பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் உண்டாதல். ட்டிரிப்பனோசோமா குரூசி தோலில் உண்டாக்கிய சிறு சிராய்ப்புகள் வழியே உடலினுள் நுழையும் போது, வீக்கத்தை ஏற்படுத்து கின்றன. இவை ஆக்கிரமிக்கும் உறுப்புகளெல்லாம் பாதிக்கப்படுகின்றன. இதயம், நீளத்தசை, நரம்பு மண்டலம் போன்றவற்றில் உள்ள திசுக்களை யும் இவை பாதிக்கின்றன. தைராய்டு எனும் நாள மில்லாச் சுரப்பியையும் (endocrine gland) டிரிப்பனோ சோமா குரூசி பாதிக்கக் கூடும். சுரப்பிகளும், அவற் றின் நாளங்களும், உட்பரப்புப் படைத் திசுக்களும் (endothelial reticulum) இவற்றால் பெரிதும் பாதிக் கப்படுகின்றன. டிரிப்பனோசோமா குரூசியின் "ஏமா ஸ்ட்டிகோட்" படிவத்தின் போதுதான் இனப்பெருக் கம் ஏற்படுகிறது. டிரிப்போ மாஸ்ட்டிகோட் நிலை யில் இவை பெருகுவதில்லை. ஆகவே திசுக்களினுள் ளும் செல்களினுள்ளும் ஏமாஸ்ட்டிகோட் படிவத்தில் உள்ள டிரிப்பனோசோமா குரூசி இனப்பெருக்கம் செய்து பெருகும் போது அச்செல்கள் அனைத்தும் உருக்குலைந்து போகின்றன. இப்பெருக்கம் ஒரு வாரம் முதல் இரண்டு வாரக் காலத்திற்குள் நடை பெறுகிறது. செல்கள் சீரழிந்து போவதால் ஏற்படும் நோயே சாகாஸ் நோய்" எனப்படுகிறது. இது "ட்டிரிப்பனோசோமியாசிஸ்" (trypanosomiasis) என்றும் அழைக்கப்படுகிறது. பல் நோய்த் தன்மை. ட்டிரிப்பனோசோமியாசிஸ், குறு கிய கால நோயாகவோ (acute disease) நீடித்த கால நோயாகவோ (chronic disease) இருக்கக் கூடும். குழந்தைகளையும், சிறுவர்களையும் ட்டிரிப்பனோ சோமா குரூசி பாதிக்கும்போது அது பெரும்பாலும் குறுகிய கால நோயாகவே இருக்கும். இந்நோயில் ட்டிரிப்பனோசோமா குரூசி மனித உடலில் நுழைந்த இருவாரகாலத்தில் காய்ச்சல், உடல் அசதி, மின்மை, சோர்வு, விழிப்படல அழற்சி (conjuncti- vities), முகத்தின் ஒரு பாதி வீக்கமடைதல், மண் ணீரல் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன. இவை அனைத்தும் உடலின் பல்வேறு திசுக்களில், பெரும் பாலும், இணைப்புத் திசுக்களில் (connective tissue) ஒட்டுண்ணி பெருகுவதால் ஏற்படும் பாதிப்பே ஆகும். தைராய்டு, அண்டப்பை, அண்ணீரகம் சுரப்பிகளும் இப்பாதிப்பிற்குட்படுகின்றன. இதனால் இச் சுரப்பிகள் செயலற்றுப் போகின்றன. நிணநீர்ச் சுரப்பிகளும், அவற்றின் நாளங்களும், நாளமில்லாச் சுரப்பிகளும் திசுக்களும் அவற்றின் சீரழிந்து போகின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். இதனால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இந் நோய்க்குறிகள் இரு வாரங்களில் உண்டாகிச் சுமார் இரு மாத காலம் வரை நீடிக்கின்றன. இக் காலத்திற்குள் சிகிச்சை யளிக்கப்படாவிட்டால், நோயின் தீவிரம் அதிகரித்து மூளை உறை அழற்சியும் (meningitis), மூளைத்திசு அ.