பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க ட்டிரிப்பளோசோமியாசிஸ்

கொள்ளலாம். பல கோள்களைத் தெளிவாக ஒளிப் படம் எடுத்துத் தேவையான குறிப்புகளுடன் காட் சிக்கு வைத்துள்ளனர்.

கல்லூரி, பள்ளி மாணவர்கள், அறிவியல் ஆர்வ முள்ளவர்கள் போன்ற பலரும் இங்கு நடைபெறும் ஆய்வுப் பணிகளையும் கல்விப் பணிகளையும் பயன் படுத்திக் கொள்கின்றனர். அமெரிக்காவின் பல பகுதி களிலிருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் இக்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டு இங்கு செயல்படும் ஆய்வுகளின் பயனைப் பெறுகின்றனர்.

மானிடவியல் (Anthropology), முதுகெலும்பி களின் தொல்விலங்கியல், ஊர்வனவியல் (Herpetology), பாலூட்டியியல் (Mammology), பறவையியல் (Omithology), விலங்கு நடத்தையியல் போன்ற பல துறைகளுடன் தொடர்புடைய ஆய்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

நூலோதி

1. Collier's Encyclopaedia, Vol.16, P. F.Collier, Inc. London, 1978.

2. Encyclopaedia Britannica, Micropaedia, Vol.1, Encyclopaedia Britannica, Inc., Chicago, 1982.

3. Encyclopaedia Americana Vol.C. Americana Corporation, Danbury, Connecticut, 1980.

அமெரிக்க ட்டிரிப்பனோசோமியாசிஸ்

"அமெரிக்க ட்டிரிப்பனோசோமியாசிஸ்" (american trypanosomiasis) எனப்படும் இந்நோய் தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் மட்டுமே காணப்படுவதால் "தென் அமெரிக்க ட்டிரி பனோசோமியாசிஸ்" என்றே அழைக்கப்படுகிறது.

இந்நோய் ஏற்படக் காரணமானவை, "ட்டிரிப் பனோசோமா குரூசீ" (trypanosoma cruzi) எனப்படும் ஒட்டுண்ணிகளே (parasites). சார்லஸ் சாகாஸ் (Charles Chagos-1909), பிரேஸில் நாட்டில் இந்நோய் யால் பாதிக்கப்பட்டு இருந்த குழந்தைகளின் இரத்தத் திலிருந்தும், ரெடுவிட் உண்ணிகளின் (reduvid bugs)

குடல் பகுதிகளிலிருந்தும், இந்த ஒட்டுண்ணியை 1909ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார். இவரே இவ்வொட்டுண்ணிகளை ட்டிரிப்பனோசோமா குரூசி என்று அழைத்தவர். அதனால் இவரின் பெயரிடப்பட்டு இந்நோய் "சாகாஸ் நோய்" (Chagas' disease) என்றும் அழைக்கப்படுகிறது. ட்டிரிப்பனோ சோமா குரூசி தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், வெனிசுலா (Brazil, Venezuela) முதலிய பகுதிகளில், எறும்பு தின்னி இனத்தைச் சேர்ந்த ஆர்மடில்லோக் களின் (armadillos) ஒட்டுண்ணியாகக் கருதப்படு கிறது. இப்பகுதிகளில் பூனைகளிலும், நாய்களிலும் கூட இவை காணப்படுவது உண்டு. ட்டிரிப்பனோ சோமா குரூசி, மனிதன் அல்லது முதுகெலும்பு உள்ள விலங்குகளிலும் அல்லது உண்ணிகளிலும் தம் வாழ்க் கைச் சுழலை நடத்துகின்றன. (கிரேக்க மொழியில் ட்டிரிபனான் என்றால் துளையிடுவது என்றும், சோமா என்றால் உடல் என்றும் பொருள்.)

உள்ளன. வடிவமைப்பு (Morphology). ட்டிரிப்பனோசோமா குரூசி, மனிதன் அல்லது பிற விலங்குகளின் இரத்தத் திலும் திசுக்களிலும் வாழ்வதால் "இரத்தத்தில் வாழும் கசைஇழை ஒட்டுண்ணிகள்" (haemo flagella -tes) எனும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ட்டிரிப்ப னோசோமா குரூசி தசை, நரம்புத் திசுக்கள் மட்டு மின்றி உட்பரப்புப் படைத்திசுக்களிலும் (reticuloendothelial cells) ஒட்டுண்ணிகளாக ட்டிரிப்பனோசோமா குரூசி இரண்டு வேறுபட்ட வடிவமைப்புக்களில் மனிதரிடம் காணப்படுகிறது. இவ் வடிவமைப்புகள் ட்டிரிப்போசோமா ஸ்டிகோட் வடிவமைப்பு (trypamastigote forms) என்றும், அமாஸ்டிகோட் வடிவமைப்பு (amastigote forms) என்றும் அழைக்கப்படுகின்றன. ட்டிரிப்போசோமா ஸ்ட்டிகோட் வடிவமைப்பு புற இரத்த ஓட்டத்திலும் (peripheral blood), ஏமாஸ்டிகோப் வடிவமைப்பு, உட்பரப்புப் படைத் திசுக்களிலும், வரித்தசைகளிலும் (striated muscles), நரம்புத் திசுக்களிலும் காணப் படுகின்றன. இவ்விரு வடிவமைப்புகளுக்கும் இடைப் பட்ட வடிவமைப்பான "லெப்ட்டோமோனாடு' (leptomonad), 'கிரித்திடியல்” (crithidial) போன்ற வையும் திசுக்களில் காணப்படுகின்றன.

ட்டிரிபனோசோமா குரூசி “C'" அல்லது "U" வடிவில் சுமார் 20 மி.மீ. (mm) முதல் 22 மி.மீ. (mm) நீளமாக உள்ளது. இந்த ஒட்டுண்ணியின் உடலின் ஒரு முனை கூர்மையாகவும், மறுமுனை கூர்மையற்று அகன்றும் உள்ளன. புற இரத்த ஓட்டத்தில் ட்டி ரிப்பனோமசோமா குரூசி நீண்ட நெடிய வடிவிலோ பருமனாக குட்டை வடிவிலோ இருககும். புற இரத்த ஓட்டத்தில் இவை இனப்பெருக்கம் செய்வ தில்லை. இவற்றின் அகன்ற கீழ் முனையிலிருக்கும் கைனிட்டோ பிளாஸ்டிலிருந்து (kinctoplast), வலை

62