பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/923

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதொண்டை 893

நூலோதி 1. Agarwal, V.S., Saha, S. Unreported Medicinal Plants of India, J. Andhra Pradesh Acad. Sci., Vol., 2, 1968. 2.Jain, S.K., Ethnobotany, its Scope and Study, Ind. Mus. Bull. Vol. 2,1967. 3.Jain, S.K., Glimpses_of Indian Etbonobotany, Oxford and IBH Publ. Co., New Delhi, 1981. ஆதொண்டை இது கப்பாரேசி அல்லது கப்பாரிடேசி (capparaceae or capparidaceae) எனும் அல்ல இணையா (poly- petalous) இருவிதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. தாவரவியலில் இதற்கு கெப்பாரிஸ் ஸெய்லானிக்கா (copparis zeylanica Linn. = C. horrida Linn.) 67 63 m பெயர். ஆதொண்டை தமிழக மாவட்டங்களில் ஆதொண்டை 893 பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளிலும், மல பார், தக்காணம், கருநாடகம், பர்மா ஆகிய பகுதி களிலும், ஜாவா, பிலிப்பைன்ஸ் தீவுகளிலும், ஆப் பிரிக்கக் காடுகளிலும், இலங்கையின் வறண்ட பகுதிகளிலும் பரவியிருக்கின்றது. . சிறப்புப் பண்புகள். இது முட்களையுடைய(armed) படரும் பதர்க்கொடி (climbing shrub). இலைகள் தனித்தவை இதன் மேல்புறம் பளபளப்பாகவும், கீழ்ப்புறம் வெண்மையான பல தூவிகளைக் கொண்டும் இருக்கும். இலையடிச்சிதல்கள் உருமாற்ற மடைந்து முட்களாகக் காணப்படுகின்றன. புல்லி இதழ்கள் (sepals) 4 ; அல்லி இதழ்கள் (petals) 4: மகரந்தத் தாள்கள் எண்ணற்றவை. குற்பை நீண்ட சூலகக் காம்பின் (gynophore) நுனியில் அமைந் துள்ளது; மேல்மட்டத்திலுள்ளது. சூல்கள் எண்ணற் றவை. அவை சுவரொட்டிய சூலமைவில் (parietal placentation) அமைந்திருக்கும். கனிகள் சதைப் பற்றுள்ளவை; ஏராளமான விதைகளைப் பெற்றிருக் கின்றன. மலர்கள் வெண்மையாக இருந்து கடை சியில் பழுப்புநிறத்தைப் பெறுகின்றன. 15 13 14 12 14 1 10 8 11 6 2 ஆதொண்டை (Capparis zeylanica Linn.) கனியின் தோற்றங்கள் 2. I. மகரந்தத்தாளின் இரு 3. கனி 4. குறுக்குவெட்டுத் தோற்றம் விதை 5.பூ 6. சூலகம் 7. சூலகக்காம்பு 8. மகரந்தத்தாள் 9. புதர்க்கொடியின் ஒரு பகுதி 10. முட்களாக உருமாறிய இலையடிச்சிதல் 11. இலைநுனிமுள் I2. பூ மொட்டுகள் 13. சூற்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம் 14. சூல் 15. சூற்பையின் நீள்வெட்டுத் தோற்றம்.