பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/938

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

908 ஆந்த்தரப்பாய்டியா

908 ஆந்த்தரப்பாய்டியா பேரினம் சைனோமெக்காக்கா (Cynomacaca). இதில் சைனோமெக்காக்காமாஸ் (C yromacaca maurus) என்னும் ஒரு சிறப்பினம் மட்டுமே காணப்படுகிறது. பேரினம் சைனோபித்தகஸ் (Cynopithecus), சைனோ பித்தகஸ் நைகர் (Cynopithecus niger) என்ற ஒரே சிறப்பினம் உடையது. சர்க்கோசிபஸ் (cercocebus ) பேரினக் குரங்குகள் வெண் இமைக் குரங்குகள் (white eye-lid monkeys or mangabeys) எனப்படு கின்றன. இந்தப் பேரினத்தில் நான்கு சிறப்பினங்கள் உள்ளன.எ.கா, சர்க்கோசிபஸ் அல்பிழெனா (Cercoce bus albigena); பேரினம் கீரோபித்தசுஸைச் (Chaeropi- thecus) சேர்ந்தவை பாபூன்கள் என அழைக்கப்படு கின்றன. இந்தப் பேரினம் 4 சிறப்பினங்கள் கொண் டது. நீளமான வால், துருத்திய முகவாய்ப்பகுதி (muzzle), ஆழமான குரைத்தல் ஒலி ஆகியவை இவற் றின் சிறப்புத்தன்மைகள். எ. கா. கீரோபித்தகஸ் அர் சினஸ் (Chaeropithecus ursinus). கோமோபித்தகஸ் (comopithecus) பேரினத்தைச் சேர்ந்தவை, அரேபிய பாபூன்கள் (Arabian baboons). அடர்த்தியான பிடரி மயிர் இவற்றின் சிறப்புத்தன்மை. இவை பழங்கால அரேபியர்களால் புனிதமாகக் கருதப்பட்டன. இதில் கோமோபித்தகஸ் ஹமட்ரியாஸ் (Comopithecus hamadryas) என்னும் ஒரே சிறப்பினம் வாழ்கிறது. மாண்டிரில்லஸ் (Mundrillus) பேரினத்தில் மாண்டி ரில்லஸ் ஸ்ஃபிங்ஸ் (Mandrillus sphinx the mandrill), மாண்டிரில்லஸ் லியுகோசெஃபாலஸ் (Mandrillus leucocephalus - the Drill) ஆகிய 2 சிறப்பினங்கள் உள்ளன. பேரினம் தீரோபித்தகஸில் (Theropithecus), தீரோபித்தகஸ் ஜெலாடா (Theropithecus gelada) படம் 2. நீலகிரிக் குரங்கு