பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/922

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 ஆதிவாசிகளின்‌ தாவரவியல்‌

892 ஆதிவாசிகளின் தாவரவியல் இதன் வேரை அரைத்து நீரில் கலந்து கொடுக்கின் றார்கள்; மேலும் பேதிமருந்தாகவும் பயன்படுகின் றது. இத்தாவரத்தின் சாறு கண்ணில் ஏற்படும் பட லத்தினை அகற்ற உதவும். விதைகளிலிருந்து எடுக் கப்படும் எண்ணெய் புண்கள், தோலிலுண்டாகும். படைகள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. வண்டுக்கடி, எலிக்கடிகளால் ஏற்படும் நச்சுத்தன்மை யினை நீக்க, இத்தாவரத்தின் சாறு பயன்படுகிறது. ஈரல் நோய்க்கு இத்தாவரம் நல்ல பலனைத் தரு கிறது. நூலோதி நா.வெ. 1.Gamble, J.S., Fi. Pres, Madras Vol. II, Adlard & Son, Ltd., Lond., 1925. 2. Lt. Col Kirtikar, K. R. & Major Basu, B. D. Indian Medicinal Plants, Vol.III, M/S Bisher Singh Mahendra Pal Singh, New Connaught Place, Dehra Dun, 1975. 3. The Wealth of India, Vol V. CSIR Publ., New Delhi, 1959. ஆதிவாசிகளின் தாவரவியல் வெவ்வேறு சிறுபான்மை இனப்பிரிவுகளைச் சார்ந்த ஆதிவாசிக் குடும்பங்கள் ஏறத்தாழ 550 இந் தியாவிலிருக்கின்றன. இவர்கள் பொதுவாக இயற் கையுடன் ஒன்றிக் காடுகளிலும் இவற்றின் அருகா மையிலுள்ள புறப்பகுதிகளிலும் வசிக்கின்றார்கள். இவர்கள் வேட்டையாடுதலையும், உணவு, மருந்துப் பொருள்கள் சேகரிப்பதையும் அன்றாடத் தொழிலா கக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவர்க ளுடைய பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், முறைகள், மருத்துவ முறைகள் ஆகியவை இவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகளுக்குத் தக்க வாறு அமைந்திருக்கின்றன. இவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பலவகைகளில் தேவைப் படுகின்ற குறிப்பிட்ட சில காட்டுத் தாவரங்களை மட்டும் அநுபவத்தின் வாயிலாகத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்தி ருக்கின்றார்கள். இவற்றைக் குறித்து நாம் அறிந்து கொள்வதும், பயன்படுத்திக் கொள்வதும் தான் ஆதிவாசிகளின் தாவரவியலின் அடிப்படை நோக்க மாகும். இந்த அடிப்படையில் ஆராயும்பொழுது இவை நாகரீக மக்களின் பண்பாட்டிற்கும், பழக்க வழக் கங்களுக்கும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. மேலும் இந்த வகையில் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் வியப்பூட்டுமளவிற்கு இருப்பதையும் காணமுடிகின்றது. அண்மைக் காலங் களில் காடுகள் பல விரைவாக அழிக்கப்பட்டு வரு கின்ற அவல நிலையினாலும், காடுகளில் கிடைக் கின்ற மூலப்பொருள் தாவரங்கள்ப மக்கள் தொகை பெருக்கத்தினால் அளவிற்கு மீறிய முறையில் சூறை யாடப்படுவதாலும் ஆதிவாசிகளின் வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இது காரணமாக இவர்களால் பாதுகாக்கப்பட்டு பயிராக்கப்பட்டு வந்த காட்டுமூலப் பொருள் தாவரங்கள் நாளடை வில் அழிந்துவிடக்கூடிய சூழ்நிலை நிலவி வருகின் றது. இந்நிலையைத் தவிர்ப்பதற்கு மத்திய அரசின் ஆதரவில் இயங்கிவரும் சூழலியல்துறை (department of environment) அனைத்து இந்திய ஆதிவாசிகளின் உயிரியல் பற்றிய ஒருங்கிணைந்த ஆய்வுத்திட்டம் (The All India coordinated research project on eth- nobiology - AICRPE) ஒன்றை 1982 ஆம் ஆண்டில் நிறுவியிருக்கின்றது. இந்த ஆய்வுத்திட்டத்தின் 1983 ஆம் ஆண்டு அறிக்கையின்படி காட்டுத் தாவ ரங்களில் 1,400க்கு மேலான சிற்றினங்களும், பல விலங்கினங்களும் ஆதிவாசிகள் உணவு, தீவனம், நார், மருந்து, உடை, இருப்பிடம் போன்றவைக ளுக்காகப் பயன்படுத்துகின்றார்கள் என்று தெரி கின்றது. இதுபோன்று 1984 ஆம் ஆண்டின் அறிக்கை 1,900க்கு மேலான காட்டுத் தாவரங்களைப் பயன்படுத்துகின்றார்கள் என்று கூறுகின்றது. இதன் படி உண்பதற்குத் தகுதிவாய்ந்த காட்டுச் செடிகள் 225 என்றும், இவற்றில் 150 சிற்றினங்கள் புதிதா னவை என்றும் தெரிகின்றது. இவற்றில் முக்கிய மான சிற்றினங்களாவன: அல்லியம் விக்டோரியாலிஸ் (allium victorialis), a பர்சா பேஸ்டோரிஸ் (capsella bursa pastoris), டெர்மினேலியா மானியை, (turmminalia manii). மருத்துவத்தில் 431 தாவரச் சிற் றினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 180 நன்கு அறிமுகமானவை. முக்கியமான மருந்துச் செடிகளாவன இதயநோய்க்கு ஆய்மா (careya arborea); குடற்புண், புற்றுநோய்க்கு இலவம் (salmalia malabarica); மலட்டுத் தன்மையைப் போக்க நாரவிலியா பிரெய்னியானா (naravelia prainiana); நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதிக்கு முர்ரையா பேனிகுலாத்தா (murraya paniculata) முதலானவை. இதுபோன்று வேறு வகைகளில் பலனளிக்கக்கூடிய எண்ணற்ற புதுவகைச் செடிகளும் இவர்கள் மூலம் அறிமுகமாகியிருக்கின்றன. 16.இராம்.