882 ஆணி அடித்தல்
882 ஆணி அடித்தல் காணப்படலாம். பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத் தாள்கள் வட்ட அமைவில் (whirled) இருக் கும். ஒருசிலவற்றில் மட்டும் இவை திருகு முறையில் (spiral) இருப்பதைக் காணலாம். நூலோதி ஜா.கி. Lawrence, G.H.M., Taxonomy of Vascular Plants, The Macmillan Co., New York, 1951. ஆணி அடித்தல் மரம் போன்ற இரண்டு உறுப்புகளை, தேவைப் படும் வகையில் பொருத்தி நிறுத்துவதற்காக ஆணி அடித்து (nailing) இறக்குதல் தேவை. ஆணியின் புறப்பரப்பிற்கும், அதைச் சுற்றியுள்ள மர இழை களுக்கும் இடையில் உண்டாகும் அழுத்தத்தால். ஆணி அடிக்கப்பட்ட இடத்தில் நிற்கிறது. மரவேலை களுக்குப் பெரும்பாலும், எஃகினால் ஆன ஆணியே பயன்படுகிறது. ஒரு பக்கம் அகன்ற தலையும், மறு பக்கம் கூராக்கிய முனையும் இருக்கும். இதனைக் கம்பி ஆணி என்பர். கூர் முனையை மர உறுப்பின் மீது வைத்துத் தலையில் சுத்தியால் அடித்து ஆணியை இறக்குவர். புரி கொண்ட திருகாணியிலி ருந்து இது மாறுபட்டதாகும். திருகாணியின் தலைப் பில் வரிப்பள்ளம் இருக்கும். திருப்புளியை (screw driver) அதில் பொருத்தி அழுத்திச் சுழற்றுவதன் மூலம் திருகாணி உள்ளிறங்கும். அடிக்கடி பிரித்து விட்டு, மீண்டும் சேர்க்க வேண்டிய பொருள்களுக் குத் திருகாணி பொருத்தமானது. மர ஆணி என்பது மரத்துண்டை உருளை வடிவில் செதுக்கி, ஏற்கனவே துளை செய்த இணைப்பில் செருகி அடிப்பதாகும். கதவு, காலதர் (ventilator) போன்றவை இவ்வாறு செய்யப்படுகின்றன. மரத்தின் வலிமை, மரத்தின் தன்மை, ஆணியின் தன்மை, ஆணி அடித்த நிலைமை மற்றும் ஆணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆணி யால் சேர்க்கப்பட்ட இணைப்பின் வலிமை அமை யும். வன்மரம் மற்றும் அடர் மரங்களில் ஆணி வலிமையாகப் பிடிக்கப்பட்டிருக்கும். மென்மரங்க ளில் ஆணிப் பிடிப்பு குறைவு. ஆணியை வெளியே இழுக்க முடியாதபடி மிகுந்த தடை காட்டும் இடங் களில், இணைப்பு வலிவாக இருக்கும். பச்சை மரங் களில் அடிக்கும் ஆணி, மரம் காயக்காயத் தளர்ந்து விடும். பதப்படுத்திய மரங்களில் ஆணி இறுக்கமாக நிற்கும்; ஈரத்தால் மரம் நலிவுறும்போது ஆணியும் வலிவிழக்கும். மரத்தின் நாரோட்டத்திற்குச் செங் குத்தாக இறங்கும் ஆணிகள் கெட்டியாக இருப்ப தைப் போன்று, நாரோட்டத் திசையில் இறங்கும் ஆணி வலுவாக இருக்காது. வன்மரங்களில் ஆணி அடிக்கும்போது கட்டை பிளவுபட வாய்ப்புண்டு. சிறிய ஆணிகளை அங்கு பயன்படுத்தலாம். கட்டையில் ஓர் ஆணியைவிடச் சற்று குறைவான விட்டத்தில் துளை செய்து கொண்டு, அதில் ஆணியை இருத்தலாம். மென் மரங்களில் ஆணி இறுக்கமாக நிற்காது; எனவே பெரிய ஆணிகளைப் பயன்படுத்தலாம். ஆணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். ஆணியின் நீளத்திற்கேற்பவும், புறப்பரப்பிற் கேற்பவும் அதன் வலிவு கூடும். வழுவழுப்பான ஆணியைவிட, சொரசொரப்பான ஆணி வலிவாக இருக்கும். வன்மரங்களில் ஆணி அடிக்கும்போது ஆணியில் மெழுகைத் தேய்த்துக் கொள்வதுண்டு. நேராக அடித்த ஆணியைவிட, சாய்வாக அடித்த ஆணியை எளிதில் உருவ இயலாது. கட்டை. களின் இணைப்பு உருவிக்கொள்ளும் திசையில் ஆனி அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இங்கு ஆணி யின் எதிர்ப்புவிசை புறப்பரப்பின் இறுக்கம் அல் லது உராய்வை மட்டுமே பொருத்ததாக இருக்கும். உருவும் திசைக்குச் செங்குத்தாக, ஆணி அடித்தால் ஆணியின் துணிப்புவிசை (shear force) உதவிக்கு வரும். இணைப்பு மிகவும் கெட்டியாக இருக்கும். காண்சு, தக்க வேலை. ஆணின் சிறுநீர், இனப்பெருக்கப் பாதை எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்கின்றன. மனிதனும் இதற்கு விலக்கு அல்லன். இனப்பெருக்கம் செய்வதற்கான விந்து (seminal fluid) ஆணின் லிங் கத்தின் வழியாக (penis) (penis) வெளியேற்றப்பட்டுப் பெண்ணின் புணர்வாயில் (vagina) செலுத்தப்படு கிறது. மற்ற சமயங்களில் இதே லிங்கத்தின் வழியா கச் சிறுநீர் வெளிப்படுத்தப்படுகிறது. ஆகவே, சிறு நீரும், விந்தும் உடலுக்கு வெளியே வரும்போது ஒரே பாதையின் வழியாகத்தான் வெளிப்படுத்தப் படுகின்றன. ஒன்று வெளியாகும்போது மற்றொன்று வெளியாவதில்லை. ஆனால் உடலுக்குள்ளே. இவ் விரு மண்டலங்களும் தனித்தனியாக இயங்குகின்றன. திரவம் வெளியேற்றப்படும் பாதை மட்டும் இரண் டிற்கும் பொதுவாக உள்ளது. ஆகவே, இவற்றின் உள் அமைப்பைக் காணுங்கால், இது எவ்வாறு முடியும் என்று அறியலாம். மேலும், இவற்றின் உள்