பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/942

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

912 ஆந்த்தரனிலிக்‌ அமிலம்‌

912 ஆந்த்தரனிலிக் அமிலம் களைக் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் படுகிறது. காகாசிய (caucasoid) இனம், மேற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும்; மங்கோலிய (mongoloid) இனம், கிழக்கு ஆசியாவிலும் நீக்ரோ (negroid) இனம் ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியா (australoid) இனம் ஆஸ்திரேலியாவிலும் டாஸ் மேனியாவிலும் காணப்படுகின்றது. இவற்றில் மங் கோலிய இனம் அமெரிக்கக் கண்டத்திற்குக் குடி பெயர்ந்தது. குடிப்பெயர்ச்சி காரணமாக இவ்வினங் களுக்கிடையே இனக்கலப்பும் ஏற்பட்டுள்ளது. நூலோதி ந.சே.அ. 1. கெளரம்மாள், ஆர்.பாலூட்டிகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. 2. Carrington, Richard, The Mammals-Life Nature Library, Time Incorporated, New York, 1963. 3. Young, J. Z., The Life of Mammals, Oxford University Press, Oxford, 1957. ஆந்த்தரனிலிக் அமிலம் இது நிறமில்லா, இனிப்புச் சுவையுடைய படிகம். இதன் உருகுநிலை 145°C. இது நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடையும், சோடியம் ஹைப்போகுளோ CO₂H NH, ரைட்டையும் கொண்டு தாலிமைடை ஆச்சிஜனேற் றம் செய்வதால் பெறப்படுகிறது. ஆந்த்தரனிலிக் அமிலம் anthranilic acid), இருஃபீனிக் அமிலம் (diphenic acid) தயாரிப்பிலும், தயோஇண்டிகோ (thioindigo) போன்ற சாயத் தயாரிப்பிலும் பெரு மளவு பயன்படுகிறது. இதன் எஸ்ட்டர், மீத்தைல் ஆந்த்தரனிலேட்டு (methyl anthranilate) தான் திராட் சைப் பழத்தின் மணத்திற்குக் காரணமாகும். தொழிலகத்தில் தயாரிக்கப்படும் இந்த எஸ்ட்டர் செயற்கைத் திராட்சை மணமூக்கியாகவும், சூரிய ஒளியால் ஏற்படும் நிறம் மாறுதலைத் (sun burns) தடுக்கும் மருந்துகளில் சிறந்த புறஊதா கதிர்வீச்சுத் தடையாகவும் உபயோகப்படுகிறது. பல நோய் நிலை களில் ஆந்த்தரனிலிக் அமிலம் இரத்தத்திலும். சிறு நீரிலும், காணப்படுகிறது. மேலும் ஆரஞ்சுப் பூவி லிருந்து தயாரிக்கப்படும் ஆவியாகும் தைலத்தின் essential oil) முக்கியப் பொருளாகவும் உள்ளது. நூலோதி 1. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. 2. Finar I. L., Organic Chemistry, Vol. 1, Sixth Edition, ELBS, London, 1975. ஆந்த்ராக்ஸ் பிளவை, மண்ணீரல்சுரம் ஆகிய பெயர்களால் குறிப் பிடப்படும் ஆந்த்ராக்ஸ் (anthrax) நோயானது ஃபாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனப்படும் ஒரு பாக்டீரியா வினால் உண்டாகிறது. இந்நோய் பற்றிய பல குறிப்புகள் இலியட், ஹிப்போகிரேட்டசின் மூலச் சொல் போன்றவற்றிலும், இந்நோய் பரவும் முறை கள் விவிலிய நூலிலும் காணப்படுகின்றன. எனவே, இந்நோய் பற்றிய உண்மைகளைப் பழங்காலத் திலேயே அறிந்துள்ளனர் என்பது தெளிவு. அது மட்டுமன்றி, நுண்ணுயிரியல் துறையின் பல பிரிவு களில் இன்றளவும் உள்ள வளர்ச்சிக்கு இந்நோய் பற்றிய பல ஆய்வுகள் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கின்றன. இந்நோயைத் தோற்றுவிக்கும் நுண்ணுயிரும், எளிதில் அழித்துவிட முடியாத தன்மை கொண்ட இவற்றின் வித்து வடிவங்களும் பரவியுள்ள மேய்ச்சல் நிலங்களில் மேயும் விலங்குகள், அல்லது இந்நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு களின் இறைச்சியை உண்ணும் விலங்குகள் போன்றவையே பெரிதும் இந்நோயால் பாதிப்புறு கின்றது. ஆனாலும், இறைச்சியுண்ணும் விலங்கு களைவிடப் புல் பூண்டுகளை உண்ணும் விலங்குகளே பெரிதும் இந்நோய்வாய்ப்படுகின்றன. இத்தகைய பாதிப்புப் பெரும்பாலும் வறண்ட காலங்களிலேயே தோன்றுகிறது. ஏனெனில், மழையின்மையால் காய்ந்த முட்செடிகளை மேய நேரிடும் விலங்கு களின் தாடையில் ஏற்படும் காயங்களின் வழியே இந்நுண்ணுயிரின் வித்து வடிவங்கள் உடலுக் குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்த்து, நோயுற்ற விலங்குகளின் மூலம் பெறப் பட்ட தோல், உரோமம், தூரிகை செய்வதற்காகத் துண்டிக்கப்பட்ட உரோமம், எலும்பு ஆகியவற்றில் இந்நுண்ணுயிரின் வித்து வடிவம் காணப்படும். ஆகவே, கால்நடைகளுடன் நெருக்கமுள்ள விவசாயி, ஆட்டிடையர், விலங்கு மருத்துவர் மட்டுமின்றி நோயுற்ற விலங்குகளிலிருந்து பெறப்பட்ட தோல், உரோமம் ஆகியவற்றைக் கையாளும் வணிகர், தோல் பதனிடுவோர், கம்பளி நெய்வோர், இறைச் சியைக் கையாளுவோர் போன்ற அனைவரும் இந்