886 ஆணொருபாகமலட்டுயிரி
886 ஆணொருபாகமலட்டுயிரி என்னும் சிறுசிறு குகைகள் போன்றமைந்த இரு உருட்டுகளாம். இவற்றின் கீழே நடுவில் அமைந் திருப்பது கார்ப்பஸ் ஸ்பாஞ்சியோசம் அல்லது கடற் பஞ்சு போன்ற உருட்டு (corpus spongiosum) ஆகும். இந்த உருட்டின் நடுவே சிறுநீர்த்தாரையின் இறுதிப் பகுதி (லிங்கப் பகுதி) செல்கிறது. இந்த உருட்டுகளுக்கு ஒரு சிறப்புத்தன்மை உண்டு. இவற்றினுள்ளே உள்ள கணக்கற்ற சிற்றிடங் களில் (cavernous spaces) இரத்தம் குறைவாக இருப் பின் இவை தொய்வாகவும், இரத்தம், குறிப்பிட்ட அளவிற்குமேல் அதிகரிப்பின் இவை விரைப்பாசுவும் ஆகின்றன. இவை தொய்வாக இருக்கும்போது லிங்கம் சாதாரணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். விரைப்பாக இருக்கும்போது லிங்கம் விரைப்படைவ துடன் அதன் நீளமும்,பருமனும் அதிகரிப்பதால் பால்புணர்ச்சிக்குத் தயாரான நிலையில் இருக்கும். இவ்வித விரைப்பு ஏற்படாமை ஆண்மையின்மை (impotence) யின் அடையாளமாகும். இவ்வுருட்டுகளைச் சுற்றி மெல்லிதான, மயிர் களற்ற தோல் உள்ளது. இத்தோலின் முன்பகுதி லிங்கத்தின் தலை மீது முன்னும் பின்னுமாக நகரக் கூடியதாகவுள்ளது. இதற்கு முன்தோல் (prepuce) எனப்பெயர். முன்தோலின் வெளித்துவாரம் (prepu- tial orifice) சிறிதாக இருப்பின் (phimosis) முன் தோல் முன்னும் பின்னும் நகர முடியாமல் இருக் கலாம். இதனால் புணர்ச்சியின்போது வலியும். சிறுநீர் கழியும்போது, சிறுநீர் தாராளமாக வெளிச் செல்லாமையும் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க முன் தோலை வெட்டியெடுத்துவிடலாம் (circumcision). முன்தோலை வெட்டியெடுத்துவிடுவதால் மற்றொரு நன்மையும் உண்டு. முன்தோலுக்கும் லிங்கத் தலைக் குமிடையே உற்பத்தியாகித் தேங்கும் ஒரு வெண்மை நிறமான பொருள் (smegma) லிங்கத்தில் புற்று நோய் வருவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. முன்தோலை வெட்டி எடுத்துவிடுவதால் இது தவிர்க் கப்படுகிறது. லிங்கமானது பால்புணர்ச்சியின் நுழைவுறுப்பு என்பதால் லிங்கத்தின் மேல் புண் உண்டாவதும் அல்லது லிங்கத்திலிருந்து நிணநீரை வடிக்கும் தொடையிடுக்கு நிணநீர் முடிச்சுகள் (inguinal lymph nodes) வலியுடன் பெரிதாவதும் பால்வினை நோய் களின் விளைவுகள் ஆகலாம். விந்துவடம் (spermatie cord). விந்து நாளம் எபிடிடிமிஸிலிருந்து மேல் நோக்கிச் செல்லும்போ தும், தொடையிடுக்கும், கால்வாயில் செல்லும் போதும், இரத்தக் குழாய்கள், நிணநீர்க் குழாய்கள், நரம்புகள் ஆகியவை அதைச் சுற்றிச் சூழ்ந்து அமைந்துள்ளன. இவையும் விந்துநாளமும் சேர்ந்து மொத்தமாக விந்துவடம் எனப் பெயரிடப் பட்டுள்ளன. விரைப்பையின் உச்சிப் பகுதியின் முன் பக்கம் ஒரு விரலும் பின் பக்கம் ஒரு விரலும் வைத்துத் தொட்டுப் பார்த்தால் இந்த வடமும் அதனுள் விந்து நாளமும் இவ்லிரு விரல்களுக்கிடை யில் இருப்பதை உணரலாம். இவற்றில் விந்துநாளம் மட்டும் ஒரு சிறிய மணிக்கயிறு போல் உணரப்படு கிறது. இந்த முறையில் விந்துநாளத்தை வெகு எளிதில் கண்டுகொள்ளலாம். கருத்தடை அறுவைச் சிகிச்சை முறையில் இந்த இடத்தில்தான் (விரைப்பையின் உச்சிப் பகுதியில்) ஒரு சிறிய அறுவை செய்து, மேற்கூறியபடி விந்து நாளத்தைக் கண்டெடுத்து, அதை வெட்டிவிட்டு, வெட்டிவிட்ட இரு முனைகளையும் தனித்தனியே நன்றாகக் கட்டிவிடுகிறார்கள் (vasectomy). ஆகவே, இந்த வெட்டப்பட்ட இடம் வரை வந்த விந்தணுக் கள் மேலே செல்ல முடியாமல் நின்றுவிடுகின்றன. இதனால் பால்புணர்ச்சியின்போது விந்துநீர் வெளி வந்தாலும் அந்நீரில் விந்து அணுக்கள் இருக்க மாட்டா. இதனால் பெண்ணிற்குக் கருவுறலும் ஏற்படாது. இது ஒரு மிகச் சிறந்த கருத்தடை முறை யாகும். இது ஏறக்குறைய ஒரு நிலையான (perma nent) கருத்தடை முறையாகும். நிலையான முறையாக இல்லாமல் தற்காலிகமாக இருக்க வேண்டுமானால் இந்த முறை "ஒவ்வாது. இதற்கு மற்றொரு முறை கையாளப்படுகிறது. புணர்ச்சியின்போது, ஆண் தனது லிங்கத்தின்மீது அத்துடன் ஒட்டினாற்போல் அமைந்திருக்கக் கூடிய ஒரு ரப்பர் உறையை (condom) அணிந்துகொள்வ தால், வெளியேறும் விந்துநீர் புணர்வாயில் சென் றடைவது தவிர்க்கப்படுகிறது. இதனால் கருவுறலும் தடுக்கப்படுகிறது. ஆணொருபாகமலட்டுயிரி என்.சு. சில விலங்குகளின் உடலமைப்பில் ஒரு பகுதியில் ஆண் பண்புகளும் மற்ற பகுதியில் பெண் பண்புகளும் காணப்படுகின்றன. இத்தகைய உடலமைப்புடைய விலங்குகளுக்கு ஆணொருபாகமலட்டுயிரி (gynandro morph) என்று பெயர். பட்டுப்பூச்சிகள் (silk worms) வண்ணத்துப்பூச்சிகள் (butterflies), பழஈக்கள் (fruit flies), வண்டுகள் (beetles) போன்ற விலங்குகளில் ஆணொருபாகத் தன்மைகளைக் (gynandromorphic features) காணலாம். ஆணொருபாக அமைப்பில் (gynandromorphism) மூன்று வகைகள் உள்ளன.