918 ஆந்தை
918 ஆந்தை 844 நீர்ப்பரப்பிலிருந்தே கால் விரல்களால் மீனை எளிதில் லாவகமாகப் பிடிக்கும். ஆழமற்ற நீரில் தத்தித் தத்தி நடந்து குளிக்கும் விருப்பமுடையது. முக்கிய உணவு மீன், தவளை, நண்டு, இது பூம்ம் பூம்ம் அல்லது பூம்ம் ஓ பூம்ம் என விட்டுவிட்டு கத்தும். இவ்வொலி மறைவிடத்திலிருந்து தோன்றும் எதி ரொலி போன்றிருக்கும். இதன் ஒலியைக் கொண்டு இதனைக் காண்பது சற்றுக் கடினம். இதன் இனப்பெருக்கக் காலம் பொதுவாக நலம் பர் முதல் மார்ச் வரையாகும். ஆனால் தென்னிந்தி அமைகிறது. யாவில் டிசம்பர் முதல் மார்ச் வரை அத்தி, அரச மரங்களின் கிளைகளிடையே கூடுகட்டும். பாறை இடுக்குகளிலும் முட்டையிடும். நீரருகில் இனப் பெருக்கம் செய்யும். ஒரு தடலையில் 1 அல்லது வழப்பான வெண்ணிற முட்டைகளிடும். ஏறக்குறைய 5 வாரங்களுக்கு முட்டைகளை அடைகாக்கும். வழ புள்ளி ஆந்தை (southern spotted owlet). இதன் அறிவியல் பெயர் எத்தீன் பிராமா பிராமா (athene brama brama) என்பது. இது மைனா அளவுள்ள சிறு பறவை, சாம்பல் தோய்ந்த பழுப்பு வண்ண உடலில் ஆங்காங்கு வெண்ணிறப் புள்ளிகளுடையது. பெரிய தலையில் முன்னோக்கிய இரண்டு பெரிய மஞ்சள் நிறக் கண்கள் உள்ளன. கிராமங்களுக்கருகில் பழைய கட்டிடங்களிலும் மரப்பொந்துகளிலும் வாழும் இவ்லினம் தென்னிந்தியாவில் எங்கும் காணப்படு கிறது. இரவில் மட்டுமே வெளியில் வரும் இயல் புடைய இவை இணைகளாகக் காணப்படுகின்றன. இணைப் பறவைகள் இணைந்தே கூக்குரலிடுவதைக் கேட்கலாம். வண்டுகளும் பூச்சிகளும் முக்கிய உண வாயினும்,சிறு பறவைக் குஞ்சுகள், சுண்டெலிகள், ஓணான்கள் ஆகியவற்றையும் உண்பதுண்டு. நவம் பரிலிருந்து ஏப்ரல் மாதம் வரை இதன் இனப்பெருக் கக் காலம். 3 அல்லது 4 வெண்ணிற முட்டைகளை மரப்பொந்துகளிலும், சுவர் இடுக்குகளிலும், வீட்டுக் கூரைகளிலும் இடுகின்றது. பறவைகளின் வகுப்பில் ஆந்தைகள் அனைத்தும் ஸ்டிரிஜிஃபார்மிஸ் (strigiformes) என்ற வரிசையில் அடங்கும். இதனுள் ஸ்டிரிஜிடே (strigidac) என்ற ஒரே குடும்பமும், அதனுள் டய்க்கானினே (tyko. vinae), ஸ்டிரிஜினே (striginae) ஆகிய உட்குடும் பங்க ளும் உள்ளன. சாக்குருவி ஆந்தைகள் டயக்கானினே உட்குடும்பத்திலும், ஆந்தைகள் ஸ்டிரிஜினே உட் குடும்பத்திலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நூலோதி - Ga.co. 1. Salim Ali & Dillon Ripley, S, Hand Book of the Birds of India & Pakistan, Vol. 3. Bombay Natural History Society, Bombay, 1981. 2.ரத்னம், க.தென்னிந்தியப் பறவைகள், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.