க-2-5 போன்ற அமெரிக்க டடிரிப்பனோசோமியாசிஸ் 65 அழற்சியும் (encephalitis) ஏற்பட்டு மரணம் நேரிடக் கூடும். சில வேளைகளில் இதயத் தசைப் பாதிக்கப் பட்டு மரணம் ஏற்படும். இளம் பருவத்தினரையும் முதியோர்களையும் இந்நோய் பாதிக்கும் போது அது "நீடித்த கால நோயாக" இருக்கும். நீடித்த கால நோயின் போது, இதயத் திசுக்களின் பாதிப்பும், நரம்புத் திசுக்களின் பாதிப்பும் அதிக அளவில் ஏற் படும். சிலரை இந்நோய் 10-12 வருட காலம் வரை நீடித்துப் பாதிப்பதுண்டு. நீடித்த கால நோயின் போது தோலுக்கடியில் சிறு திரட்டுகள் ஏற்படு கின்றன. த் திரட்டுகள் உடலின் எப்பாகத்திலும் காணப்படலாம். ஆனால் ரெடுவிட் உண்ணி, மனி தனைக் கடிக்கும்போது அக் கடிவாயிலில் பெரும் பாலும் பல திரட்டுகள் உண்டாகின்றன. இத் திரட் டுகள் 1 வாரம் முதல் 1 மாத காலத்திற்குள் ஏற்படு கின்றன. பெரும்பான்மையாக "ஹிஸ்ட்டியோசைட்' களும் (histiocytes) ட்டிரிப்பனோசோமா குரூசியும் இத் உள்ளே திரட்டுகளின் காணப்படுகின்றன. இத் திரட்டுகள் "சாகோமாக்கள் (chagomas) எனப்படு கின்றன. ட்டிரிப்பனசோமியாசிஸ் நோய் சில இடங்களில் அனைத்துக் காலங்களிலும் காணப்படும் நோயாக (endemic disease) உள்ளது. இப்பகுதிகளில் பிணி யாளரின் உணவுப் பாதையும், குடற் பகுதிகளும் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. குடலின் தசை களுக்கிடையே உள்ள நரம்புகள், நரம்புத் திசுக்கள். டிரிப்பனோசோமா குரூசியின் பெருக்கத்தால் அழிக்கப் படுகின்றன. இதனால் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடுகிறது. ஆகவே குடல்கள் தளர்ந்து விரிந்து விடுகின்றன. இத்தகைய தளர்ச்சி இதயத்திலும் ஏற்படுகிறது. இதனால் இதயம் வீக்க மடை ந்ததைப் போன்று தளர்ந்து பெரிதாகக் காணப் படுகிறது. டிரிப்பனசோமா குரூசி விழிப்படலத்தின் வழியே நுழைந்து கண்களைப் பாதிப்பதுண்டு. இதனால் கண்ணைச் சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படும். இவ்வீக்கம் குறிப்பாக ஒரு கண்ணில் மட்டுமே உண்டாவதால் இந்நோய்க்குறி "ரோமனா நோய்க்குறி" (romana's sign) என்றழைக்கப்படு கிறது. இரத்தச் சேமிப்பு நிலையங்களுக்காகவோ இரத்த தானத்தின் போதோ "சாகாஸ்' நோயால் பாதிக் கப்பட்டிருப்பவரின் இரத்தம் செலுத்தப்படுமாயின், இந்த இரத்தத்தின் வழியாகவும் இந்நோய் பிறருக்குப் பரவும். கருவுற்றிருக்கும் காலத்தில் தாய் இந் நோயால் பாதிக்கப்படும்போது, தாயின் இரத்தத்தில் டிரிப்பனோசோமா இருக்கும் குரூசி, பிளசண்டா எனும் நஞ்சுக்கொடி மூலம் (placenta) கருப்பையுள் உள்ள குழவியையும் பாதிக்கும் இயல்புடையது. மகப்பேற்றிற்குப் பின்பும், இவ் ஒட்டுண்ணிகள்,