894 ஆந்த்தோசயனின்கள்
894 ஆந்த்தோசயனின்கள் பொருளாதாரச் சிறப்பு. கசப்புத் தன்மை கொண்ட ஆதொண்டையின் வேர்ப் பட்டை (bark) உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்; கபத்தை அகற்றும் தன்மை கொண்டது; தணிப்பானாகவும் (sedative), பித்த பேதி மருந்தாகவும் (cholagogue), வாந்திபேதி (cholera) மருந்தாகவும் பசியைத் தூண்டக் கூடிய தாகவும் (stomachic) பயன்படுகின்றது. கனிகள் ஊறுகாய் செய்வதற்குப் பயன்படுகின்றன. இனிப்புச் சுவை கொண்ட இதன் பழங்களுக்குப் பித்தம். வாதம், கபம் ஆகியவற்றினால் உண்டாகும் குறை களைப் போக்கும் திறன் உண்டு. வட இந்தியாவின் பல் பகுதிகளில் ஆதொண்டையின் இலையை அரைத்துப் பற்றுப் போட்டுக் கட்டி, வீக்கம், மூல வியாதி (piles) ஆகியவை குணப்படுத்தப்படு கின்றன. நூலோதி நா.சி. 1. Gamble, J. S., FI. Pres. Madras., Vol. I., Adlard & Son, Ltd., London, 1915. 2. Hooker, J.D., Fl., Br. Ind., Vol. I, 1872. Vol. II, CSIR. Publ. 3. The Wealth of India, New Delhi, 1950. ஆந்த்தோசயனின்கள் தாவரங்களில் காணப்படும் பல்வேறு நிறங்களுக் குக் காரணமாக அமைந்திருக்கும் அடிப்படைக் கரிமப்பொருள் ஆந்த்தோசயனின் (anthocyanin) என்பதாகும். ஆந்த்தோசயனின் என்ற கிரேக்கச் சொல்லுக்கு நீலப் பூ என்று பொருள் (சயனின்= நீலம்; ஆந்த்தோஸ்=பூ), முதன்முதலாக நீல நிறம் கொண்ட கார்ன்ஃப்ளவர் என்ற களைச்செடிப் பூக்களிலிருந்து இந்த வகைச் சேர்மம் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்டதனால் காரணப் பெயராக இது அமைந்தது. தாவரங்களின் இளந்தளிர்களிலும் அரும்புகளிலும் காணப்படும் சிவப்பு நிறத்திற்கும், இலையுதிர் காலத்திய பூக்களின் நிறத்திற்கும் ஆந்த் தோசயனின் வகை நிறமிகளே காரணம். குளிர் காலத்தில் பச்சை நிறப்பச்சையம் என்ற குளோரோஃ பில்லின் (chlorophyll) அளவு தாவரங்களில் குறையத் தொடங்குகிறது. அதன் தொடர்விளைவாகச் சிவப்பு நிறம் வெளிப்படுகின்றது. குளிர்ச்சியும் நல்ல சூரிய வெளிச்சமும் ஆந்த்தோசயனின் நிறமிகள் உண்டாவ தற்கு உதவுகின்றன. தாவரங்களின் வகைகளுக்கு ஏற்பச் சில தாவரங்களின் இலைகளும் பூக்களும் முதிரத் தொடங்கியதும் ஆந்த்தோசயனினை இழக்கத் தொடங்குகின்றன, வேறு சில தாவரங்கள் அத்த கைய முதிர்ச்சியின்போது நிறமியின் செறிவைப் பெறுகின்றன. ஆந்த்தோசயனின் இலைகளில் அதிக மாசு இருக்கும் பருவங்களில் சர்க்கரைச் சத்தும் இலைகளில் மிகுந்து காணப்படுகிறது. ஆந்ததோச யனின் என்பது சர்க்கரைப் பகுதி இணைந்த அரோ மாட்டிக் கரிமச் சேர்மம் என்பதுதான் இதற்குக் காரணம்.இலைகள், பூக்கள்,கனிகள் என்ற தாவரத் தின் பல பகுதிகளில் ஆந்த்தோசயனின் சேர்மங்கள் அமைந்திருக்கும். பீட்ருட் கிழங்கு சிவப்பாக இருப்ப தற்குக் காரணம் வேர்ப் பகுதியான அதில் ஆந் தோசயனின் மிகுந்திருப்பதுதான். ஆந்த்தோசயனினை நீராற்பகுத்தலுக்கு (hydro- lysis) உட்படுத்தினால் அது ஆந்த்தோசயனிடின் (anthocynidin-சர்ககரைப் பகுதி நீங்கிய நிறமிகள்) ஆகவும், சர்க்கரைப் பொருளாகவும் பிரிகிறது. எடுத்துக்காட்டாக, ரோஜா மலரில் சயனின் (cyanin எனப்படும் ஆந்த்தோசயனின் இருக்கிறது. அது நீராற் பகுக்கும்போது சயனிடின் (cyanidin) சேர்மமும், குளுகோஸ் சர்க்கரையும் கிடைக்கின்றன. அளவீட்டு முறையில், ஒரு மூலக்கூறு சயனின் நீராற்பகுத்தல் வினையின் விளைபொருள்களாக ஒரு மூலக்கூறு சயனிடினும் இரண்டு மூலக்கூறு குளுகோஸ் சர்க் கரையும் கிடைக்கினறன. ஆந்த்தோசயனின் பற்றிய ஆராய்ச்சிகளை நடத் தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் 1920இல் ஆய்வு நடத்திய சர் ராபர்ட் ராபின்சனும் (Sir Robert Robinson) அவரது குழுவினரும் ஆவர். பெலார் கோனியம், (plargonium) ரோஜா, டெல்ஃபினியம் (delphinium) ஆகிய மூன்று வகைகளாகப் பிரிக் கப் பட்டிருக்கின்றது. சர்க்கரைப் பகுதி நீங்க லாக அமைந்த ஆந்த்தோசயனிடின்களைக் கொண்டு இவற்றிற்கு உரிய பெயர்கள் இடப்பட்டிருக்கின் றன. அவை பெலார்கோனிடின் (plargonidin) சயனி டின், டெல்ஃபீனிடின் (delphinidin) என்பன. சர்க்கரைப் பொருளுடன் இணையும் மறுபகுதியான ஆந்த்தோசயண்டினில் ஹைட்ராக்சில் தொகுதிகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு பிணைக்கப் பட்ட ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கை, பிணைக்கப்பட்ட இடம், மீத்தைலேற்றம் (methy- lation) அடைவதற்கான ஹைட்ராக்சிலின் திறம் ஆகிய வற்றைப் பொறுத்து நீலம், ஊதா, சிவப்பு என்று தாவர நிறங்கள் அமைகின்றன. சாதாரணப் பூக் களிலும் பழங்களிலும் உள்ள ஆந்த்தோசயனின் களின் வேதி அமைப்பு பக்கம் 895இல் கொடுக்கப்பட் டுள்ளது. 1930இல் ராபின்சன் குழுவினர் பூக்களின் நிறங் களுக்குக் காரணமான நிறமிகளைப் பிரித்தெடுத்து,