ஆணின் சிறுநீர், இனப்பெருக்கப் பாதை 883
அமைப்பை அறிந்து கொள்வதால் ஆணுக்குக் கருத் தடை அறுவைச் சிகிச்சை எவ்விடத்தில் செய்யப் படுகின்றது, அப்படிச் செய்வதின் நோக்கம் என்ன என்பது எளிதில் புரியும். அ. சிறுநீர்மண்டலம் (urinary tract) சிறுநீரானது சிறுநீரகங்களில் (kidneys) உற்பத்தி யாகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலிருந்தும், ஒரு சிறு நீர் நாளம் (ureter) மூலமாகச் சிறுநீர், மூத்திரப் பையை (urinary bladder) வந்தடைகின்றது. பின்னர் சிறுநீர்த்தாரை (urethra) வழியாக வெளியேற்றப் படுகின்றது. சிறுநீரகங்கள். இரண்டு சிறுநீரகங்கள் கீழ்முதுகுப் பகுதியில் (lumbar region) பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளன. உடலில் உள்ள அத்தனை இரத் தமும் ஐந்து நிமிடத்திற்கொரு முறை சிறுநீரகங் களின் வழியாகப் பாய்கின்றது. இந்த இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்கள், ஒவ்வொரு சிறுநீரகத் திலுமுள்ள பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட நெப் ரான் (nephron) என்னும் சிறுநீரக நுண்குழல் களால், இரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுச் சிறு நீராகச் சிறுநீர் நாளங்களுக்குள் செலுத்தப்படு கின்றன. காண்க, சிறுநீரகம். சிறுநீர் நாளம் (ureter). ஒவ்வொரு சிறுநீரகத் துடனும் ஒரு சிறுநீர் நாளம் இணைந்துள்ளது. இந்த நாளம் கமார் 30 சென்டிமீட்டர் நீளம் ள்ளது. அகன்று தனுடைய மேற்பகுதி சிறுநீரகத்தினுள் பல பிரிவுகளாகப் பொருத்தப் பட்டிருக்கின்றது. அகன்ற பாகம் நாளக் கூபசும் (ureteric pelvis) என்றும், அதன் பிரிவுகள் கோப்பை மடல்கள் (calyces) எனவும் அழைக்கப்படும். ஒவ் வொரு நாளமும் முதுகுப்புறச் சுவரின் (posterior abdominal wall) உட்புறத்திலேயே கீழிறங்கிக் கூப கத்தினுள் உள்ள சிறுநீர்ப் பையின் ஒரு மூலையை வந்தடைந்து, சிறுநீர்ப் பைக்குள் நுழைகிறது. பையின் சுவரில் (wall of நாளம் சிறுநீர்ப் the bladder) சரிவாக நுழைவதால் நாளத்தி லிருந்து சிறுநீர் சிறுநீர்ப்பையினுள் வர இயலும். ஆனால் சிறுநீர்ப் பையிலிருந்து நாளத்திற்குள் திரும்பிச் செல்ல இயலாது. சிறுநீர் நாளத்தின் சுவ ரில் தசைநார்கள் (Smooth muscle fibres) நீளவாட்டி லும் சுற்று வாட்டிலும் (longitudinal & circular) அமைந்துள்ளன. இவை சுருங்கி விரிவதால் (peristal. sis) சிறுநீரானது அலைக்குப் பின் அலையாகச் சிறு நீர்ப் பைக்குள் வந்து சேருகிறது. சில சமயங்களில் சிறுநீர் நாளங்களினுள்ளே சிறுநீர்க் கற்கள் (urinary culculi) உண்டாகலாம். இக்கற்களைக் கீழே சிறுநீர்ப்பைக்குள் தள்ளுவதற் அ.