பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/909

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்மை ஆக்கிகள்‌ 879

விதைப் குழந்தை விதைப் ஹார் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் பையை (scotalsacs) வந்தடைகின்றன. பிறந்த பின்னரும்கூட விந்தகங்கள் பையை வந்தடையாவிட்டால் ஆண்மை மோன்களைச் சிரை வழியாக (intravenous) குழந் தைக்குச் செலுத்தினால் விந்தகங்கள் வயிற்றிலிருந்து விதைப்பையை வந்தடையும். அப்படியும் அவை இறங்கிவராவிட்டால் 14 வயதிற்குள் அறுவைச் சிகிச்சை மூலமாக அவற்றை விதைப்பைக்குள் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும். இல்லை யெனில் அந்த ஆண், ஆண்மை இழக்க நேரிடும். ஏனென்றால் விந்தகங்களில் விந்தணுக்கள் (sperms) உற்பத்தியாவதற்கு அவற்றின் வெப்பநிலை உடலின் வெப்பத்தைவிடச் சற்றுக் குறைவான அளவில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் விதைப்பை இரண்டு தொடைகளுக்கும் இடையில் உடலுடன் ஒட்டாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்மை ஹார்மோன்கள் உற்பத்தியாவதற்கு மூலகாரணமாக இருப்பது மூளையின் கீழ்ப் பக்கத் தில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பியினால் சுரக் சுப்படும் லூட்டினைசிங் ஹார்மோன் எனப்படும் இனச்செல் உறுப்பு ஊட்ட ஹார்மோனாகும். பிட் யூட்டரியின் முன் மடலில் சுரக்கப்படும் லூட்டினை சிங் ஹார்மோன்தான் விந்தகங்களில் உள்ள விந்தகக் குழாய்களுக்கிடையில் (seminiferous tubules) காணப் படும் லீடிக் செல்களைத் தூண்டவிட்டு ஆண்மை ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. அதேபோல் பிட்யூட்டரி முன் மடலால் சுரக்கப்படும் ஃபாலிக்கிள் தூண்டும் ஹார்மோன் (FSH) என்னும் இனச்செல் உறுப்பு ஊக்க ஹார்மோனால் தூண்டப்பட்டு விந் தகக் குழாய்கள் விந்தணுக்களை உற்பத்தி செய் கின்றன. அதனால் விந்தணுக்களின் முழு வளர்ச் சிக்கு ஆண்மை ஹார்மோன்கள் மிக இன்றியமையா தன எனத் தெரிகிறது. ஆண்மை ஹார்மோன்கள் ஏறத்தாழ 14 வயதில் ஆண்களின் உடலில் சுரக்கத் தொடங்கி 22 வயதில் உச்சக் கட்டத்தை அடையும். அப்பொழுது ஆண் இனச்செல் உறுப்பாகிய விந்தகங்கள் புணர் உறுப் புகள், ஆண் இனப்பெருக்க மண்டலத்தைச் சேர்ந்த சுக்கிலச் சுரப்பி, விந்தகக் குழாய்கள் போன்றவை 8 முதல் 10 மடங்கு வரை அதிகப் பருமனாக வளரும். பினனர் 40 வயதில் ஆண்மை ஹார்மோன்களின் உற்பத்தி சுமார் பாதியாகக் குறைந்து ஏறத்தாழ 68 வயதில் ஐந்தில் ஒரு பகுதியாகக் குறைந்துவிடும். இனப்பெருக்கப் பருவம் அடைந்த ஓர் ஆணுக்கு ஆண்மை ஹார்மோனால் தலையில் வளரும் மயிர் ஓரளவு உதிர்ந்து தலையில் வழுக்கை ஏற்படும். மேலும் நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் மயிர் உதிர்ந்து ஒரு குறிப்பிட்ட வளைவு காணப்படும். ஆனால் பெண்களுக்கும், சிறு பையன்களுக்கும் ஆண்மை ஆக்கிகள் 879 நெற்றியில் மயிர் அரைவட்ட வடிவமாக வளர்ந் திருக்கும். அத்துடன் முகத்தில் தாடி மீசையும், காது கழுத்து, மார்பு, அக்குள், வயிறு, தொடைகள், புணர் உறுப்பு, விதைப் பைகள், கால்கள் ஆகிய இடங்களில் மயிர் கருகருவென்று அடர்த்தியாக வளரும். மேலும் முகத்தில் பருக்களும் உண்டாகும். கழுத்தில் குரல்வளை நீண்டும் தடித்தும் இருக் கும். இதனை ஆதாமின் ஆப்பிள் என்று சொல்வார் கள். குரல் உடைந்து பேச்சொலியும் மாறும். தோலில் அதிகப் புரதச் சத்து சேமித்து வைக்கப்படுவதால் தோலில் ஒரு கடினத்தன்மை ஏற்படும். அகன்ற மார்புடைய கம்பீரமான ஆண்களுக்கே உரிய உடற் கட்டை உருவாக்குவதற்கு ஏற்றவாறு உருண்டு திரண்ட தசைகளையும், அவற்றிற்கு ஆதரவாக நீண்ட தடித்த பலமுள்ள எலும்புகளையும் ஆண் ஹார்மோனே உண்டாக்குகின்றது. தசை வளர்ச்சி குறைவாக உள்ளவர்களுக்கும், முதியவர்கள் எலும்பு பலத்தை இழந்துபோகும்பொழுதும், ஆண்மை ஹார் மோன்களைச் சிரை வழியாக உடலினுள் செலுத்தி னால் அவர்களுக்குத் தசை வளர்ச்சியும் எலும்பு வளர்ச்சியும் ஏற்படும் என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். ஆண்களின் உடல் வெப்பம் பெண்களின் உடல் வெப்பத்தைவிடச் சற்றுக் கூடுதலாக இருக்கும். உட லில் அதிக அளவில் உயிர் வேதியியல் வினைகளும் வளர் சிதை மாற்றங்களும் ஏற்படுவதுதான் இதற்குக் காரணமாகும். அதனால்தான் பெண்களைக் காட்டி லும் ஆண்களுக்கு இரத்தத்தில் உள்ள சிவப்பணுக் களின் எண்ணிக்கை ஒரு கன மில்லி மீட்டருக்குச் சுமார் 70 ஆயிரம் கூடுதலாக இருக்கும். ஆண்மை ஹார்மோன்களின் உற்பத்தி வளி மண்டலச் சுற்று சூழ்நிலைகள், மனநிலை, இயற்கைப் பருவகால மாற்றங்கள், சிறப்பு உணர்வு உறுப்புகளான கண், காது, மூக்கு, நாக்கு போன்ற உறுப்புகளின் தூண்டு தலால் மாறும். நூலோதி 1. Gyton, C., Text Book of Medical Physiology. VI Ed., W.B. Saunder's Co., Philadelphia, 1981. 2. Ganong, W.F., Review of Medical Physiology, X Ed., Lange Medical Publications, Maruzen Asia (Pte) Ltd., 1980. 3.Cyril.A.Keele, Ericneil & Nurman Joels, Sam - son Wright's Applied Physiology, XIII Ed., Oxford University Press, Bombay, 1983.