnut). மாலையில் மலர் மொட்டின் இதழ்களை விலக்கி, மரகந்தத் தாள் களை இடுக்கி கொண்டு நீக்கிவிட வேண்டும். இதில் படகு அல்வி இதழ்கள் (keel petals) சூலகத்தை மூடிக்கொண்டிருப்பதால் மலரைக் காகிதப்பை கொண்டு மூடவேண்டிய தேவையில்லை. நூலோதி 1. Dania: Bolany i India. 2. Boak 4. D. and T Crops, The A! எஸ்.எஸ். இரா.