க.2-56அ ஆணின் சிறுநீர், இனப்பெருக்கப் பாதை 883 காக, இந்தத் தசைநார்கள் மும்முரமாகச் சுருங்கி விரியக்கூடும் (spasmodic contraction). அப்போது, அதனால் கடுமையான வலி, தொடர்ச்சியாக இல்லா மல், விட்டுவிட்டு (ureteric colic) ஏற்படும். இவ்வலி முதுகுப்புறத்தில் ஆரம்பித்து அடிவயிற்றுப் பக்கம் வந்து, லிங்கத்தின் நுனி வரை வரும். இவ்வலியின் த்தன்மையினால் இதைக் கண்டுகொள்ளலாம். சிறுநீர்ப்பை. இது கூபகத்தின் முன் பகுதியில், கூபக முன் எலும்பு இணைப்பிற்குப் (pubic symphysis) பின்னால் பாதுகாப்பாக அமைந்துள் ளது. இது சுமார் 300முதல் 500வரை மில்லிலிட்டர் கொள்ளக்கூடியது. சிறுநீர் நாளங்கள் வழியாக வந்த சிறுநீர், சிறிது சிறிதாக இப்பையில் சேர்ந்து, ஓரளவு சேர்ந்தபின், பையின் சுவரிலுள்ள டெட்ருசார் (detrusor ) எனப்படும் தசைநார்கள் சுருங்குவதால் வெளியேற்றப்படுகின்றது. இப்பையின் மேல்பக்கப் பின் மூலைகளில் சிறுநீர் நாளங்கள் வந்து சேர்கின் றன. இப்பையின் கீழ் முனையில் சிறுநீர்த்தாரை (urethra) தொடங்குகிறது. (இம்மூன்று துளைக் ளுக்கு இடைப்பட்ட பரப்பிற்கு முக்கோணப் பரப்பு (trigone) என்று பெயர். சிறுநீர்த்தாரையின் ஆரம்பத்தில் (சிறுநீர்ப்பை யின் கீழ்முனையில்) அதைச்சுற்றிச்சுருக்குத் தசைகள் உள்ளன. இவை சிறுநீர்ப்பையின் சுருக்குத் தசைகள் அல்லது அகச் சுருக்குத்தசைகள் (sphincter of bladder or internal sphincter) என அழைக்கப்படுகின்றன. சாதாரண நிலையில் இத்தசைகள் சுருங்கியிருப்பதால் (tonic contraction) சிறுநீர் வெளியே செல்லத் தடை உண்டு. ஆனால் சிறுநீர்ப்பையின் சுவர்த் தசையான டெட்ருசார் சுருங்கும் அதே நேரத்தில் அகச் சுருக்குத் தசை தளர்வடைகிறது. அப்போது சிறுநீர் தடை யின்றித் தாராளமாக வெளியேறுகிறது. இத்தசை அனிச்சையாக (involuntary) இயங்குகின்றது. சிறு நீர்ப்பையின் பின்னால் அதையொட்டி இரண்டு விந்துப்பைகளும் (seminal vesicles), இரண்டு விந்து நாளங்களும் (vasa deferentia) உள்ளன. சிறுநீர்ப் பையின் கீழ் முனைக்குக் கீழே புராஸ்ட்டேட் எனப் படும் சுக்கிலச் சுரப்பி உள்ளது. சுக்கிலச்சுரப்பி (prostate gland). இது ஆண்களில் மட்டும் உள்ளது. மேற்குறிப்பிட்டபடி சிறுநீர்ப் பையின் கீழ்முனைக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் மேற்பக்கம் அகன்றும், கீழ்ப்பகுதி அகலம் குறைந்தும் நிறுத்தி வைக்கப்பட்ட கூம்புபோல் அமைந்திருக் கின்றது. இதன் வழியாகச் சிறுநீர்த்தாரை (முதல் 3 செ.மீ.) கீழ்நோக்கிச் சென்று, அதன் கீழ்ப்பகுதி வழியாக வெளியே வந்து, நீர்த்தாரையின் புறச் சுருக்கு தசைகள் (sphincter urethra or external sphincter) வழியாகச் செல்கிறது. சிறுநீர்ப்பாதை சு