பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரட்சி ஆய்வு (Agglutination Test). இது சோத னைக் கண்ணாடியில் செய்யப்படுகிறது. பிணியாள ரின் குருதி வடிநீருடன், டிரிப்போனோசோமா குரூ சியின் காப்பு மூலத்தைக் காக்கும்போது திரட்சி (agglutination) ஏற்படுமாயின், அது பிணியாளர் டிரிப்பனோசோமா குரூசியால் நோய்வாய்ப்பட்டி ருப்பதைக் குறிக்கும். இந்த ஆய்வு 1943 ஆம் ஆண்டு செனிக்ஜி (Senekjie) என்பவரால் அறிமுகப்படுத்தப் பட்டது. மேல் தோல் ஆய்வு (Skin Test). வளர்ப்பு ஊட கத்தில் வளர்க்கப்பட்ட டிரிப்பனோசோமா குரூசி யின் காப்பு மூலம் சுமார் 0.1CC, நோய்க் கணிப் பிற்கானவரின் மேல்தோலினுள் (Intradermally) செலுத்தப்படுகிறது. சுமார் 30 நிமிடங்களில், காப்பு மூலம் செலுத்தப்பட்ட இடத்தில் செந்நிறத் தடிப் புச் சூழ்ந்த சிறு கொப்புளம் ஏற்படுமாயின் அது பிணியாளர் டிரிப்பனோசோமியாசிஸ் நோயுற்றிருப் பதைக் குறிக்கும். இந்த ஆய்வு 1941 ஆம் ஆண்டு மேயர், சிஃபானா(Mayer & Cifana) என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை முறை. அமினோ குயினோலின் (amino guinoline) வகையைச் சேர்ந்த மருந்துகள் நோய்ச் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன. இம் மருந்து பேயர் 7602 AC (Bayer 7602 AC) என்றழைக்கப்படுகி றது. இம் மருந்து 3% தசை ஊசியாகச் செலுத்தப் படுகிறது. பிணியாளரின் உடல் எடையில் 22.2 மி. கிராம்/ கிலோகிராம் என்ற அளவில் இம் மருந்து தேவைப்படுகிறது. இது 5 ஊசிகளாக ஒரு நாள் வீட்டு ஒரு நாள் செலுத்தப்படல் வேண்டும். மூளை உறை அழற்சியிருப்பின் பேயர் 9736 (As) எனும் மருந்து நல்ல பலனளிக்கிறது. இது சுமார் 20% ஆர் சனிக்கும் (arsenic) 5% கந்தகமும் (sulphur) கலந் தது. இம் மருந்து வாரத்தில் 2 அல்லது மூன்று முறை 50 மி.லி. அல்லது 5 கிராம் அளவில் சிரை நாளங்களினுள் செலுத்தப்படவேண்டும். நைட்டிரோஃபியூரசான் (nitrofurazone) மாத்தி ரைகள் மூலம் ட்டிரிப்பனசோமியாசிஸ் நோய் அறவே குணமாக்கப்படுகிறது என்று 1963 ஆம் 1963 ஆம் ஆண்டு மெல்சர், கோலர்ட் (Melzer and Kollert) என்பவர் களால் ஆராய்ந்து அறிவிக்கப்பட்டது. இம் மாத் திரை சுமார் 18.375 கிராம் அளவு, 27 நாள்களுக் குப் பிரித்துக் கொடுக்கப்படுதல் வேண்டும். இத னால் மிகச் சிறந்த பலன் உண்டு. நோய்த் தடுப்பு முறைகள். ட்டிரிப்பனோசோமி யாசிஸ் நோய் பரவக் காரணமாயிருக்கும் ரெடுவிட் உண்ணிகளை அழிப்பது தடுப்பு முறைகளில் ஒன் றாகும். கொசுவலை போன்றவற்றை உபயோகிப்ப தனால் இவை மனிதரைக் கடிப்பதைத் தடுக்கலாம். 5 2 அமெரீசியம் 67 ரெடுவிட் உண்ணிகளைப் பூச்சக கொல்லிகளைத் தெளித்தும் அழிக்கலாம். டிரிப்னோசோமியாசிஸ் நோய்த் தடுப்பிற்கான மருந்துகள் இன்னும் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் இதற்கான தடுப்பு மருந்து மிக விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது. நூலோதி இ.பி. 1. Chatterjee K, D. Human Parasites and Parasitic Diseases for Students, Laboratory Workers of Medicine and Public health. (1952). 2. Hoare C. A. The Trypanosomes of Mammals, Oxford: Blackwell Scientific Publications. (1972). 3. Lumsden W. H. P. Herbert, W. J. & Mc Neillage G. J. C. Techniques with Trypanosomes, Edin - burgh, U. K.Churchill Livingstone. (1973). 4. Senekj: H. A Immunologic Studies in Experi- mental Trypanosoma Cruzi Infections: 2. Slide Agglutination and Intradermal Tests. Proe. Soc. Exper. Biol. & Med, 52, 56-59.(1943). அமெரீசியம் அமெரீசியம், ஆக்டினைடு (actinide) தொகுதியில் உள்ள ஒரு கதிரியக்கத் தனிமமாகும். இதன் குறியீடு Am; அணு எண் 95; அணு எடை 243. இதனுடைய அனைத்து ஐசோட்டோப்புகளும் (isotopes) கதிரியக் கத் தன்மை கொண்டவை. கி.பி. 1944 ஆம் ஆண்டு முன்புவரை தனிம வரிசை அட்டவணையில் கனமான தனிமங்களின் இடம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. எனவே தோரி யம் (thorium), புரோட்டாக்டினியம் (protactinium) யுரேனியம் (uranium) ஆகிய கனமான தனிமங்க ளெல்லாம் தனிமவரிசை அட்டவணையில் ஹாஃப்னி யம் (hafnium), டேண்டலம் (tantalum), டங்ஸ்ஃட்டன் (tungsten) ஆகிய தனிமங்களின் கீழ் வைக்கப்பட்டன. 1944 இல் ஆக்டினைடு தனிமங்களுக்கும், லாந்தனைடு தனிமங்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை கண்ட றியப்பட்டது. இவ்விரண்டு தொகுதிகளில் உள்ள தனிமங்களின் காந்தப் பண்புகளும், ஒளியியல் பண்பு களும் ஒன்றாக இருந்தன. லாந்தனைடு தொகுதி யில் லாந்தனம் (lanthanum) முதலாக லுட்டீசியம் (lutetium) ஈறாக 15 தனிமங்கள் உள்ளது போல்