பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/935

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆந்த்ரப்மாய்டியா 905

பரிணாமம். முதல் குரங்குகளும், முதல் மனிதக் குரங்குகளும் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் ஆலிகோசீன் (lower oligocene) யுகத் தில் தோன்றினாலும், இவற்றின் மூதாதையர் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டார்சியர்களாகத்தான் (tarsiers) இருக்க வேண்டும். மனிதன் ஏறக்குறைய ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிளீஸ்டோசின் காலம் (pleistocene period) வரை தோன்றவில்லை. ஆனால் மனிதனையொத்த விலங்குகள் சுமார் 1,750,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலும் தங்கனிக்காவிலும் (Tankanyika) வாழ்ந்திருந்ததற்கான புதைபடிவங்கள் கண்டுபிடிக் கப் பட்டுள்ளன. எனவே மனித இனக் குடும்பமான ஹோமினிடே (hominidae) 25 மில்லியன் ஆண்டு களுக்கு முற்பட்ட மியோசின் காலத்தில் (miocene period) தோன்றி இருக்க வேண்டும். சிறப்புப் பண்புகள். சுறுசுறுப்பான வாழ்க்கையை மேற்கொண்டுள்ள ஆந்த்ரப்பாய்டுகளுள் பெரும் பாலானவை மரங்களின் மீது வாழ்கின்றன. ஏறக் குறைய எல்லா ஆந்த்ரப்பாய்டுகளும் நேராக அமர் வதற்கான உடற்கட்டமைப்புடன் பொருள்களைப் பற்றக்கூடிய கைவிரல் அமைப்பையும் பெற்றிருந்தன. விரிவான கூட்டுவாழ்க்கையை மேற்கொண்டுள்ள இவற்றிற்குக் குறுகிய முகவாயும், முன்னோக்கிய கண்களும், குவிந்த செவிமடல்களும் உள்ளன. இவை நுகர் உணர்வை (olfactory sense) விடப் பார்வை யினையை (sight) அதிகம் சார்ந்து வாழ்கின்றன. இவற்றின் பெருமூளை (cerebrum) நன்கு வளர்ச்சி யடைந்திருப்பதால் இவை அறிவாற்றலுடனும் திறமையுடனும் செயல்படக்கூடியலை; முழுமையாக நிலத்தில் ஊன்றி நான்கு கால்களால் நடக்கும் இயல்புடையவை. இவற்றின் முன்னங்கால் கள் பின்னங்கால்களைவிட நீளமானவை. பாதத்தை முகவாய் குறுகியதன் காரணமாகப் பல்வரிசை யும் குறுக்கப்பட்டிருக்கிறது. பழமையான ஆந்த்ரப பாய்டுகளில் மூன்று முன்கடைவாய்ப் பற்களும் (pre- molars), பின்தோன்றியவற்றில் இரண்டு முன்கடை வாய்ப்பற்களும் காணப்படும். மனிதனில் மட்டும் கடைசியாக நான்கு அறிவுப் பற்கள் (wisdom teeth } தோன்றுவதால் மொத்தம் 32 பற்கள் காணப்படு கின்றன. மார்புப் பகுதியில் பால்காம்புகள் (nipples) காணப்படுகின்றன. கருப்பையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழும் முறையான மாற்றங்களின் போது ஒவ்வொரு முறையும் ஒரு சினையணு (ovum) வெளியேற்றப்படும். பெரும்பாலானவை ஓர் ஈற்றில் ஒரு குட்டியை மட்டும் ஈன்றெடுத்து அதை நெடு நாள் வரை பேணிக்காக்கின்றன. வகைப்பாடு. ஆந்த்ரப்பாய்டியா உள்வரிசையில் மொத்தம் ஐந்து குடும்பங்கள் அடங்கியுள்ளன. ஆந்த்ரப்பாய்டியா 905 அவை (1) காலித்ரிசிடே (callithricidae) (2) செபிடே (cebidae), (3) GerGanGL (cercopithecidae), (4) போங்கிடே (அ) சிமிடே (pongidae or simidae), (5) ஹோமினிடே (hominidae) ஆகியவை. இவற்றில் முதலிரண்டு குடும்ப விலங்குகளில் மூக்கு தட்டையாகவும், நாசி இடைத்தடுப்பு அகல மாகவும், நாசித் துளைகள் பக்கவாட்டில் வெளி நோக்கித திறந்தும் இருக்கும். ஏனைய மூன்று குடும்பங்களிலும் நாசித்துளைகள் நெருங்கியும் கீழ்நோக்கியும் காணப்படும். இக் குடும்பங்களைச் சேர்ந்த விலங்குகளின் பற்களின் எண்ணிக்கை கீழே தரப்பட்டுள்ளது. பற்கள் குடும்பம் 1 குடும்பம் 2 குடும்பங் கள் 3,4,5 வெட்டும் பற்கள் (incisors) 8 8 கோரைப்பற்கள் (canines) முன்கடைவாய்ப்பற்கள் 12 (premolars) கடைவாய்ப் பற்கள் (molars) மொத்தம் 80 4 12 8 12 12 31 36 32 குடும்பத்தில் காலித்ரிசிடே குடும்பம். இக் மார்மோசெட்டுகளும் (marmosets), டாமரின்களும் (tamarins) அடங்கும். இக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு சிறப்பினங்களும் தென் அமெரிக்காவின் பிரேசில்,, பொலிவியா, மேல் அமேசான் பகுதி, வட பெரு, பனாமா ஆகிய நாடுகளின் வெப்பக்காடு களில் (tropical forests) காணப்படுகின்றன. பிரை மேட்டுகளிலேயே மிகச்சிறியனவாகிய இவை 70 முதல் 1,000 கிராம் வரை எடையுள்ளவை. வால் நுனி பற்றுந்தன்மையற்றும், முன்னங்கால்கள் பின் னங்கால்களைவிடச் சிறியவையாகவும் இருக்கும். கைப் பெருவிரல் ஏனைய விரல்களை நுனியில் சந் தீக்காது (not opposable). பெண் விலங்கில் இரண்டு பால்காம்புகள் உள்ளன. இவை பகல்நேர விலங்கு களாக அதிகநேரம் மரங்களில் வாழ்ந்து இரவில் மரப்பொந்துகளில் உறங்குகின்றன.பழங்கள், பூச்சி கள், சிறிய பல்லிகள், சிறிய பறவைகள், அவற்றின் முட்டைகள் இவற்றின் உணவாகும். இவற்றில் கருப் படாச் சினை நீக்கச் சுழற்சி (menstruai cycle) நடை பெறுவதில்லை. கருவளர் காலம் (gestation period } 130 முதல் 150 நாட்களாகும். இவை ஒன்று முதல்